ஞாயிறு, நவம்பர் 18

பெல்ஜியம் கண்ணாடி


கிரேக்கத்தின் பேரழகியாய்
இங்கிலாந்து ராணியாய்
என்தேவி நீயாகிட

சீனப்பட்டு வாங்கினேன்
சித்திரமாய்
சிங்காரமாய் தெரிய

ஆப்பிரிக்க வைரத்தை
ஆரணங்கே நீயணிய
அத்தானும் மயங்குவேனே

இத்தாலி காலணியில்
இன்னும் ஒய்யாரமாவாய்
என்னினிய பொன்மணியே

அத்தரும் ஜவ்வாதும் 
மருதாணியும் வெண்ணையும்
கற்கால அழகடி 

தற்கால தேவதையே  - நீ
தரிக்க அமெரிக்காவின்
“டாமி கேர்ல்” வாங்கினேன்

உதட்டுச்சாயமும் நகப்பூச்சும் 
உனதழகை கூட்ட
ரெவ்லானில் வாங்கினேன்

பிக்காசோவும் ரவிவர்மனும்
பேரழகை கண்டு
பித்தத்தில் கலங்குவரடி 

உன்னழகை ஓவியமாய்
உலகே வியக்கும்படி 
எம்.எப் ஹுசேன் படைப்பானடி

ஊரெல்லாம் சுற்றினாலும்
ஊட்டி ரோஜா, ஜாதிமல்லி
உனக்கென வாங்கினேன்

ஆகா
அத்தனையும் வாங்கினேன்
அத்தை மகளே - ஆனால்

பலமணி செலவிட்டு
பலமுறை சரிசெய்து
பக்குவமாய் வைத்திட

பேரழகே
பெல்ஜியம் கண்ணாடி
கிடைக்கலியே - என்ன செய்ய

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எத்தனை பொருட்கள் தேவைப்படுகிறது...!

கண்ணாடியாய் நீங்கள் இருக்க...
பெல்ஜியம் கண்ணாடி எதற்கு...?

அசத்திட்டீங்க... ரசித்தேன்...

சசிகலா சொன்னது…

ஊரெல்லாம் சுற்றினாலும்
உள்ளூர் ஜாதிமல்லி
ஊட்டி ரோஜா
உனக்கென வாங்கினேன்..

அடடா தேடித்தேடி அல்லவா வாங்கி இருக்கிங்க. அழகு அழகு.

Unknown சொன்னது…

சரியாக சொன்னீர்கள்

srinivasan சொன்னது…

கடைசியில் கிடைக்கவில்லை என்று முடித்து விட்டீர்களே !

அ. வேல்முருகன் சொன்னது…

நகைச்சுவை தலைப்பில்தான் இதை எழுதியுள்ளேன். ஒரு பெண்ணிடம் இத்தனையும் வாங்கி கொடுத்து விட்டு. கண்ணாடி கொடுக்காமல் விடுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள்

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...