பன்மொழி புலமை
பக்தனுக்கு உண்டா
ஏழேழு உலகை
இரட்சித்து காக்கும்
பரமனுக்கும் உண்டா
அறிந்தது அறியாதது
தெரிந்தது தெரியாதது
புரிந்தது புரியாதது
சிவாஜி - சிவனாய்
உச்சரிக்க அழகு
அழகன் முருகனோ
அவனப்பன் சிவனோ
அவதார பெருமாளோ
அவர்களது பத்தினிகளோ
அறியாதது ஏதுமுண்டோ?
கைலாய வாசமென்பதால்
காதில் விழுந்தவை
சமஸ்கிருதமாம் -
ஆதலால்
பைந்தமிழ்
மைந்தனுக்கும் தெரியாதாம்
காமாட்சி
“கற்றது தமிழ்” அல்லவாம்
மீனாட்சிக்கு
சொக்கனை தெரியுமாம்
சங்கத்தமிழ் புரியாதாம்
தேவாரமோ திருவாசகமோ
தமிழில் ஒரு வாசகமோ
புரியலையாம்
தில்லை நடராசனுக்கு
– இது
தீட்சிதர்கள் சொன்னது
ஆலயத்தம்மனும்
பாளையத்தம்மனும்
பைந்தமிழில் பூசிக்க
பரவசமடைந்ததாய்
பக்தர்கள் சொல்ல
சுப்புணி சுட்டபழம்
சூத்திர மொழியில்
கேட்டதாக அவ்வை
பாட்டெடுக்க - அவாள்
தேவமொழி என்றனரே
சுப்புணி சுட்டபழம்
சூத்திர மொழியில்
கேட்டதாக அவ்வை
பாட்டெடுக்க - அவாள்
தேவமொழி என்றனரே
அனந்தனுக்கு
ஆராரோவோ அல்ல
பூபாளமோ
சமஸ்கிருதத்தில்
வேண்டுமென
சட்டம் போட்டானா?
அண்ட சராச்சரத்தை
காப்பவனுக்கு
அய்யாயிரமாண்டு தமிழ்
தெரியாதாம்
அப்படியா! – அக்குடும்பத்தை
ஆரம்ப பள்ளிக்கு
அனுப்புவோமா
ஆனா, ஆவன்னா கற்க?!