புதன், செப்டம்பர் 14

நாடாத்தி

நேற்று நாகர்கோவிலை சேர்ந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், வயது 35 க்குள் இருக்கும். இதுவா முக்கியம்.  அவர் சிறுவயதாக (10-12) இருக்கும் போது உறவுக்காரர் நாடாத்தி உள்ளே வராதே என்று திட்டி அழ வைப்பாராம்.  இத்தனைக்கும் அவர் அந்த சாதியை சேர்ந்தவர் அல்ல.

எத்தனையோ செய்திகள், நாடாத்திகள் மாராப்பு சேலை போராட்டம் அந்த மாவட்டத்தில்தான் நடைபெற்றது.  இந்த சாதியை சேர்ந்த ஆண்கள் செருப்பு அணிய கூடாது, தோளில் துண்டு அணிய கூடாது இத்தனை கட்டுப்பாடுகள் 80 களில் இறுதி வரை

தன் சாதிக்காரியை திட்ட அவர்கள் மனதில் மட்டமாக  உள்ள சாதியின் பெயரை சொல்லி திட்டிக் கொள்வதில் உள்ள திருப்தி, அதில் பாதிக்கபடும் மனம்........?

இன்னும் கிராமங்களில் இந்த சாதிய படிமம் மாறவில்லை.  நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமத்தில் சக்கிலிய குடி என்று தனியாக ஊருக்கு வெளியே உள்ளது.  அவர்களிலும் பாகுபாடு.

மனிதன் ஏன் சாதியின் பெயரால் அடுத்த மனிதனை கீழாக பார்க்க வேண்டும். காரணம், நிறமா, பொருளாதாரமா, அல்ல ஆதிக்கத்தால் ஒவ்வொரு சாதியும் மற்ற சாதிக்கு அடிபணியுதா?


4 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

என்று ஒழியும் இந்த சாதி ?

அ. வேல்முருகன் சொன்னது…

கலப்பு திருமணத்தால் ஒழித்து விடலாம் என ஒரு அரை நூற்றாண்டு கழிந்து விட்டது

காத்திருக்கலாமா, காரியம் ஆற்றுவோமா என மனிதன்தான் தீர்மானிக்கவேண்டும ராஜா

மாலதி சொன்னது…

இன்னும் கிராமங்களில் இந்த சாதிய படிமம் மாறவில்லை. நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமத்தில் சக்கிலிய குடி என்று தனியாக ஊருக்கு வெளியே உள்ளது. அவர்களிலும் பாகுபாடு.

மனிதன் ஏன் சாதியின் பெயரால் அடுத்த மனிதனை கீழாக பார்க்க வேண்டும். காரணம், நிறமா, பொருளாதாரமா, அல்ல ஆதிக்கத்தால் ஒவ்வொரு சாதியும் மற்ற சாதிக்கு அடிபணியுதா?//
முதலில் நான் பொது (கம்யூனிசம் )உடமைகாரியல்ல இருந்தாலும் இங்கு சாதீயம் நிலவியதற்கான நிருவியதர்கான காரணங்களை முறைப்படி அறியப்படவேண்டும் முதலில் எங்குமே பொதுமை எதுவும் எவனுக்கும் சொந்த மானதல்ல பின்னர் அடிமை சமூகம் தோட்டம் கொள்ளுகிறது இங்கு உபரி தோன்றும் பொது அடிமைத்தனம் மிகையாக தொடருகிறது . இங்கு தமிழ நிலத்தில் ஐவகை நிலமாக இருக்கிறது இதன் அடிப்படையில் தொழில் ரீதியாக மக்கள் பிரிந்து வழுகிறனர் . இந்த சூழலில் ஆடு மாடு மேய்த்து கைபர் கனவாய் வழியாக ஒரு கூட்டம் வருகிறது அதுகள் இங்குள்ள ஐவகை நிலங்கள் அடிப்படையில் பிரிந்துள்ள மக்களை சாதிரீதியாக பிரிக்கிறனர் இது சாதீயம் வந்த அறிவியல் வழி முயன்று தொடுங்கள் கிடைக்கும்.

அ. வேல்முருகன் சொன்னது…

நன்றி மாலதி

நான்காம் நிலையிலிருக்கும் ஒரு சாதி மற்ற ஆதிக்க சாதிகளுக்கு அடிபணிந்து வாழ்கிறது. ஆனால் அதே சாதி ஐந்தாம் நிலை சாதியை அடிமையாக நடத்துகிறது.

அதாவது ஒரு அடிமை மற்றொரு மனிதனை அடிமையாக எப்படி நடத்த முடிகிறது.

அந்த ஆதிக்க மனப்பான்மை எதனால்

அது அந்த ஊருக்குள் இருக்கும்வரை ஏன்

சென்னை போன்ற இடங்களுக்கு வந்தவுடன் ஏன் மாறுகிறது

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...