திங்கள், செப்டம்பர் 3

5 கிலோ சர்ப் இலவசம்

ஓர் உண்மை நிகழ்ச்சி


மாலை ஒரு 4 மணி வாக்கில் 60 வயதுள்ள அவர்  2வது மாடியிலுள்ள   தனது வீட்டு பலகனியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.   மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்ற 30 வயது இளைஞன் கையை அசைத்து என்ன சார் சௌக்கியமா?

ஆங்......   நல்லா இருக்கிறேன்.

சார் நான் கொடுத்த அந்த புராடக்ட் நல்லா இருக்கா

ம்..........

மோட்டார் சைக்கிளை நிறுத்தி நேராக மாடி ஏறி சென்று விடுகிறான்.

அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை ட்யூஷன்  படிக்கிறது

அதனிடம் சகஜமாக பேசுகிறான்.

சார் அந்த புராடக்ட்..........

எதுப்பா? வாட்டர் பில்ட்டர் அக்குவா கார்டா?

ஆமா சார் எப்படி வேலை செய்கிறது

நல்லா இருக்கு

சரி நீ எப்படி இருக்க?

சார் நான் இப்ப அந்த கம்பெனியில் இல்ல

சட்டென்று காலில் விழுகிறான்

என்னை ஆசிர்வாதம் செய்ங்க சார்.  இப்ப கோத்ரேஜ் கம்பெனியில் மேனேஜரா சேர்ந்திருக்கிறேன்.

எங்க வீட்டில வாஷிங் மிஷின் சரியா வேலை செய்ல

அப்படியா எங்க காமிங்க சார்.

எங்க கம்பெனியில் ஒரு ரோட் ஷோ  அந்த பஸ் நிறுத்தம் அருகே  போட்டிருக்கிறோம்.  BUY BACK OFFER ல உங்க பழைய மிஷன எடுத்துக்கிட்டு புது மிஷன் தருகிறோம்.  ரூ.7500 மட்டும்தான் 5 கிலோ சர்ப் இலவசம்.  மேலும் ரூ,2000 கொடுத்தா ஒரு கிராம் தங்க நாணயம் கொடுக்கிறோம் சார்.

சரி செக்கா தருகிறேன்  இன்னிக்கே டெலிவரி கொடுத்துருவியா


இல்ல சார் மாத கடைசி ஆபர், பணமாதான் கொடுக்கணும்

என்கிட்ட பணம் இல்ல

பக்கத்துல்ல ஏ டி எம் ல எடுத்துக் கொடுங்க சார்.  15 நிமிடத்தில மெஷின் டெலிவரி.

சட்டையை மாட்டிக்கொண்டு கீழே இறங்குகிறார்

கீழ் வீட்டில் சற்று தள்ளி நின்றிருக்கும் மாமியின் அருகில் சென்று நலம் விசாரிக்கிறான் இளைஞன்.  அவர்களும் சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார்கள்.

தனது மோட்டார் சைக்கிளில் அமர வைத்து ஏ டி எம் அழைத்து செல்கிறான்.

பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது ஒருவரை நிறுத்தி அவன் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறார்.

அடுத்த தெருவில் காலையில் ஒரு மிஷன் டெலிவரி செய்ததாக சொல்கிறான்.   வழியில் நிறுத்தி பேசிக் கொண்டிருந்தவரிடமும் சொல்கிறான் சார் உங்களுக்கு மிஷின் வேணுமென்றால் அடுத்த தெரு பஸ் நிறுத்தம் அருகே வரச் சொல்கிறான்.

சார் பணம் கொடுங்க ஒரு பத்து நிமிஷத்தில மிஷினோட வர்றேன்.  இவர் ரூ.7500 மட்டும் கொடுக்கிறார்.

சார் ஆபர்ல ரூ. 2000 கொடுத்தா ஒரு கிராம் தங்க நாணயம் தாராங்க .  இன்றைய தங்க விலை ரூ.3000 சார்.  ஏதோ நினைத்துக் கொண்டு ரூ.2000 சேர்த்துக் கொடுக்கிறார்.

இதோ வந்திடுறேன் சார்........

15 நிமிடம்........

30 நிமிடம்  ............ சே காலில் விழுது ஆசிர்வாதம் வாங்கியவன்

60 நிமிடம்  அவன் சொன்ன அந்த பேரூந்து நிறுத்தம்.

விசாரிக்கிறார்.   அப்படியொரு ஷோ அன்று நடை பெறவே இல்லையாம்

வீட்டிற்கு ஓடி வருகிறார்.  டெலிபோன் டைரக்டரியில் கோத்ரேஜ் நெ தேடி தொடர்பு கொள்ள 

அவர்கள் இதே போன்று நங்க நல்லூரில் ஒருவன் சிலநான் முன்பு ஏமாற்றினான்.  நீங்கள் ஜாக்கிரதையா இருக்க கூடாதா என்கிறார்கள்.

தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையம் செல்ல

சார் மோட்டார் சைக்கிள் நெ தெரியுமா?  ஐடி கார்டு பார்த்தீங்களா

என்ன சார் ....  எதுவுமே தெரியாதா

எப்படி கம்பிளையண்டு எழுதுறது.  அந்த ஆள எங்கியாவது பார்த்த நீங்களே சொல்லுங்க சார்

விதியை நொந்து கொண்டு வந்து விட்டார்

இப்போது  Hindu  வில்   Letter to Edit  எழுதி கொண்டிருக்கிறார்
Mylapore Times  க்கு அவருடைய சோதனையை எழுதி 

மூத்த குடிகளே உஷார் என்கிறார்


இந்த சோகத்திற்கு சொந்தக்காரர் எனது பக்கத்து வீட்டுக்காரர்


எனவே ஆபத்தை நீங்களே விலைக் கொடுத்து வாங்காதீர்கள்

விழிப்புடன் இருங்கள்


குறும் படம் எடுக்கும் பதிவர்கள் இந் நிகழ்வை குறும் படமாக எடுத்து ஒரு விழிப்புணர்வை எல்லோரிடமும் எடுத்து  செல்லுங்களேன்.





கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...