பஞ்சப் பாண்டவர்களாம்
பக்தி இலக்கியமாம்
பாராய்!! கதை கேளாய்!!
மானிரண்டு மையலிலே
மன்னன் பாண்டுவோ
காட்டில் வேட்டையிலே
கொன்றனன் ஆண்மானை
கட்டற்றக் கலவிக்காக
கடுந்தவ வலிமையால்
கிண்டமா முனி இணையோடு
கலைமானாய் இணைந்திருக்க
மாண்டது மானென
மன்னன் நினைக்கையில்
பக்கம் சென்றனன்
பார்த்தால் கிண்டமா முனி
இட்டான் சாபம்
இச்சையோடு இல்லாளை
இப்பிறவியில் அணுகினால்
இகலோகமன்றுப் பரலோகமென
இட்ட சாபம் கேட்டு
இடிந்து கலங்கி
அத்தினாபுரம் செல்லாது
ஆரண்யத்தில் வாசம் செய்கிறான்
மன்னனாக நீடிக்க
மகன் இல்லையே என
மருகி நிற்க
சுவேதகேது முனியின் நியதிப்படி
காதல் சுகம் அறியாதவன்
காதலோடு தொட்டால்
மரணமென
மாமுனி உரைத்ததால்
கொண்டவன் விரும்பும்
குணாளனோடு கூடிக்
குழந்தைபெறக்
குந்தியிடம் வேண்டினான்
அன்றே துர்வாச முனி
பிற்காலச் சிக்கல் அறிந்து
தேவர்களோடுக் கூடும் வரம்
குந்திக்கு அளிக்க
சோதிக்கச் சூரியனை அழைக்க
கர்ணனை ஈன்றாள்
கங்கையில் விட்டு
கன்னியாய் இருந்தாள்
முனியோடுக் கூடுவதா
தேவர்களிடம்
தேவையைக் கூறினால்
தேடி வாராரா என்றாள்
தர்மத்தின் தலைவன்
தயை கொண்டான்
யமனை அழைத்தாள்
யுதிஷ்ரன் பிறந்தான்
வாயுப் பகவானோ
வசதியாய்
தன் சக்தி தர
பீமன் பிறந்தான்
தேவர்களின் தலைவன்
தேர்ந்த அழகன் இந்திரன்
தேவையறிந்து
தந்தனன் அர்ஜுனனை
மாற்றொரு இணை
மாத்ரி தேவி
மழலை வேண்டுமல்லவா
குந்தியே வேண்டுகிறாள்
அஸ்வினித் தேவர்கள்
இரட்டையர் அவர்கள்
நகுலனும் சகாதேவனும்
நலமுடன் பிறந்தனர்
பாதி தேசம் வேண்டிய
பாண்டவர்கள் பிறந்தது
தேவாதித் தேவர்களுக்கு
தேவையா இப்பாரதம்
2 கருத்துகள்:
ஐயகோ...
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
கருத்துரையிடுக