திங்கள், அக்டோபர் 12

முத்தங்கள் - மூச்சடக்கவா?

 









முத்தங்கள் - மூச்சடக்கி
மோகனம் படிப்பதோ?
ரத்தங்கள் சூடேறி
ரசவாதம் நிகழ்த்துவதோ?

ஒத்திருந்து பொழிந்தே
ஒருமனப்படுவதோ?
பித்தம் தெளிவது
பிரிவினில் என்றாவதோ?

சித்திரத்தைக் கண்டவுடன்
சித்தம் கலங்கியே
நித்தம் வேண்டிடும்
நிலைதனைக் கொண்டதோ?

தித்திப்புப் பண்டமாய்த்
தினம்தினம் கிடைத்திட
யுத்தகள உத்திகளா?
யூகங்கள் வகுப்பதோ?

பத்தன், பாமரன்
பந்தத்தில் விழுந்திட
சத்தமின்றி முத்திரை
சாகசமாய் அளிப்பதோ?

கொத்தும் கிளிக்குக்
கொடுத்துச் சிவக்க
அத்துப்படியாக
அவளும் ஒத்துழைக்க

தனித்ததுவம் என்றே
தந்தவை போதாதென
தத்தையின் வித்தைகள்
“தா... தா...” என்றோதிட

மொய்க்கும் வண்டாகி

மொத்தமாய் கொடுத்திட
மெய் சிலிர்த்தாளே - யானோ
மெய் மறந்தேனே

 

மெய் மறந்த
அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

முத்தங்கள் - மூச்சடக்கவா?

  முத்தங்கள் - மூச்சடக்கி மோகனம் படிப்பதோ? ரத்தங்கள் சூடேறி ரசவாதம் நிகழ்த்துவதோ? ஒத்திருந்து பொழிந்தே ஒருமனப்படுவதோ? பித்தம் தெளிவது...