ஆதார்
அட்டை
அட்சயப்
பாத்திரமா?
ஆட்காட்டி
பத்திரமா?
கண்ணின்
கருவிழி
காமிராவில்
பிடிக்கிறான்
களவாடினாயா
நீ
பத்துவிரல்
ரேகையை
பதித்து
பாதுகாக்கிறான்
பாகிஸ்தான்
ஆளா நீ?
காஸ்
இணைப்புக்கு
கையில்
காசென்கிறான் - அட
காச நீதானே
கொடுக்கிற
வங்கி
கணக்கிற்கு
வசதி
படுமென்கிறான் – இப்ப
கஷ்டமா
படுகிறாய்?
ரேஷன்
மானியம்
நேரடியா
வருமாம் – அட
நீரா
ராடியாவுக்குமா?
கொடுத்த
பணத்தை
எடுத்துக்
கொடுத்தா
கடன்தானே
கழிந்தது
நாளொரு
இடம்
பொழுதொரு
வாழ்க்கை
புரட்டிடும்
திரட்டிடும் அட்டை
சொத்து
வாங்கிட
விவாகரத்து
செய்திட – அரசு
அனைத்தும்
அறிந்திடும்
ஒவ்வொரு
நடவடிக்கையும்
ஒவ்வொரு
நாளும் – அட்டை
ஒற்றனாய்
தொடரும்
விழித்துக்
கொள்ளடா!
வேண்டாம்
வேண்டாம் – இந்த
ஆதார்
அட்டை
2 கருத்துகள்:
ஆதார் அட்டையினை புதிய கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.... நாங்கள் இன்னும் ஆதர் அட்டை வாங்கவில்லை...
கருத்துரையிடுக