திங்கள், ஜூன் 4

ஊடலும் கூடலும்

 



ஊடி யவரை உணராமை வாடிய 
வள்ளி முதலரிந் தற்று.                                                  குறள் 1304

வாடிய கொடிக்கு
வாளி நிறைய
நீருற்றுவது போல்

கொண்ட கோபம்
குறைய
கூடி மகிழ்

அஃதன்றி
கோபம் கூடின்
கொடு வாளால்
கொடி சாய்ப்பதாகும்

2 கருத்துகள்:

Senthil சொன்னது…

இந்த திருக்குறள் வரிகள் மற்றும் உங்களது கவிதை அனைத்து விதமான உறவுகளுக்கும் பொருந்தும் என்பது எனது கருத்து. அனைத்து வரட்டு கௌரவத்தையும் துறந்து தானாக முன்வந்து அனைத்து பிறச்சினைகளையும் களைந்தால் அமைதி, சந்தோஷம் நமதே.

சிவகுமாரன் சொன்னது…

அருமையான விளக்கக் கவிதை.

கல்நெஞ்சுக்காரி

  கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...