சனி, அக்டோபர் 31

நோய்

 



 








அன்றன்று
அவன் முகங்காண
ஆயிரம் ஆனந்தங்கள்! 

அவன் முகங்காணா
அத்தனை நாட்களும்
மழை பொழியா கருமேகங்கள்!

நாளையும் வருவான்
நாளெல்லாம் கதைப்பான்
நகர்ந்துவிட்டால் தாகங்கள்!

வெறுமை சூழ்ந்து
விழியிமைக்க மறந்து
விடிந்ததும் ஏக்கங்கள்!

என்றென்றும் உன்னோடு
எந்நிலையிலும் பிரியாது
என் நோய் போக்குங்கள்!

 

அ. வேல்முருகன்

 

செவ்வாய், அக்டோபர் 27

பொங்கும் மனம்


 


 

 

 







மனங்கவர் கள்வன்

மாலையில் வருவான்
கனவுலகம் படைத்து
களிப்புறச் செய்வான்

நாட்கள் செல்ல
நாநிலம் அறிந்தது
நாட்டம் குறைந்ததோ?
நனவெனை வாட்டியது

சூட்டுமாலை வேண்டினேன்
சூழல்பல உரைத்தான்
வாட்டும் கேள்விகளால்
வதைக்க நினைத்தேன்

வரட்டும் வடிவழகன்
வாள்வீச்சு வார்த்தைகளால்
புரட்டிப் போட்டு
புலவிட எண்ணினேன்

ஒளிரும் கண்களில்
உருவான புன்னகையில்
“தளிரே!” என்றழைத்தான்
தன்னிலை மறந்தேன்

என்மனம் என்னை
ஏமாற்றிச் சென்றாலும்
பொன்னன் அருகாமையில்
பொங்கியது மனமே!


அ, வேல்முருகன்

 


திங்கள், அக்டோபர் 12

முத்தங்கள் - மூச்சடக்கவா?

 









முத்தங்கள் - மூச்சடக்கி
மோகனம் படிப்பதோ?
ரத்தங்கள் சூடேறி
ரசவாதம் நிகழ்த்துவதோ?

ஒத்திருந்து பொழிந்தே
ஒருமனப்படுவதோ?
பித்தம் தெளிவது
பிரிவினில் என்றாவதோ?

சித்திரத்தைக் கண்டவுடன்
சித்தம் கலங்கியே
நித்தம் வேண்டிடும்
நிலைதனைக் கொண்டதோ?

தித்திப்புப் பண்டமாய்த்
தினம்தினம் கிடைத்திட
யுத்தகள உத்திகளா?
யூகங்கள் வகுப்பதோ?

பத்தன், பாமரன்
பந்தத்தில் விழுந்திட
சத்தமின்றி முத்திரை
சாகசமாய் அளிப்பதோ?

கொத்தும் கிளிக்குக்
கொடுத்துச் சிவக்க
அத்துப்படியாக
அவளும் ஒத்துழைக்க

தனித்ததுவம் என்றே
தந்தவை போதாதென
தத்தையின் வித்தைகள்
“தா... தா...” என்றோதிட

மொய்க்கும் வண்டாகி

மொத்தமாய் கொடுத்திட
மெய் சிலிர்த்தாளே - யானோ
மெய் மறந்தேனே

 

மெய் மறந்த
அ. வேல்முருகன்

ஓட்டுத் திருட்டு
















யாரும்
யாரையும்
காட்டிக் கொடுக்காத
சனநாயகத்தில்

தன்னாட்சி நிறுவனங்கள்
கால் நக்கிப் பிழைத்திட
காக்கிச் சட்டைகள்
கலவரங்களைத் தூண்டுது

நீதியை மறுத்து
சேவைகளை முடக்கி
மக்களைத் தாக்கிட
மகேசன் உத்தரவு

திருடர்களுக்கு எதிராக
தேவதைகள் தெருவில் இறங்கியும்
உச்ச நீதிமன்றம்
உணர்வற்றுப் போனது

குடியாட்சியில்
குரல்வளையை நெறிப்பவர்கள்
தடியடிக்கு
தராதரம் பார்ப்பதில்லை

அஞ்சி நடுங்கி
ஆங்காங்கே தடுப்புகள்
மிஞ்சிடும் கூட்டத்தில்
கண்ணீர்ப் புகைக் குண்டுகள்

மண்ணையும் மனிதத்தையும்
நேசிப்பவர்களை
நகர்ப்புற நக்சல்கள் என்றே
மண்டை உடைப்பாம்

சட்டங்களை மதிக்காத
சர்வாதிகாரிக்கும்
சலாம் போடுபவர்களுக்கும்
இசட் வகைப் பாதுகாப்பாம்

ஓட்டளிக்கும் கடமையை
உனக்களித்த சட்டம்
கட்சிமாறும் உரிமையை
கயவாளிகளுக்குக் கொடுத்ததேன்?

சனநாயகத்தின் கேலிக்கூத்து
எண்ணிக்கையில் இருப்பதால்
பிணங்கள் உலாவரும்
பிரமாத உலகமிது

வீடு வீடாகப் பொறுக்கியதை
விலை பேசும் விற்பன்னர்கள்
வெட்கங்கெட்டவர்கள்
வேசிக்கும் கீழானவர்கள்

மக்கள் நலன் என்பது
வரிக்கு மேல் வரி விதிப்பதா?
கோரிக்கையோடு கொடிபிடிக்க
குண்டாந்தடி பரிசளிப்பதா?

கூடுதல் வரிவசூலில்
கொஞ்சம் இலவசமளித்து
நெருடலின்றி விலையேற்றத்தை
வேடிக்கை பார்ப்பதா?

உண்ணவும், உடுக்கவும்
கற்கவும், உழைக்கவும்
கவலை மறந்து உறங்கவும்
வழங்குவதன்றோ சேவை!

இயற்கை வளங்களைக்
கொள்ளையடிக்கவும்
அரசு நிறுவனங்களை
அடிமாட்டு விலைக்கு விற்கவும்

ஆட்சி நிர்வாகமெனில்
ஆம் என்பாயோ?
அறமல்ல என்று
ஆர்ப்பரித்து எழுவாயா?


அ. வேல்முருகன்

வந்தேறிகளின் நாட்டில்

வந்தேறிகளின் நாட்டில் வந்ததொரு தேர்தல் வாக்கு சேகரிக்க வரிந்து கட்டின கட்சிகள் பாரதத்தில் பார்க்காததையா பலமிழந்த அமெரிக்காவின் பாராளுமன்றத்...