திங்கள், மார்ச் 21

கனவா?......... பேராசையா?........





மணமுடித்த மங்கையான்
        மனதில் கொண்டது ஆசையா
கனவாகும் காரணத்தால்
       கணக்குப் படியவை பேராசை
என்னவென கேள்வியால்
       ஏறிட்டு நோக்கும் விழிகளே
கணக்கிடும் தோல்வியால்
       கவலை தீரவும் வழியில்லை

கணவனுடன் கைக்கோர்த்து
        காலாற நடந்து மாலை
மணக்கும் மல்லிகை
         மரிக்கொழுந்துச் சூடி நல்ல
வண்ணத் திரைப்படம்
       வரும்வழியில் நல்உண வோடு
மென்பனிக் கூழருந்தி
        மஞ்சத்தில் மகிழ கனவு

வாக்கப்பட்ட மனுசனுக்கு
        வடித்துக் கொட்டி வசவுவாங்க
ஏக்கப்பட்ட மனதுக்குள்
        ஏகப்பட்டக் காயங்கள் உருவாக
ஆக்கப்பட்டக் கனவுகள்
       ஆப்பறைந்து யாவும் சருகாக
தாக்கப்பட்ட உணர்வுகள்
       தென்றலாய் மீண்டும் வருமோ

உள்ளக் கொதிப்பை
        உறவிடத்தில் சொல்லிக் கலங்கிட
தள்ளியது குழியென்று
       தானும் சேர்ந்து மருகிட
சொல்லியக் கனவுகளை
       சொந்தம் ஒருநாள் செய்திட்டு
மெல்லக் கூறியது
       மகளே இப்போது மகிழ்ச்சியா

இணையோ இதமோ
        இவர்கள் செய்வது எனக்கு
துணைதான் என்றாலும்
         துணையிணைப் போல வருமா
தொலைந்தது கிடைக்குமா
        துவளும் உள்ளத்தின் ஏக்கவினா
வலையில் விழுந்தபின்
        வாழ்க்கையை நினைப்பது வண்ணகனா

கருத்துகள் இல்லை:

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...