ஞாயிறு, ஆகஸ்ட் 23

இது அரசியல்தான்

 
















தாமரை
நீர்நிலைகளை ஆக்கிரமிக்க
கைகள்
சலனமற்று இருக்கிறது

இலைகள்
உதிர்ந்து கொண்டிருக்க
திடீரென
விசில் சத்தங்கள்

கதிர் அரிவாள்
சுத்தியல்
கொள்கை தடுமாற்றத்தால்
களையிழந்து போக

மாம்பழத்தில்
மரபணு மாற்றம் நிகழ
பம்பரம்
சாட்டையின்றி இருக்குது

பிறைநிலவு
வளரவேயில்லை
டார்ச்லைட்
ஒளியின்றிப் போனது

முரசடிக்க
முகங்களில்லை
குக்கரில் – பருப்பு
வேகவில்லை

சூரிய அஸ்தமனமென 
சூழ்ந்திருந்தவர்கள் விலகிட
பானையும் – ஆங்கே
பொங்கவில்லை  

துடைப்பக் கட்டைகள்
தேய்ந்து போய்விட்டன
வங்கத்து மலர்கள்
வாடிவிட்டன

வில் அம்பை (சிவசேனா)
ராமன் உடைத்துவிட
யானைகள்
பழக்கப்படுத்தப்பட்டுவிட்டன

சங்கு (பிஜூ ஜனதாதளம்)
மக்களால் ஒதுக்கப்பட
சைக்கிள் ஓடுகிறது
இடத்திற்கு தகுந்தாற்போல்

சின்னங்கள் எதுவாயினும்
சிந்தாந்த நக்சல்களால்
கரப்பான் பூச்சிகளைக் கொண்டு
காலத்தை மட்டுமே விரயமாக்கலாம்  


அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...