முதலாளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலாளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 30

அண்ணன் - தம்பி- கடன்


கடந்த இரண்டு நாட்களாக, வியாபார காரணங்களுக்காக பிரிந்த அண்ணன் தம்பிகள், குடும்ப நிகழ்ச்சிக்காக ஒன்று சேர்ந்தனர். எந்த செய்தி தாளை எடுத்தாலும் இது முன்பக்க செய்தியாக இருந்தது.  ஆம் திருபாய் அம்பானியின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் பிறந்த கிராமத்தில் குடும்பமாக சந்தித்துக் கொண்டனர் முகேஷ், அனில் மற்றும் அவர்களின் தாயார் மற்றும் சகோதிரிகள்

மேலே உள்ள பட்டியல் அண்ணன் பொது துறை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடன்.  இது சுமார் ரூ.7000 கோடி என பட்டியல் சொல்கிறது.

எல்.ஐ.சி, ஜி.ஐ.சி போன்ற நிறுவனங்கள் பங்கு முதலீடாக செலுத்திய தொகை இதில் இல்லை.  இது தவிர எண்ணற்ற பொதுமக்கள் சிறுதொகையாக பங்கில் முதலீடு செய்துள்ளனர்.

இப்படி அடுத்தவர் பணத்தில் சாம்ராஜ்யம் நடத்து சாமர்த்தியம் யாருக்கு வரும்.  அரசு அதற்கு துணை நிற்கிறது.

மேற்கண்டது அண்ணனின் கதை மட்டுமே.  தம்பியின் கதை தனிக் கதை.

செவ்வாய், டிசம்பர் 6

பொது மக்களே உங்களுக்காக அம்பானி மன்னிக்கப்படுகிறார்

நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர் அம்பானி, அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.  அதை முன்னிட்டு Reliance Industries Limited எனும் நிறுவனத்தின் மீது எடுக்கப்படவிருந்த சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்கிறது.

காரணம்

வழக்குகளால் கால விரயம் ஏற்படும், மேலும் நீண்ட நாட்கள் இதற்கு ஏற்படும். மேலும் முதலீட்டாளர்கள் பாதிக்கபடுவார்கள்.  ஆம் எந்தவொரு வழக்கும் மேற்படி நிறுவனத்தின் சந்தை மதிப்பை பாதிக்கும்.  அப்பாதிப்பு சிறு முதலீட்டார்களான பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள்.  ஆம் அவர்கள் ரிலையன்ஸில் முதலீடு செய்த பணம் காணாமல் போய் விடும்.  எனவே நடவடிக்கை கைவிடப்பட்டு வேறு நிவாரணங்கள் பரிசீலிக்கப்படுகிறது.


எதற்காக

கோதவரி படுகையில் அதாவது KG-D6 என்னுமிடத்தில் குறிப்பிட்ட அளவு இயற்கை எரிவாயு எடுத்து விற்பனை செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்திற்அரசு அனுமதி வழங்கியுள்ளது.  ஆனால் அந் நிறுவனம் அவ்வாறு நடந்து கொள்ள வில்லை.  குறைவாகவே உற்பத்தி செய்து நட்ட கணக்கு எழுதியுள்ளது.    இதனால் ஏற்பட்ட நட்டதிற்கு அபராதத் தொகை வசூலிக்க கடிதம் அனுப்பபடுகிறது.  அதற்கு பதில் அளித்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடிதத்தால் நடவடிக்கைகள் நிறுத்தப்படுகின்றன.


இதே விஷயம் தொடர்பாக அண்ணன் தம்பிகள் இருவரும் சண்டையிட்டு கொள்ள உச்ச நீதி மற்றம் தலையிட்டு தீர்த்து வைத்தது ஞாபகம் இருக்கலாம்.  


இந்த திட்டத்திற்கு  ஏற்கனவே ஏறக்குறைய ரூ.9000 கோடி செலவிட்டுள்ளதாக கணக்கெழுதி வைத்துள்ளது ரிலையன்ஸ்.   2 மில்லியன் வாயு எடுக்க வேண்டிய இடத்தில் 1 மில்லியன்தான் எடுக்கிறார்கள்.  ஆனால் செலவு..............


2000 ஆம் ஆண்டில் லைசென்சு பெற்ற ரிலையன்ஸ் இன்னும் லாபம் எதுவும் அரசு செலுத்தவில்லை.   அரசு இன்றுதான் நட்ட கணக்கு பார்க்க ஆரம்பித்திருக்கிறது.  ஏன் தெரியுமா கள்ள கணக்கு.  முதலீட்டில் ஒரு பகுதி எடுக்கும் வரை அரசுக்கு எவ்வித லாபத் தொகையும் செலுத்த தேவையில்லை என்பது ஒரு விதி.


இந்த துரப்பன பணிக்காக பல்வேறு சலுகைகள் பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இப்போதும் சலுகை பெற்றுள்ளது


ஆம் மக்களே உங்கள் பெயரால்

ரூ.14 இலட்சம் கோடி- 22500 முதலாளிகள்

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நம் முதலாளிகள் ரூ.10 கோடி அதற்கு மேல் வாங்கிய கடன் 14 இலட்சம் கோடியாம்.  வாங்கியவர்களின் எண்ணிக்கை 22500.

ரூ.10 கோடி அதற்கு மேல் கடன் வாங்கிய 700 பேர், ஏறக்குறைய ரூ. 26000 கோடி கட்டாமல் எவ்வித தொல்லையுமில்லாமல் அதாவது வழக்குகள் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் 3400 வழக்குகள் ரூபாய் ஓரு கோடி அதற்கு மேல் பெற்ற கடனுக்காக கடன் வசூல் தீர்பாயத்தில் நிலுவையில் உள்ளது.   இதன் மூலம் வர வேண்டிய தொகை ரூ.21,400 கோடி.

கடன் வாங்கி ஏமாற்றிய முதலாளிகள் அத்தோடு விடுவதில்லை, வேறொரு நிறுவனம், வேறொரு வங்கி என எமாற்றிக் கொண்டுதான் இருகின்றனர்.

 CIBIL: Credit Information Bureau (India) Limited என்ற நிறுவனம் இவர்களை பற்றி தகவலை சேகரித்து வைக்கிறது.  இத்தகவலை பாதிக்கப்பட்ட வங்கி அளித்தால்தான் இதன் தகவல் பெட்டகத்தில் பார்க்க முடியும்.  ஆனால் எல்லா வங்கிகளும் அவ்வாறு செய்வதில்லை.  அதுவும் ஆளுக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்கின்றன.

அரசியல் பின்புலம்,  பணம், ரவுடியிசம் இவைகள் வங்கி அதிகாரிகளை கட்டி போட வைக்கின்றன.  ஒன்று அவர்களுக்கு சதகமாக நடக்க வைக்கிறது அல்லது அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகிறது.

வங்கியின் கடன் 1993 வரை பொது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.  1993 க்கு பிறகு கடன் வசூல் தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.  வங்கிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கடனுறுதி மற்றும் மறுசீரமைப்பு சட்டம் 2002 (SARFAESI ACT 2002)  இயற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயினும் முதலாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர்.

ரூபாய் ஒரு கோடிக்கு மேற்பட்ட கடனில் ஏதேனும் தவறுகள், குற்றங்கள் நடைப்பெற்றால் சி.பி.ஐ க்கு அதன் விவரம் அனுப்பி வைக்கப்படும்.  அதன் பிறகு வங்கி அதிகாரிகள் மறந்து விடுவார்கள்.  அவர்களை பொறுத்தவரை அது சிபிஐ விவகாரம்.  முதலாளிக்கு ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ விசாரணை. கைது கண்டிப்பாக இருக்காது.  ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் பணம் வசூலிக்க வழியில்லை.

குற்றவியல் நடவடிக்கை,(criminal action)  வங்கியால் எல்லா கணக்குகளிலும் நடைபெறுவதில்லை.   அவ்வாறு மேற்கொண்டால் வங்கி அதிகாரிகளின் செயல்பாடு தடைபடும்.  அதாவது அவர்கள் கடன் வழங்கும் போது அளவுக்கு அதிகமான கேள்விகள், ஆதாரங்கள் கேட்டு கடன் வழங்குவதை நிறுத்தி விடுவார்கள்.   ஏனெனில் பின்னால் அவர்கள் பாதிக்கப்படலாம் என்பதால்.

அதனால் முதலாளிகள் தீர்மானிக்கின்றனர் கடனை திருப்பி செலுத்தலாமா வேண்டாமா? எவ்வளவு செலுத்த வேண்டும்.  தள்ளுபடி எவ்வளவு கோரலாம்?  மத்திய வங்கியின் வழிகாட்டுதல் என்ன?

எல்லாம் அறிந்தவர்கள் அவர்கள்.  நாம் வீட்டுக் கடன், கல்வி கடன், விவசாய கடன், தனிநபர் கடன் வாங்கி வீட்டை, விவசாய நிலத்தை இழந்து நிற்கும் அப்பாவிகள்

யார் நல்லவர்கள், எல்லாம் இழந்து அப்பாவியான நாமா, எதையும் இழக்காமல் பொது மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்ட முதலாளிகளா

திங்கள், நவம்பர் 14

மல்லையாவும் கிங் பிஷ்ஷர் நிறுவனமும்

நாட்டில் எல்லா முதலாளிகளும் சொந்த காசில் நிறுவனம் ஆரம்பித்து நட்டப்பட்டு தலையில் துண்டு போட்டு கொண்டனர் என நம்பும் மக்களுக்காக

மேலே உள்ள பட்டியல் கிங் பிஷ்ஷர் நிறுவனம் பல்வேறு சமயங்களில் பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு தான் கடன் பெற்றுக் கொண்டதற்கான பத்திரத்தை நிறுவனங்களின் பதிவாளரிடம் சமர்பித்தவை.


பொதுமக்கள் யாரும் இத்தகவலை www.mca.gov.in  என்ற தளத்தில் சென்று தன் பெயரை பதிவு செய்து இத்தகவலை தெரிந்துக் கொள்ளலாம்.


சற்றேறக்குறைய ரூ.10000 கோடி கடன் பெற்றுள்ளது அந்நிறுவனம்.  அதற்கு சில காலம் வட்டி செலுத்தியுள்ளது.  சிலகாலம் வட்டி செலுத்தவில்லை. தற்போது அசலே கேள்விக்குறி


யாருடைய பணம் இந்த ரூ.10000 கோடி,  வங்கிகளில் பொதுமக்கள் இட்ட வைப்பு தொகைகள்.  பாரத ஸ்டேட் வங்கி ரூ.1200 கோடி, அதன் இன்னொரு பிரிவு ரூ,5000 கோடி பாருங்கள் எத்தனை நிறுவனங்களிடம் கடன்.


வீடு வாங்கினால் பறிமுதல், டிராக்டர் வாங்கினால் பறிமுதல், தனிநபர் கடன் வாங்கினால் வீடு தேடி ஆள் வருகிறார்கள்.


ஆனால் மல்லையா பிரதம மந்திரியை சந்தித்து தள்ளுபடி செய், கடன்களை மாற்றி அமை, மேலும் கடன் கொடு என சொல்கிறார்.


யாருடைய ஆட்சி மக்களே, சிந்தியுங்கள்

ராகுல் பஜாஜ் சொல்லி விட்டார் மல்லையா சாகட்டும் என்று, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...