நாட்டில் எல்லா முதலாளிகளும் சொந்த காசில் நிறுவனம் ஆரம்பித்து நட்டப்பட்டு தலையில் துண்டு போட்டு கொண்டனர் என நம்பும் மக்களுக்காக
மேலே உள்ள பட்டியல் கிங் பிஷ்ஷர் நிறுவனம் பல்வேறு சமயங்களில் பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு தான் கடன் பெற்றுக் கொண்டதற்கான பத்திரத்தை நிறுவனங்களின் பதிவாளரிடம் சமர்பித்தவை.
பொதுமக்கள் யாரும் இத்தகவலை www.mca.gov.in என்ற தளத்தில் சென்று தன் பெயரை பதிவு செய்து இத்தகவலை தெரிந்துக் கொள்ளலாம்.
சற்றேறக்குறைய ரூ.10000 கோடி கடன் பெற்றுள்ளது அந்நிறுவனம். அதற்கு சில காலம் வட்டி செலுத்தியுள்ளது. சிலகாலம் வட்டி செலுத்தவில்லை. தற்போது அசலே கேள்விக்குறி
யாருடைய பணம் இந்த ரூ.10000 கோடி, வங்கிகளில் பொதுமக்கள் இட்ட வைப்பு தொகைகள். பாரத ஸ்டேட் வங்கி ரூ.1200 கோடி, அதன் இன்னொரு பிரிவு ரூ,5000 கோடி பாருங்கள் எத்தனை நிறுவனங்களிடம் கடன்.
வீடு வாங்கினால் பறிமுதல், டிராக்டர் வாங்கினால் பறிமுதல், தனிநபர் கடன் வாங்கினால் வீடு தேடி ஆள் வருகிறார்கள்.
ஆனால் மல்லையா பிரதம மந்திரியை சந்தித்து தள்ளுபடி செய், கடன்களை மாற்றி அமை, மேலும் கடன் கொடு என சொல்கிறார்.
யாருடைய ஆட்சி மக்களே, சிந்தியுங்கள்
ராகுல் பஜாஜ் சொல்லி விட்டார் மல்லையா சாகட்டும் என்று, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

8 கருத்துகள்:
இது போன்று எல்லா தனியார் நிறுவனங்களும் இறங்கிவிட்டால் நாடு அமெரிக்கா போல் படுத்துவிடும். இது இந்தியாவின் சாபக்கேடு போலும், இளைதவனுக்கு இரு நீதி வலுத்தவனுக்கு ஒரு நீதி என்பது. ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, ஆளும் எந்த அரசும் மக்களைப்பற்றி கவலை பட்டதாக தெரியவில்லை. இது போன்ற தனியார் நிறுவன முதலாளிகளுக்கு மட்டுமே உதவுகிறார்கள். நமக்கெல்லாம் கஷ்ட காலம் தான்
மாப்ள நடப்பது முதலாளித்துவ ஆட்சி...இதெல்லாம் சர்வ சாதாரணம்...ஹிஹி!
எப்பிடியும் காங்கிரஸ் மல்லையாவுக்கு சாதகமாகத்தான் நடந்து கொள்ளும் சந்தேகமே இல்லை...!!!
ஆ. இவ்வளவு கடனும் பொதுமக்கள் தலையிலா..
மிகவும் கண்டணத்திற்குரிய கோரிக்கை! ஐ.பி.எல் ல் இருக்கும் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பங்கை விற்று கடனை அடைக்கட்டும்!பத்தாயிரம் ரூபாய் கடனுக்கு மக்கள் படும்பாடு இந்த மதிகெட்ட அரசியல்வாதிகளுக்கு எப்படி புரியும்!
விக்கி சொல்வது போல் சர்வ சாதரணம்தான் ஆனால் நமது கண்டணங்களும், எதிர்ப்பும் மல்லையாவை மாற்றி சிந்திக்க வைத்துத்துள்ளது அல்லது பேச வைத்திருக்கிறது. ஆம் இன்று சொல்லியுள்ளார். தான் பொது மக்களின் பணத்தை ஏமாற்ற விரும்பவில்லையென.
மனோ அவர்களுக்கு காங்கிரஸ் மட்டுமல்ல எந்த அரசும் முதலாளிகளுக்கு சாதகமாகத்தான் நடந்து கொள்ளும்
தேனம்மை இது மட்டுமல்ல இது போன்ற முதலாளிகளின் கடன் எல்லாம் பொது மக்கள் தலையில்தான். அமெரிக்க என்ரான் IDBI வங்கியை ஏமாற்றியது 7000 கோடி.
பாண்டியன் முதலாளிகளுக்கு அடுத்தவன் பணத்தை செலவு செய்தே பழக்கம். தன் பணம் தனிபணம்.
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி
"Trade on others money" = Business Man.
வங்கியில் ஆயிரம் ரூபாயை காசாளர் தனது அவசர செலவிற்காக எடுத்துச்சென்று மறுநாள் அதை கண்க்கில் கொண்டு வந்தாலே இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம். இங்கே மல்லையா செய்வதை பார்த்தால் அவரது நிறுவன விளம்பரம் தான் ஞாபகம் வருகிறது. ஊ ல லா ல லா for மல்லயா ஊஊஊஊஊஊஊஊஊஊஊ for சட்டத்தை மதிக்கும் சாதாரண மனிதனுக்கு.
கருத்துரையிடுக