அழகன் முருகனுக்கு
ஆதரவு அளிக்கவில்லையென
அரோகரா என்று
அடியேனுக்கு ஓலமிட்டனர்
ஞானசம்பந்தனின்
பல்லக்குத் தூக்கிகள்
வழிக் களைப்புத் தீர
ஏலோ லோ பாடிச் செல்ல
அர ஹரோ ஹரா - அதாவது
நற்கதியை அருள் எனும்
நற்சொல்லை
கற்றுக் கொடுத்தாராம்
தமிழர்கள்
ஜெயராஜ் பென்னிக்ஸை
வல்வேல் காத்ததா
வாழ்வை முடித்ததா
இந்து அல்ல என்பதால்
பாராது இருந்தானா
அவர்கள் தமிழர்கள் என
ஆரிடம் சான்று பெற வேண்டும்
இந்து சனநாயம்
எதிர் கருத்தில்லாதது
எதிர்பது என்பது
இல்லாமல் செய்வதாம்
இந்து எதிர்வாதங்கள்
முஸ்லிம்/கிருத்துவ மதத்தை தாக்கி
சொர்க்கம் காண்பது
இவர்களின் சனநாயகம்
அடுத்தவன் மதத்தை தாக்க
அருகதை எனக்கில்லை என்றால்
அந்த உரிமையை – உனக்கு வழங்கியது
எந்த ஊர் சட்டம்
சைவ முருகன்
சுப்ரமண்யன் ஆக்கப்பட்டதாகச்
சுகிசிவம் சொல்ல
சங்கடம் இந்துக்களுக்கா?
வணங்குபவனுக்கு – அதுவொரு
வடிகால்
மகுடிக்குக் கட்டுப்பட்டு
நம்பிக்கை என்கிறார்கள்
கிடா வெட்டு தடைச் சட்டத்திற்கு
கிளர்ந்தெழுந்தவன்
அறுபடை வீட்டில்
சேவலைப் படையலிட முடியுமா
தமிழ் கடவுள்தானே
தேவாராம் தமிழ்தானே
சிற்றம்பல மேடையில்
பாடிக் காட்டேன் தமிழை
நீச மொழி என்று
நாளாது வரை - தமிழைக்
கோயில் நுழையாதுக் காப்பவன்
தமிழ் என்றவுடன் தடுமாறிவிட்டாயோ
கொற்றவை மகனை
வள்ளி மணாளனை – சேயோனை
குலம் காத்தக்
குறிஞ்சித் தலைவனை
சுப்ரமண்யன் ஆக்கியே
சரவண பொய்கையென
சரடு விடுபவனின்
கார்த்திகேயன் கதை வேறு
வேல் என்பது
வேட்டைக்கான ஆயுதம்
வேள்வி நடத்துபவர்கள்
வேட்டைக்குக் களம் தேடுகின்றனர்
ஓட்டுப் பொறுக்குவதற்கு
ஒவ்வொருவருக்கும் ஒரு உத்தி
ஒன்றாக இருந்தவனை
ஓட்டிற்காக இந்துவாக்கி விட்டான்
சூத்திரம் அறியா
சூத்திரன் சூடேறி விட்டான்
சேகருக்கு பால் “பாக்கெட்” கிடைக்கும்
உனக்கு ஒன்றும் கிடைக்காது
சனாதனத் தர்மத்தில்
சனநாயகம் கிடையாது
நம்பிக்கையில் நந்தனாயிருந்தால்
தீயில் எறிவாய்
எதிர்வினை என்று
சிலையாகி விட்டவனை
சிதைத்துப் பார்க்கிறாய்
விதைத்தவன் சிதைவதில்லை
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, ஜூலை 19
புண்பட்ட மனமே
வியாழன், ஜூலை 2
உன்னால
உன்னால
ஒரு மயிரும் புடுங்க முடியாதுடா
அதிகாரப் போட்டியில்
அவர்கள் உதிர்த்த வார்த்தையா
சனநாயம் எதுவென்று
தேடுபவர்களுக்குத்
தேடாதே என
உணர்த்தும் வார்த்தையா
அக்ரகாரம்
அஃதொரு மையம்
அவர்களின் அடிபொடி
அப்படிதான் என்கிறாயா
அரசு
அப்பாவி மக்களை
அப்படி சொன்னதாய்
சொல்லிப் பாருங்களேன்
பெட்ரோல் டீசல்
சர்வதேச சந்தையில்
விலை குறைய – இங்கு
தலை குனிகிறாய்
நீட் தேர்வுக்கு
அனிதாவை பலி கொடுத்தும்
அடுத்தாண்டு பார்த்துக் கொள்ளலாமென
பழகி கொண்டாய்
பண மதிப்பிழப்பு
சரக்குச் சேவை வரி
வேறவழியில்லை என
நீதானே மாறிக் கொண்டாய்
நீதிபதிக்கே
இதுதான் என
உனக்கு நீயே
சமாதனம் சொல்லிக் கொண்டாயா
அதிகாரத்தை எதிர்த்து
அதுவும் பாசிசத்தை எதிர்த்து
அதன் கட்டமைப்பை எதிர்த்து
நீதான் கேட்டுப் பாரேன்?!!!
கேட்க கேட்கதான்
கேள்விகள் பெருகும்
அச்சம் மறையும்
அணி திரள்வாய்
செவ்வாய், டிசம்பர் 24
ஆதார் அட்டை
ஆதார்
அட்டை
அட்சயப்
பாத்திரமா?
ஆட்காட்டி
பத்திரமா?
கண்ணின்
கருவிழி
காமிராவில்
பிடிக்கிறான்
களவாடினாயா
நீ
பத்துவிரல்
ரேகையை
பதித்து
பாதுகாக்கிறான்
பாகிஸ்தான்
ஆளா நீ?
காஸ்
இணைப்புக்கு
கையில்
காசென்கிறான் - அட
காச நீதானே
கொடுக்கிற
வங்கி
கணக்கிற்கு
வசதி
படுமென்கிறான் – இப்ப
கஷ்டமா
படுகிறாய்?
ரேஷன்
மானியம்
நேரடியா
வருமாம் – அட
நீரா
ராடியாவுக்குமா?
கொடுத்த
பணத்தை
எடுத்துக்
கொடுத்தா
கடன்தானே
கழிந்தது
நாளொரு
இடம்
பொழுதொரு
வாழ்க்கை
புரட்டிடும்
திரட்டிடும் அட்டை
சொத்து
வாங்கிட
விவாகரத்து
செய்திட – அரசு
அனைத்தும்
அறிந்திடும்
ஒவ்வொரு
நடவடிக்கையும்
ஒவ்வொரு
நாளும் – அட்டை
ஒற்றனாய்
தொடரும்
விழித்துக்
கொள்ளடா!
வேண்டாம்
வேண்டாம் – இந்த
ஆதார்
அட்டை
புதன், ஆகஸ்ட் 14
கணணியும் நானும்
கணணி
பற்றிய அறிவு/கேள்வி ஞானம் நமக்கு எப்போது வந்தது என சுத்தமாக ஞாபகமில்லை. 1989 அல்லது 1990 ஆக இருக்க வேண்டும். நான் வேலை பார்த்து
வந்த தொழிற்சாலைக்கு அருகில் இன்னொரு தொழிலகம் இருந்தது. கணணி மூலம் இரும்பை துல்லியமாக அறுக்கும் என அங்கு பணிபுரியும் நண்பர்
சொன்னார். அவர் நான் பணிபுரியும் தொழிலகத்திற்கு
இரும்பில் துளையிட வருவார். அதை பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை சொன்னேன்.
அது CNC தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்திரம். ஒரு மாலை நேரத்தில் அழைக்க, சென்று
பார்த்தேன். குளிரூட்டப்பட்ட ஒரு அறையில் இயங்கிய
அந்த கருப்பு வெள்ளை கணணியை கண்டேன்.
நெருங்கிய
நண்பன் சிவகுமார் NITT யில் 1992 ல் சேர்ந்து கணணி தொடர்பாக படிக்கும் போது, அவனை கேள்விகணைகளால்
துளைத்தெடுத்தேன். கணணி என்னவெல்லாம் செய்யும்,
நாம் என்ன செய்ய வேண்டும். அவன் சற்று பிகு
செய்து கொண்டான். ஆயினும் நமக்கு படிப்பதற்கெல்லாம்
அப்போது வசதியில்லை. C, C++, Cobal,
Foxpro. ஆம் இதெல்லாம் என்ன?
முதுகலை
வணிக மேலாண்மை படிக்கையில் ஒரு பாடமாக இந்த C++ programme எழுதி தேர்ச்சி பெற்றது வேறு விடயம். இன்று C++
என்ன என்று கேட்டால் நிச்சயமாக தெரியாது.
1996
ல் என ஞாபகம் எனது நண்பன் வெங்கடேசன் கணணியில் கடிதம் அடிப்பதை கற்றுக் கொடுத்தான்.
DOS
application போய் windows 3.1 வந்த நேரம் என நினைக்கிறேன்.( window வில் தட்டச்சு
செய்வது எளிதாக இருந்தது) Lotus 123, spread sheet, word இதை Dot Matrix printer ல்
அச்சாகி வரும் போது பார்த்ததும், இப்போது lazer jet ல் அச்சாகி வரும் வேகத்தை பார்க்கும்
போதும் வளர்ச்சி நன்றாகவே புரிகிறது.
1997
ல் கணணி இருக்கும் அலுவலகத்தில் வேலை. ஆனால்
அதை உபயோகிக்கும் நண்பர்கள் நம்மை உள்ளே அனுமதிக்கவே இல்லை. அங்கே ஒரு நண்பரை தாஜா செய்து உணவு இடைவேளையின்
போது உள்ளே நுழைந்து வண்ணமயமான அந்த பெட்டியை பார்த்தேன். எல்லோரும் EDP அறையில் நுழைகிறார்கள் என்று புகார்.
ஒரு
கணணியின் விலை ரூ.70000 லிருந்து வேகமாக இறங்கி கொண்டிருந்த நேரம். நாமும் ஏன் ஒரு கணணி வாங்க கூடாது என்ற எண்ணம் துளிர்
விட்டது.
நாம்
ஒரு கணணியை வாங்க வேண்டும் என்ற விருப்பத்தை
நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன். பாபு
எனும் நண்பன், அவனின் நண்பனிடம் சொல்லி ஏற்பாடு செய்வதாக சொன்னான். அந்த நண்பர் மிகப் பெரிய நிறுவனத்தில் கணணி
maintenance engineer. உபயோகப்படுத்த இயலாது
என்று சொல்லி கழித்து நமக்கு ஒரு கணணி ஏற்பாடு செய்து விட்டார்.
colour
monitor என்றால் விலை கூடுதல், CD player என
ரூ. 10000 செலவில் வீட்டிற்கு ஒரு கணணி வந்து இறங்கியது 1998 இறுதியில் என நினைக்கிறேன்.
Hyundai colour monitor, Pentium 100, 16 MB RAM, 2GB HDD, CD player, Speaker. இரவும் பகலும்
கணணியோடுதான். சிவக்குமாரை கூட்டி வந்து காண்பித்தேன். பாபுவின் அறிமுகமே சிவக்குமாரால்தான்.
நமக்கு
அலுவலகத்திலும் ஒரு கணணி கிடைத்து விட்டது அதுவும் 1998 இறுதியில். மறுபடியும் நண்பன் பாபுதான் உதவி. இணையம் பற்றிய அறிவு அவனிடமிருந்துதான் பெற்றேன். கணக்காளான் என்பதால் அலுவல் தொடர்பான tally கற்றுக்
கொள்ள வேண்டும் என அவா. அதுவும் பாபுதான் கற்றுக்
கொடுத்தான். பிறகு பட்டாபிராமன் எனும் இன்னொரு
நண்பன் வளர்த்தெடுத்தான். ஆக எந்த பயிற்சி
நிலையமும் செல்லாமல் கணணி கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.
இமெயில்
வசதி அலுவலகத்தில் இல்லை, ஒரு மணி நேரத்திற்கு அப்போது ரூ.25 வசூலிப்பார்கள். நண்பன் பாபு மூலம் நான்கு எழுத்தில்
rediffmail ல் ID தொடங்கினேன். இன்று வரை இருக்கிறது. வலையில் மேய மாதம் ரூ. 150 செலவு. அலுவலகத்தில்
ஒரு மோடம் வாங்கினேன். வீட்டிற்கு ரூ.3200
செலவில் D-link மோடம் வாங்கினேன்.
இந்த
நேரத்தில்தான் southindia.com ல்
discussion forum என்ற பிரிவில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. அதில் நாமும் பங்கு கொண்டோம். முகம் தெரியாதவர்களோடு
விவாதம். இனிமையாகதான் இருந்தது. சில மாதங்களில் அந்த வசதி அந்த தளத்தில் இல்லை.
1983-84
தமிழ் தட்டச்சு பயின்றதால், கணணியில் தமிழில் தட்டச்சு செய்ய அவா கொண்டு, அது தொடர்பான
மென்பொருள் தேடியலைந்தது தனிக்கதை…..
கால
ஓட்டத்தில் 2007 ல் ஒரு மடிக் கணணி வாங்க நேர்ந்தது. கணணியை மின்னஞ்சல் பார்ப்பதற்கும், வேறு அலுவலக
உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.
2009
மத்தியில் கூக்குளாரிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது 1998 இறுதிவாக்கில் விவாதம்செய்த
Discussion forum நினைவு வர தேடினேன், வந்த விழுந்தன வலை தளங்கள். நமக்கு ஒரு தளம் எப்படி செய்வது என தேடி,
2009 இறுதியில் நமது பெயரில் பதிந்த முதல்
படைப்பு http://velvetri.blogspot.in/2009/12/86-30-60-2-1.html
தருமி
அய்யா அவர்கள் எனது அனுபவத்தை எழுத அழைத்ததால் இங்கே இதை பதிவு செய்கிறேன். அவரும் அடியேனும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். ஆனால் இங்குதான் (வலையில்) நாங்கள் அறிமுகமானோம். எங்களுடைய வேர் இறுக காரணம் சொந்த கிராம பற்று என்றாலும்,
பல்வேறு கருத்துக்களில் அவரின் எண்ணங்கள் எனக்கும் ஏற்புடையது என்பதால் வேர் இன்னும்
இறுகி இருக்கிறது.
வெள்ளி, ஆகஸ்ட் 9
நடை பழகு
பழகு
நடை பழகு
நலம் பேண
நடை பழகு
நாலாறு மாதத்தில்
நடை பழகுவதும்
நாற்பதில் பழகுவதும்
நடக்க தெரியாததால் (பழகு)
நடை பழக
காரணம் பலபல
விடை எதுவாயினும்
விடாமல் (பழகு)
விடை எதுவாயினும்
விடாமல் (பழகு)
நடை பழக
சாலை வழியோ
பூங்காவோ
இயந்திரமோ (பழகு)
வீதிவழி நடக்க
பாதி முகவரி
பார்க்கலாம்
மீதி தேட (பழகு)
அக்கம் பக்கமுள்ள
தெருக்களும் தெரிய
நாளொரு பாதையில்
நடையாய் நடந்திடு (பழகு)
நாற்பதை கடந்தவர்
எடையை குறைப்பவர்
நோயை விரட்டுபவர்
நடையால் தீர்த்திடுவர் (பழகு)
மாதர்தம்
மாத சுழற்சி
மாறி மாறி
மாறாமல் வர (பழகு)
உன்னை குறைக்க
எண்ணையை குறைக்கனும்
எனினும்
எடை குறைய (பழகு)
நினைத்த நேரத்தில்
நீட்டவும் ஒடுக்கவும்
நிணமும் சதையும்
நெளியும் கம்பியில்லவே (பழகு)
நடையா - இது
நடையா என
நடைபல காண
நட - பூங்காவில் (பழகு)
முகம்பல பார்த்து
அகமும் மகிழ
வேகம் கூட்டி
வேடிக்கையாய் நடந்திட (பழகு)
பூமுடிக்க இருப்பவளும்
புதுபெண்ணாக போறவளும்
பூங்காவில் - நடை
போகும் அழகை காண (பழகு)
உடலுழைப்பில்லா
உலக ஓட்டத்தில்
எடையும் - மன
அழுத்தமும் குறைய (பழகு)
கண்ணுக்கு விருந்தாய்
கவலைக்கு மருந்தாய்
கால்களும் துவளாது
காலை மாலை (பழகு)
பாதி முகவரி
பார்க்கலாம்
மீதி தேட (பழகு)
அக்கம் பக்கமுள்ள
தெருக்களும் தெரிய
நாளொரு பாதையில்
நடையாய் நடந்திடு (பழகு)
நாற்பதை கடந்தவர்
எடையை குறைப்பவர்
நோயை விரட்டுபவர்
நடையால் தீர்த்திடுவர் (பழகு)
மாதர்தம்
மாத சுழற்சி
மாறி மாறி
மாறாமல் வர (பழகு)
உன்னை குறைக்க
எண்ணையை குறைக்கனும்
எனினும்
எடை குறைய (பழகு)
நினைத்த நேரத்தில்
நீட்டவும் ஒடுக்கவும்
நிணமும் சதையும்
நெளியும் கம்பியில்லவே (பழகு)
நடையா - இது
நடையா என
நடைபல காண
நட - பூங்காவில் (பழகு)
முகம்பல பார்த்து
அகமும் மகிழ
வேகம் கூட்டி
வேடிக்கையாய் நடந்திட (பழகு)
பூமுடிக்க இருப்பவளும்
புதுபெண்ணாக போறவளும்
பூங்காவில் - நடை
போகும் அழகை காண (பழகு)
உடலுழைப்பில்லா
உலக ஓட்டத்தில்
எடையும் - மன
அழுத்தமும் குறைய (பழகு)
கண்ணுக்கு விருந்தாய்
கவலைக்கு மருந்தாய்
கால்களும் துவளாது
காலை மாலை (பழகு)
சனி, டிசம்பர் 15
படியில் பயணம் - படிப்பு மரணம்
மெட்ராஸ் உயர் நீதி மன்றம், தன்னிச்சையாக எடுத்து கொண்ட ஒரு வழக்கில், ஒரு மாணவன் இருமுறைக்கு மேல் படியில் பயணம் செய்தால் அவன் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவரின் பெற்றொருக்க தகவல் தெரிவித்து விட்டு, விளக்கம் கோரி, பள்ளியிலிருந்து நீக்கி விடலாம்.
தன்னிச்சையாக எடுத்துக் கொண்டது சரியானது, ஆனால் வியாக்கனம் சரியில்லை என்பது எனது கருத்து
அவர் அரசை பார்த்து கேட்டிருக்க வேண்டிய கேள்வி இது.
- ஒரு பேரூந்தில் எத்தனை பேர் பயணம் செய்யலாம்,
- உட்காரும் வசதி தவிர்த்து எத்தனை பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம்.
- ஏன் நடத்துனர் மாணவர்களை படியில் தொங்கி கொண்டு வர அனுமதித்தார்.
- ஏன் பேரூந்திற்கு கதவு பொருத்தவில்லை
- பள்ளி மற்றும் நெரிசல் நேரத்தில் இலவச பயணசீட்டு வழங்கிய அரசு ஏன் மாணவர்களுக்கு என தனி பேரூந்து இயக்க கூடாது
இது போன்ற கேள்விகள் தன்னிச்சையாக எடுத்துக் கொண்ட வழக்கில் நீதி நிலை நாட்டப் பட்டிருக்கும்
ஆனால், இங்கே குற்றம் செய்தது மக்கள், அவர்கள்தான் படியில் தொங்கி கொண்டு வந்தனர். அவர்களுக்கு கல்வி மறுப்பது ஒன்றும் தவறில்லை.
காரில் செல்பவர்கள், தனி வழியில் செல்பவர்கள் அப்படிதான் சிந்திப்பார்கள். இப்படி நீதி வழங்கியவர்கள் பேரூந்தில்தான் நீதிமன்றம் செல்ல வேண்டும் என நாம் தீர்ப்பு வழங்கினால் என்ன.
நியாயமான தீர்ப்பு கிடைக்குமல்லவா?
வெள்ளி, நவம்பர் 9
சட்டம் அதிகாரத்தின் பிடியில்
பதிவர் என்ற முறையில் எனக்கு அய்யா தருமி அவர்களின் கோரிக்கை மிகச் சரியானது. காலதாமதமாக அவர் செய்தியை இங்கே பதிவிடுகிறேன். அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே எனது நண்பர்கள் மற்றும் உடன் படுபவர்கள், உடன் படாதவர்கள் அனைவரும் இதை விவாத பொருளாக மட்டும் கொள்ளாமல் இதன் தன்மையை, அதிகாரத்தின் போக்கை, அது நாளையே நம்மையும் இப்படி தாக்கும் என்ற புரிதலோடு எதிர்க்க வேண்டும் என்று கோருகிறேன்
மேலும் விவரங்களுக்கு அய்யாவின் தளத்தின் செய்திகளை பார்க்கவும்
http://dharumi.blogspot.in/2012/11/601-i-t-act-section-66.html
I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’
”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.
இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.
*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.
*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.
*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.
நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.
*
செவ்வாய், ஆகஸ்ட் 28
மாலதியின் சிந்தனைகள்
[வேல்வெற்றியின்] மண்சோறுண்டால் குழந்தை ஐப் பற்றிய புதிய கருத்துரை.
6 messages
மாலதி <thmalathi@gmail.com>
|
Tue, Jul 31, 2012
at 3:25 PM
|
To: selvel.murugan@gmail.com
|
|
|
மிகசிறந்த அறிவியலை முட்டாள்தனமான
ஆன்மீகமாக்கி அவலப்
படுத்துகிறார்கள் ஆண்மைக்
குறைபாடு இருப்பவன்
தான் மனைவிக்கு
இன்னொரு திருமணம்
செய்து வைப்பானா? வினா
எழுகிறது விடைதான்
கிடைப்பதில்லை ? இந்த
போலி குமுகத்திலிருந்து மண் சோறு
உண்ணும் முறையில்
பெண்களின் கருப்பையின்
குற்றம் விலகுகிறது
பின்னர் குழந்தைப்
பேறு உண்டாகிறது
இந்த அறிவியல்
தெரியமையம் பக்தியாகி
விட்டது .
|
vel Murugan <selvel.murugan@gmail.com>
|
Wed, Aug 8, 2012
at 12:18 PM
|
To: மாலதி <thmalathi@gmail.com>
|
|
வணக்கம்,
தங்கள்
பதில் மண்சோறு
உண்டால் குழந்தை
பாக்கியம் கிட்டம்
என்ற தொனி
தெரிகிறது. மண்ணில்
சோறிட்டு உண்பது
அறிவியலா என தெரியவில்லை.
என்
கேள்வி தவறாக
இருந்தாலும் விளக்கமளிக்கவும்
நன்றி
வேல்முருகன்
[Quoted text hidden]
--
*Velmurugan A*
|
Mala Thi <thmalathi@gmail.com>
|
Thu, Aug 16, 2012
at 2:51 PM
|
To: vel Murugan
<selvel.murugan@gmail.com>
|
|
வணக்கம் மண்சோறு உண்டால் குழந்தை கிடைக்குமா
இது அறிவியலா? என்ற
உங்களின் வினா
உண்மையில் பாராட்டக் கூடியதே
. மான் சோறு
என்பது தெருவில் கொட்டிக்
கிடக்கும் மண்ணிலும்
சகதியிலும் சோற்றைக் கொட்டி
உணவை உண்ணுவதில்லை
. தூய்மையாக்கப் பட்ட
கல்லில் அல்லது தரையில் சோற்றைக் கொட்டி அதை
கையை பின்புறமாக
கட்டிக் கொண்டு பெண்கள்
உணவு உன்ன
கருப்பையில் உள்ளகுற்டங்கள்
விலகி குழந்தைப்
பேறு உண்டாகிறது
. புரிதலுக்கு நன்றி
மாலதி .
[Quoted text hidden]
|
vel
Murugan <selvel.murugan@gmail.com>
|
Thu, Aug 16, 2012 at 3:28 PM
|
To:
Mala Thi <thmalathi@gmail.com>
|
|
வணக்கம்
தங்கள் கருத்தில்
எனக்கு உடன்பாடில்லை. எங்கள் தாத்தா
பாட்டிகள் மண்
கலயத்தில்தான் உணவு
உண்டனர். பனை மட்டையும், தேங்காய்
சிரட்டையும்தான்
கரண்டிகள், நான்தான் எவர்சில்வர்
தட்டில் சாப்பிடுகிறேன்.
நானும் தெருவில்
கொட்டிக் கிடக்கும்
மண் என்று
சொல்லவில்லை.
பிள்ளை பேறு
கிடைக்க, கருப்பை குற்றஙகள்
விலக தூய
தரையில் உணவுண்டால்
போதுமா
அப்படியென்றால் பெண்ணென்ன
அத்தனை ஆணும்
கூட தினமும்
மண்சோறுண்ண தயாராக
இருப்பான். ஆணுக்கும் அது
ஒரு கவலைதான்.
நீங்களே ஓரிடத்தில்
ஆணுக்கும் குறையிருக்க
வாய்ப்புண்டு என்று
சொல்லியுள்ளீர்கள். உண்மையேதான்.
அப்படியிருக்க மண்சோறு
மகத்துவம் அளிக்குமா?
குறைக்குத்தான் நிவர்த்தி
தேடவேண்டும்.
எனது நீண்ட
பதிலுக்கு காரணம், தங்களை
எழுத்து வீச்சு. அது
அவநம்பிக்கையை
தகர்க்க வேண்டும்
வளர்க்க கூடாது
என்ற எண்ணத்தில்
இது உளவியல்
சம்பந்தப்பட்டது என்பதால்
இது போன்ற
நம்பிக்கைகள் இருக்கதான்
செய்கிறது. ஆயினும் ,,,,
இயற்கையை மீறி
பார்ப்போம் இல்லையெனில்
அமைதியாக இருப்போம்
[Quoted text hidden]
--
*Velmurugan A*
|
Mala Thi <thmalathi@gmail.com>
|
Fri, Aug 17, 2012
at 3:21 PM
|
To: vel Murugan
<selvel.murugan@gmail.com>
|
|
அண்ணன் சீமான் ஒரு
இடத்தில் சொல்லுவார்
நான் செத்துதான் என்
உண்மையை நிலைநிறுத்த வேண்டுமெனில் அது
என்னால் இயலாது என்பார்
. நான் சொல்லுவது
அறிவியல் அடிப்படையிலானது இது ஒக
இருக்கையில் ஒரு
பகுதிதான் வியக்கனம் தேவையில்லாத விமர்சனம்
தேவைதான் ஆனால் முரட்டுத்தனமான விமர்சனம் பொருளற்றது தன்னிலை
விளக்கம் உங்களுக்கு
மட்டுமே விளக்கமா
அளிக்கிறேன் . இது
அறிவியல் சித்த
மருத்துவ அறிவியல் ஒக இருக்கை(யோகாசனம் )அறிவியல்
வேண்டுமானால் நல்ல
யோகாசன ஆசானை சந்திக்கவும்
.
நன்றி
.
மாலதி
[Quoted text hidden]
|
vel Murugan <selvel.murugan@gmail.com>
|
Sat, Aug 18, 2012
at 11:37 AM
|
To: Mala Thi <thmalathi@gmail.com>
|
|
பொறுத்தமற்ற விளக்கம் . மண்சோறுக்கும் யோகசனத்திற்கும் தொடர்பில்லை,
முரட்டு
விவாதத்தை மேற்கொண்டு
தொடரவில்லை,
நன்றி
[Quoted text hidden]
--
*Velmurugan A*
|
மேற்கண்ட விவாதத்திற்கு பதில்தான் பதிவர் எழுதிய பாராட்டு பத்திரம் இங்கே http://thmalathi.blogspot.in/2012/08/blog-post_19.html
அறிவியலை
ஆன்மீகமென எண்ணி
கோட்டை விட்டு விடுவோம்
ஆன்மீகமென எண்ணி
கோட்டை விட்டு விடுவோம்
மண்சோறு உண்ணாமல் கோட்டை விட்டு
மகவு வேண்டி மருத்துவமனையில் (fertility clinic) காத்திருக்கின்றனர் மக்கள் கூட்டம் என்கிறார்
சான்றைத் தேடி
அறிவியலை பரப்புரை
செய் .
அறிவியலை பரப்புரை
செய் .
மண்சோறு உண்டு மகவு பெற்றவர் பட்டியல் அடுத்த பதிவாக வெளிவரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் காட்டுமிராண்டி
பெரியார் ஒருவர்
போதுமே
தமிழனை
இழிவு படுத்தியதும்
முடமாக்கியதும்
போதுமே
தமிழனை
இழிவு படுத்தியதும்
முடமாக்கியதும்
பெரியார் ஒரு மிகச் சிறந்த சீர்திருத்தவாதி, அவர் இல்லையென்றால் தமிழகம் இன்னும் பின்தங்கிய நிலையில் இருந்திருக்கும். அவர் எந்த தமிழனை இழிவு படுத்தினார்.......... பட்டியல் வாசிப்பது யாரென்று பாருங்கள் மக்களே......
தமிழன் முடமானானாம், எழுந்து நின்று இவர்கள் சரி செய்தவற்றை பட்டியலிடட்டும்.
பெண் கல்வி, பெண் விடுதலை, விதவை மறுமணம் கோயில் நுழைவு போராட்டம், சமூக விடுதலை, மனிதனை மனிதனாக மதித்தல் இவையெல்லாம் பெரியாரின் பங்கு இல்லை என சொல்லட்டும்
சிந்திப்பாய்
தமிழனே .
தமிழனே .
பெரியார் சொல்வார், இந்த இராமசாமி சொல்கிறான் என்று யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். சிந்தியுங்கள் சரியில்லையென்றால் எனென்று கேள்வி கேளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்பார்.
கேள்வி கேட்டால் நாம் காட்டுமிராண்டி
நல்லது
திரும்பவும் இதை படியுங்கள் http://velvetri.blogspot.in/2012/07/blog-post.html
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இது அரசியல்தான்
தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
கொள்ளை நோய் நூறிலிருக்க மருத்துவ சேவகனுக்கு கைத்தட்டு ஆயிரத்திலிருக்கும்போது அல்லாவை வணங்குபவனால் அக்கம்பக்கம் தொற்றுதென அவ...
-
கடந்த ஞாயிறு அடர்ந்த முடிதிருத்த அகவை ஏழுகொண்ட அருணனை அழைத்துச் சென்றேன் அருகிலிருந்த அங்காடியில் வண்ண மீன்கள் காதல் பறவைகள...
-
வேணுகோபலனுக்கும் இராகவேந்திரனுக்கும் பன்றிக் கறிப் படைத்திட பதைபதைத்தது கோவை கண்ணப்பன் நாயனாரானார் ஹரி என்கிற ராம் பிரகாஷ் நாயனாராவதை இந்துக...
-
பிராமணர்கள் வசிக்கும் அடுக்ககத்தில் நானே சைவம் என்றுதான் குடி புகுந்தேன். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒருநாள் கூட அங்கே அசைவம் சமைத்ததில்லை. த...





