சனி, மே 8
கண்டாங்கி சீலக்காரி
கண்டாங்கிச் சீலக்காரி
காத்திருக்கேன் வாயேன்டி
திண்டாடிப் போவேண்டி
திருமுகம் காணாட்டி
ஆண்டியானா அப்பழி
ஆத்தாடி உனக்கடி
பொண்டாட்டி ஆகிட
புதுசுகம் தேடலாமடி
கெண்டைக் காலு
கழனிக் காட்டிலே
தண்டைக் கொலுசில்
தாளம் போடுது
அண்டச் சொல்லுது
அத்தானின் வயசு
தாண்டி வந்தால்
தாசன் ஆவேன்
வக்கணையா பேசும்
வேலனே தாசனே
அக்கறையா வாரும்
அச்சாரம் போடும்
பாக்கு வெத்திலை
பக்குவமா தாரேன்
தாக்குப் பிடிச்சு
தாராளமா விளையாடும்
வண்டின் நிலையறிந்து
வழங்கடித் தேனைத்தான்
தொண்டின் பொருள்புரிய
தீண்டலை ரசிக்கணும்தான்
பண்டுக் காலம்போல்
பாமரனாய் எண்ணாதே
ஆண்டு அனுபவிப்போம்
ஆயுளை நீட்டிப்போம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மெய்யும் அறிவும்
உடலது அறிவை உள்ளபடி ஏற்காது உடன்படுவ தில்லையென உறுதியான முடிவுகள் தடாபொடா சட்டங்கள் தடாலென மாறிடும் அடடா அற்புதமென அனுமதி அளித்திடும் தேகத...
-
அறியாததை அறியவும் ஆதியைத் தேடி ஓடவும் அறிந்ததை அகிலத்தில் ஆலம் விழுதாய்ப் பரப்பவும் அறம்தனை வகுத்து ஆறறிவு உயிராய் உயரவும...
-
சிறந்த பதிலை செப்புவதா வேண்டாமா சிக்கலாகுமோ என சிந்தித்துக் கொண்டிருக்க தாமதமேன் தலைவா தசைசால் மானுடா தக்கதொரு பதிலுக்கா தவிப்பதேன் மண...
-
கற்பின் இலக்கணம் கண்ணகி யெனில் காதற் கிழத்தி காப்பிய மாதவி?!! அரங்கேற்றம் கோவலன் அவர்கள்மகள் மணிமேகலை அத்துடன் துறவறம் அக்மார்க் இல்லையோ ...
-
நீ என்னை சந்திக்கும் போதெல்லாம் இறகுகள் முளைத்து பறக்கிறேன் உன்னருகாமையில் - நான் உயிரோடிருப்பதை உணர்கிறேன் என்றென்றும் எனதானவன் நீ எனது ப...
-
முழுநிலவு காயுதடா முகங்காட்டிப் போயேன்டா எழுமாசை கோடிகளடா என்னவென்று கேளடா எழுபிறப்பும் என்னுடன் எழுந்தருள வேண்டுமடா மழுப்பாமல் மாலையிட மன...
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக