நீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 23

பூரி ஜெகந்நாதா


தங்கத் துடைப்பத்தால்
மன்னர் பெருக்கப்
பலபத்திரர், சுபத்திரையோடு
ஜெகந்நாதர் ரதத்தில் புறப்பட்டார்

உச்சநீதி மன்ற நீதிபதிகளை
அச்சுறுத்தியத் துடைப்பக்கட்டைகளை
ஆருக்கும் தெரியவில்லை
அவரும் கண்டுக் கொள்ளவில்லை

கொரோனாத் தொற்றால்
கூட்டத்தைப் பெருக்க வேண்டாமென
கும்மியடித்த சங்கராச்சாரி - இன்று
எதிர்பதனால் இந்த அனுமதியோ

மகாகனம் பொருந்திய
மக்கள் வழக்கறிஞ்ஞர்களால்
கூடாது என்ற தீர்ப்பை
கூடி மாற்றினர்

நாம் நம்புகிறோம்
சமூக இடைவெளியோடு
பக்தர்கள் இன்றி
பாங்கோடு நடத்துவீர்களென

பொய், பிறழ் கண்டவர்கள்
பொதுவாய் சொல்லி
ஒதுங்கிக் கொள்ள
ஒரு கூத்து ஆரம்பமானது

ஜராவின் (வேடன்) அம்பால்
ஜடமானான் கிருஷ்ணன்
அதாவது மரமானான்
மரணமெய்தினான்

இந்திரத்துய்மன் கனவில்
இறைவன் தோன்றி
ஆழிநீரில் மிதந்து வருவதில்
அற்புதசிலை வடித்திட வேண்டினான்

பூரிக் கடலில்
மிதந்து வந்ததோ மரக்கட்டை
பூஜைகள் செய்து
பெருமாளை வடிக்க உத்திரவு

உளி கொண்டு செதுக்க
உடைந்தது உளி
வயோதிக வடிவில்
வந்தனன் ஒரு தச்சன்

21 நாள்
அறைக் கதவை
ஆரும் திறக்கக் கூடாதென
ஆரம்பித்தான் வேலையை

15 நாட்கள்
தச்சன் உளி தடதடத்தது
அடுத்த 3 நாட்கள்
அமைதியாய் இருந்தது

பொறுக்காத மன்னன்
அறையை திறந்திட
சினந்தே உரைத்தான் - இனி
சிலைகள் அரைகுறைதானென

மூன்று சிலைகள்
முகம், கை மட்டுமே
அங்ஙனமே நிறுவி
அனைவரும் வழிபட்டனர்

இந்திர தையுமா
மன்னர் மரணத்திற்கு பின்
கோயில் பாழ்பட - பின்னர்
கடல்கோள் கொண்டது

இன்றைய கோயில்
கிபி 1200 -ல் முடிக்கப்பெற்றது
ஆயினும் இராமனும்
பாண்டவர்களும் வணங்கிய தலம்

நம்பிக்கையில்
கேள்வி எழுப்பாது
நழுவுவது நலம்
நம் நீதிபதிகளைப் போல்


வியாழன், மே 28

இரண்டாவது தூண்





நீதி நியாயம்
நாட்டில் இருப்பதாய்
நம்பிக்கை

நம்பாதே என்று
நியாயவான்கள்
நிரூபித்தும் விட்டார்கள்

நான்கு தூண்கள்
ஓரணியில் 
நாமெல்லாம் உதிரிகளாய்

முதல் தூணுக்கு
முட்டுக் கொடுப்பதே- மற்ற
மூன்றின் வேலை

மூன்று நாட்கள் அவகாசமிருந்திருந்தால்
மூட்டை முடிச்சுகளை தூக்க
அரசியல் கூலிகள் தேவைபட்டிருக்காது

மூன்று மணி நேரத்தில்
முழு அடைப்பு – அது
அதிகாரத்தின் பல்லிளிப்பு

ஊரடங்கில்
ஊர் போகும் வழியென்று
ரயில் போகும் பாதையில்

வாராது என நினைத்து
வந்தக் களைப்பில்
தலை வைத்தான்

கல்லக்குடிக் கொண்டோனென
கௌரவப் பட்டத்திற்கா
தன்குடியோடு வாழ 

சாகதான் வேண்டுமென 
சட்டம் காப்பவன்
சதிராடினால்

இந்த தேசத்தை விட்டு
இந்த மயானத்தை விட்டு
எங்கு செல்ல

பாதம் புண்ணாகி
பசியால் நெருப்பாகி
பாதியிலே போனவளை

ஏழுப்ப சுவிசேஷர்களில்லை
போர்வையை ஏழுப்புகிறது
புரியாத பிள்ளை

சோற்றுக்கு முறையிட
முகாம் இருக்கிறதென
மூடிவிடுவது நீதி

கால்நடைகளாய் மனிதர்கள் 
நிர்கதியாய் விட்ட
ஜனநாயக நிதர்சனங்கள்


நீதி வேண்டுமானால்
கண் திறந்து தராசை பிடி
கையில் வாளோடு



சனி, டிசம்பர் 15

படியில் பயணம் - படிப்பு மரணம்


மெட்ராஸ் உயர் நீதி மன்றம், தன்னிச்சையாக எடுத்து கொண்ட ஒரு வழக்கில், ஒரு மாணவன் இருமுறைக்கு மேல் படியில் பயணம் செய்தால் அவன் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவரின் பெற்றொருக்க தகவல் தெரிவித்து விட்டு, விளக்கம் கோரி, பள்ளியிலிருந்து நீக்கி விடலாம்.

தன்னிச்சையாக எடுத்துக் கொண்டது சரியானது, ஆனால் வியாக்கனம் சரியில்லை என்பது எனது கருத்து

அவர் அரசை பார்த்து கேட்டிருக்க வேண்டிய கேள்வி இது.

  • ஒரு பேரூந்தில் எத்தனை பேர் பயணம் செய்யலாம்,
  • உட்காரும் வசதி தவிர்த்து எத்தனை பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம்.  
  • ஏன் நடத்துனர் மாணவர்களை படியில் தொங்கி கொண்டு வர அனுமதித்தார். 
  • ஏன் பேரூந்திற்கு கதவு பொருத்தவில்லை
  • பள்ளி மற்றும் நெரிசல் நேரத்தில் இலவச பயணசீட்டு வழங்கிய அரசு  ஏன் மாணவர்களுக்கு என தனி பேரூந்து இயக்க கூடாது
இது போன்ற கேள்விகள் தன்னிச்சையாக எடுத்துக் கொண்ட வழக்கில் நீதி நிலை நாட்டப் பட்டிருக்கும்

ஆனால், இங்கே குற்றம் செய்தது மக்கள், அவர்கள்தான் படியில் தொங்கி கொண்டு வந்தனர்.  அவர்களுக்கு கல்வி மறுப்பது ஒன்றும் தவறில்லை.

காரில் செல்பவர்கள், தனி வழியில் செல்பவர்கள் அப்படிதான் சிந்திப்பார்கள்.  இப்படி நீதி வழங்கியவர்கள் பேரூந்தில்தான் நீதிமன்றம் செல்ல வேண்டும் என நாம் தீர்ப்பு வழங்கினால் என்ன.

நியாயமான தீர்ப்பு கிடைக்குமல்லவா?

சனி, ஜூன் 9

முஸ்லீம் என்றால்

15 வயது முஸ்லீம் பெண் தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டார்.  உயர் நீதி மன்றம் சொல்கிறது இந்து பெண் 18வயதுக்கு குறைவாக திருமணம் செய்து கொண்டால்தான் தவறு, தண்டனை உண்டு.

நீதி மன்றறம் முஸ்லீம் பெண் 15வயதில் தாரளமாக திருமணம் செய்து கொள்ளலாம் தவறில்லை என்று காதல் கணவனோடு அனுப்பி வைத்து விட்டது.

இங்கே பெண் பெண்ணாக பார்க்கப்படுவதில்லை, மதமாக, சாதியாக போகப் பொருளாக பார்க்கப்படுவதால் இந்த நிலைப்பாடு

அடுத்து வித்தியாசமான நிகழ்வு

அசாம் சட்ட மன்ற உறுப்பினர் ரூமி நாத் என்ற பெண் தன் கணவன் மற்றும் குழந்தையை விட்டு விட்டு முஸ்லீமாக மதம் மாறி முஸ்லீம் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

முதல் திருமணம்??????????

அதான் முஸ்லீம் 5 திருமணம் செய்து கொள்ளலாமே

ஆண் மட்டும்தான் 5 திருமணம் செய்யலாமா?

இதோ மக்கள் பிரதிநிதி ஒரு முன்னோடியாக மதம் மாறி செய்து கொண்டார்.

யார் இந்த ஆயுதத்தை (5 திருமணம்) எடுத்துக் கொள்கிறார்கள், மதம் மாறுபவர்கள், தவறு செய்பவர்கள்

பாராட்டுவோம் மக்களே

செவ்வாய், டிசம்பர் 6

ரூ.14 இலட்சம் கோடி- 22500 முதலாளிகள்

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நம் முதலாளிகள் ரூ.10 கோடி அதற்கு மேல் வாங்கிய கடன் 14 இலட்சம் கோடியாம்.  வாங்கியவர்களின் எண்ணிக்கை 22500.

ரூ.10 கோடி அதற்கு மேல் கடன் வாங்கிய 700 பேர், ஏறக்குறைய ரூ. 26000 கோடி கட்டாமல் எவ்வித தொல்லையுமில்லாமல் அதாவது வழக்குகள் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் 3400 வழக்குகள் ரூபாய் ஓரு கோடி அதற்கு மேல் பெற்ற கடனுக்காக கடன் வசூல் தீர்பாயத்தில் நிலுவையில் உள்ளது.   இதன் மூலம் வர வேண்டிய தொகை ரூ.21,400 கோடி.

கடன் வாங்கி ஏமாற்றிய முதலாளிகள் அத்தோடு விடுவதில்லை, வேறொரு நிறுவனம், வேறொரு வங்கி என எமாற்றிக் கொண்டுதான் இருகின்றனர்.

 CIBIL: Credit Information Bureau (India) Limited என்ற நிறுவனம் இவர்களை பற்றி தகவலை சேகரித்து வைக்கிறது.  இத்தகவலை பாதிக்கப்பட்ட வங்கி அளித்தால்தான் இதன் தகவல் பெட்டகத்தில் பார்க்க முடியும்.  ஆனால் எல்லா வங்கிகளும் அவ்வாறு செய்வதில்லை.  அதுவும் ஆளுக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்கின்றன.

அரசியல் பின்புலம்,  பணம், ரவுடியிசம் இவைகள் வங்கி அதிகாரிகளை கட்டி போட வைக்கின்றன.  ஒன்று அவர்களுக்கு சதகமாக நடக்க வைக்கிறது அல்லது அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகிறது.

வங்கியின் கடன் 1993 வரை பொது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.  1993 க்கு பிறகு கடன் வசூல் தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.  வங்கிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கடனுறுதி மற்றும் மறுசீரமைப்பு சட்டம் 2002 (SARFAESI ACT 2002)  இயற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயினும் முதலாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர்.

ரூபாய் ஒரு கோடிக்கு மேற்பட்ட கடனில் ஏதேனும் தவறுகள், குற்றங்கள் நடைப்பெற்றால் சி.பி.ஐ க்கு அதன் விவரம் அனுப்பி வைக்கப்படும்.  அதன் பிறகு வங்கி அதிகாரிகள் மறந்து விடுவார்கள்.  அவர்களை பொறுத்தவரை அது சிபிஐ விவகாரம்.  முதலாளிக்கு ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ விசாரணை. கைது கண்டிப்பாக இருக்காது.  ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் பணம் வசூலிக்க வழியில்லை.

குற்றவியல் நடவடிக்கை,(criminal action)  வங்கியால் எல்லா கணக்குகளிலும் நடைபெறுவதில்லை.   அவ்வாறு மேற்கொண்டால் வங்கி அதிகாரிகளின் செயல்பாடு தடைபடும்.  அதாவது அவர்கள் கடன் வழங்கும் போது அளவுக்கு அதிகமான கேள்விகள், ஆதாரங்கள் கேட்டு கடன் வழங்குவதை நிறுத்தி விடுவார்கள்.   ஏனெனில் பின்னால் அவர்கள் பாதிக்கப்படலாம் என்பதால்.

அதனால் முதலாளிகள் தீர்மானிக்கின்றனர் கடனை திருப்பி செலுத்தலாமா வேண்டாமா? எவ்வளவு செலுத்த வேண்டும்.  தள்ளுபடி எவ்வளவு கோரலாம்?  மத்திய வங்கியின் வழிகாட்டுதல் என்ன?

எல்லாம் அறிந்தவர்கள் அவர்கள்.  நாம் வீட்டுக் கடன், கல்வி கடன், விவசாய கடன், தனிநபர் கடன் வாங்கி வீட்டை, விவசாய நிலத்தை இழந்து நிற்கும் அப்பாவிகள்

யார் நல்லவர்கள், எல்லாம் இழந்து அப்பாவியான நாமா, எதையும் இழக்காமல் பொது மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்ட முதலாளிகளா

சனி, செப்டம்பர் 17

நீதி

கல்வி கட்டணம் அல்லாது கூடுதல் கட்டணமாக ரூ. ஒரு லட்சம் கேட்க அவரால் செலுத்த இயலவில்லை அதனால் தேர்வு ஏழுத அனுமதிக்க வில்லை.  உயர்நீதிமன்றம் செல்கிறார்.  தேர்வு எழுத அனுமதிக்க உத்திரவிடுகிறது.

ஆனால் மறுமுறையும் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை, நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை குற்றமிழைத்தார் என்று நீதிமன்றத்தை அணுக நிவாரணம் கல்வி நிறுவனத்திற்கு அபராதம் ரூ,15000.

ஆம்

கல்வி கட்டணங்கள் முதலாளிக்கு,
கல்வி காசுள்ளவனுக்கு

நாமெல்லாம் பிச்சையிடு என்று
வலையில் எழுதுவோம்
நாலுபேர் படிக்க
நாடு கடந்து பணம் அனுப்புவர்
நமது கடமை முடிந்தது
ஆத்ம திருப்தி

இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களை இழுத்து மூடினால் என்ன?

ஜனநாயக நாட்டில் ரூ,15000 அபராதமே சரியான வழி

மூடுவது தீவிரவாதம்

வாழ்க ஜனநாயகம்

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...