மெட்ராஸ் உயர் நீதி மன்றம், தன்னிச்சையாக எடுத்து கொண்ட ஒரு வழக்கில், ஒரு மாணவன் இருமுறைக்கு மேல் படியில் பயணம் செய்தால் அவன் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவரின் பெற்றொருக்க தகவல் தெரிவித்து விட்டு, விளக்கம் கோரி, பள்ளியிலிருந்து நீக்கி விடலாம்.
தன்னிச்சையாக எடுத்துக் கொண்டது சரியானது, ஆனால் வியாக்கனம் சரியில்லை என்பது எனது கருத்து
அவர் அரசை பார்த்து கேட்டிருக்க வேண்டிய கேள்வி இது.
- ஒரு பேரூந்தில் எத்தனை பேர் பயணம் செய்யலாம்,
- உட்காரும் வசதி தவிர்த்து எத்தனை பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம்.
- ஏன் நடத்துனர் மாணவர்களை படியில் தொங்கி கொண்டு வர அனுமதித்தார்.
- ஏன் பேரூந்திற்கு கதவு பொருத்தவில்லை
- பள்ளி மற்றும் நெரிசல் நேரத்தில் இலவச பயணசீட்டு வழங்கிய அரசு ஏன் மாணவர்களுக்கு என தனி பேரூந்து இயக்க கூடாது
இது போன்ற கேள்விகள் தன்னிச்சையாக எடுத்துக் கொண்ட வழக்கில் நீதி நிலை நாட்டப் பட்டிருக்கும்
ஆனால், இங்கே குற்றம் செய்தது மக்கள், அவர்கள்தான் படியில் தொங்கி கொண்டு வந்தனர். அவர்களுக்கு கல்வி மறுப்பது ஒன்றும் தவறில்லை.
காரில் செல்பவர்கள், தனி வழியில் செல்பவர்கள் அப்படிதான் சிந்திப்பார்கள். இப்படி நீதி வழங்கியவர்கள் பேரூந்தில்தான் நீதிமன்றம் செல்ல வேண்டும் என நாம் தீர்ப்பு வழங்கினால் என்ன.
நியாயமான தீர்ப்பு கிடைக்குமல்லவா?
3 கருத்துகள்:
//இப்படி நீதி வழங்கியவர்கள் பேரூந்தில்தான் நீதிமன்றம் செல்ல வேண்டும் என நாம் தீர்ப்பு வழங்கினால் என்ன.
//
இது ரொம்ப நல்லா இருக்கே...!
தங்களின் ஆதங்கம் நியாமானதேயானாலும் ஒவ்வொரு நடத்துனரும் யார் யார் படிக்கட்டுகளில் தொங்கிகொண்டு வருகிறார்கள் என்று பார்த்துக்கொண்டு வந்தால் பயணச்சீட்டை எப்படி வழங்குவது. ஒவ்வொரு குடிமகனும் தங்களின் பயணத்தை பாதுகாத்துக்கொள்வது அவர்களின் கையில்தான் உள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட பேருந்து காலியாக இருந்தாலும் இருக்கைகளில் அமராமல் மற்வர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் அல்லது இளம் பெண்களை ஈர்க்கும் வகையில் படிக்கட்டில் தான் தொங்கிக்கொண்டு வருகிறார்கள் மீறி யாரேனும் அறிவுறையோ அல்லது அதட்டினாலோ அவர்கள் எதிர்த்து பேசும் வாசகங்களை அச்சில் ஏற்றமுடியாது. ((பி.கு)இது எனது சொந்த அனுபவம்).
சென்னை மாநகர பேருந்துகளில் பெரும்பாலும் கதவுகள் இருந்தாலும் நம்முடைய குடிமக்கள் அக்கதவுகளை பழுதடைய செய்துவிடுகின்றனர் அல்லது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அக்கதவுகளை சரிவர பராமரிப்பது இல்லை அல்லது ஓட்டுநர்கள் அதை இயக்க மறந்துவிடுகின்றனர் அல்லது மறுக்கின்றனர்.
சாதாரண ஊராட்சி மன்ற தலைவரே சொகுசு மகிழ்வுந்து உர்திகளில் செல்லும்போது நீதிபதிகளை பேருந்தில் செல்லச்சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய கூற்று அல்ல. நீங்கள் அவர்கள் பேருந்து பயணத்தை அதன் அசௌகரியத்தை அனுபவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கூறியிருந்தாலும் அதற்கான ஒரு குழுவை நீதிமன்றமே அமைத்து அதன் அறிக்கையை வேண்டுமானால் நடைமுறைபடுத்த சொல்லிஇருக்கலாம்.
பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச பேருந்து சீட்டைக் காட்டிலும் நீங்கள் கூறியதுபோல் தனி பேருந்துகளை இயக்கலாம். நான் பார்த்த வரையில் சில மாநகராட்சி பள்ளிகள் தற்பொழுது தங்களுடைய மாணவர்களின் நலனுக்காக தனி பேருந்துகளை இயக்குகின்றன. இது வரவேற்க்கதக்க நடவடிக்கை. இதுபோன்ற நடவடிக்கை மேலும் அனைத்து மட்டங்களுக்கும் செல்லவேண்டும், இல்லையேல் காலை 7 மணி முதல் 9 மணிவரையும் மற்றும் மாலை 4 மணிமுதல் 6 மணிவரை இடைவிடாமல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சிறப்பு பேருந்துகளை இயக்கலாம். எல்லாம் சம்பந்தபட்டவர்கள் மணமுவந்து முடிவெடுத்தாலொழிய நம்மால் என்ன முடியும் ஐயா.
அருமை செந்தில்
நடத்துனரின் வேலை, பயணச் சீட்டு வழங்குவது மட்டும்தான் உங்களுக்கு யார் சொன்னது. பயணிகளின் பாதுகாப்பு அவருடைய கடமைதான்.
நீதிபதிகள் பேரூந்தில் பயணம் செய்வது ஒன்றும் குற்றமில்லை. எல்லோரும் அப்படிதான் வந்தனர். அதிகாரத்திற்கு வந்ததால் காரில் மட்டும்தான் செல்வேன் என்பதற்காக சொன்னதல்ல அந்த வாக்கியம். நெரிசல் நேரத்தில் பேரூந்தில் பயணம் செய்து அதன் பிறகு தீர்ப்பு வழங்கட்டும் என்ற நோக்கம்தான்.
கல்வி மறுப்பதுதான் ஜனநாயக முறையா, இதற்கு தங்கள் பதில் எதுவுமில்லை.
சனாதன முறையா, இவ்வாறு தீர்ப்பளிக்க
கருத்துரையிடுக