நேருவின் கதையை
நெட்டுரு
செய்து கொண்டிருந்தான்
எனது மகன் அருணன்
அப்பா
நாம் இறந்த பிறகு
மேலுலகில்
நேருமாமாவை
பார்க்கலாமல்லவா
என்றான்
எப்படி என்றேன்
மூச்சு நின்றவுடன்
பூமியிலிருந்து
மேலே சென்றால்
பார்க்கலாம் என்றான்
மூச்சு
மூஞ்சூறு வாகனத்தில்
செல்லுமா என்றேன்
நான் ஈ
திரைப்படத்தில்
ஈ முட்டையில்
ஆன்மா (மூச்சு)
சென்றதென்றான்
ஆம்
மலத்தில் நெளியும்
புழுவாக கூட
ஆன்மா இருக்கலாம்
எதற்கும் திரும்பி
பாருங்கள்
4 கருத்துகள்:
சரியாகச் சொன்னீர்கள்... எது நினைக்கிறோமோ அது போல...
நல்ல ஒப்புவமை!......
வேதா. இலங்காதிலகம்.
தனபாலன்
தென்றலை புயல் என்றால் உலகம் எற்கா
அதுபோல எதை நினைக்கிறோமோ அது போல ஆகா
சிறு பிள்ளையை பயமுறுத்தாதீர்கள். அருணனை அரவனைப்போடும் ஆதரவான கருத்தோடும் அழைத்துச் சென்று உண்மை எதுவென்பதைப் பற்றி தெளிவாக புறியும்/அறியும் நிலையில் தெளிவுப்படுத்துவது நன்று.
கருத்துரையிடுக