புதன், ஏப்ரல் 1

துபாய்



 












வாழ இயலாத
வரண்ட பாலைவனம்
வாரி வழங்கிய - எரி
வாயு எண்ணெய்யால்

பூலோக சொர்கமென
புதிய புராணத்தை
பூஜிக்கத் தொடங்கையில்
பூகம்பம் நிகழ்ந்தது

பன்னாட்டு பணக்காரர்கள்
பாம் ஜுமைராக்களில்
புர்ஜ் கலிபாக்களில்
புரண்டு கொள்ள

தங்கத்தில் குடியரிமை
தந்த மன்னர்
தப்பித்து அமெரிக்காவில் ....
தன்னையே காத்துக் கொள்ள

குருஷேத்திரப் போரில்
கௌரவம் என
பஹரைனோடு துபாயும்
அமெரிக்காவை ஆதரிக்க

ஏவுகணைகள், ட்ரோன்களை
எதிர்கொள்ள இயலாத
அமீரகத்தை
அம்போவென விட்டுவிட்டு

தங்க குடியுரிமை
தகரமாய் கூட
தரத்தில் இல்லையென
பறந்து விட்டனர் அப்பாவிகள்

ஆம், அறுபது சதவீத
அந்த நாடோடிகள்
ஆயுசு முக்கியமென
அடுத்த சொர்க்கத்தை தேடிட

பன்னாட்டு வர்த்தகத்தின்
வணிகத் திருவிழாக்கள்
இணையில்லை என்றவர்கள்
எங்கோ மறைந்தனர்

வெறிச்சோடிய சாலைகள்
விமான நிலையங்கள்
ஒருவருமற்ற
உயரமான கட்டிடங்கள்

அனாதையாய்
ஆங்காங்கே நிற்கும்
உயர்விலை கார்கள்
செல்லப் பிராணிகள்

காரணி யாதென்று
மேதினி அறிந்தாலும்
மேட்டிமை கொண்ட
மேற்குலகம் நீட்டிக்கும் போரை

அரசு இயந்திரங்கள்
உம்மென்றோ
ஆம்மென்றோ
உருப்படியாய் ஏதும் செய்யாது

மானுடத்தை காக்க
மக்கள் நாமே
போரை எதிர்த்து
போராடுவோம் வாருங்கள்


அ. வேல்முருகன்

துபாய்

  வாழ இயலாத வரண்ட பாலைவனம் வாரி வழங்கிய - எரி வாயு எண்ணெய்யால் பூலோக சொர்கமென புதிய புராணத்தை பூஜிக்கத் தொடங்கையில் பூகம்பம் நிகழ்ந்தது பன...