தேசப் பக்தி
திரும்பியப் பக்கமெல்லாம்
சீன எதிரியை
சீக்கிரம் அழித்திட
உயிர்கள் 20
உலகை விட்டு மறைந்தது
ஊர்சுற்றி
ஒரு வார்த்தை சொல்லவில்லை
உலக நாடுகள்
உம் என்றிருந்தன - ஏன்
ஊர் சுற்றியை
உலகம் கைவிட்டது
சீனத் தயாரிப்புகளை
தவிர்க்கச் சொல்லி
தேசப் பக்தர்கள்
கோரிக்கை வைக்க
ஆம் என்றே
ஆமோதிக்க
அச்சம் உண்டா
அமைதி தவழ்கிறதே
அரசுதான்
அறிவிக்க வேண்டும்
இறக்குமதிக் கொள்கையை
ஆகட்டும் என்றொரு வார்த்தையில்லை
குறைந்த விலை
குறைந்தக் கூலி
குவிந்தக் கூட்டத்தை
குறையாதுப் பார்த்துக் கொண்டான்
உலகமயமாக்கலில்
உள்ளூர் தொழில்கள்
ஊனமாயினப் போட்டியில்
ஊமையாய் அமைதிக் காத்தனர்
அமெரிக்க ஐபோன்
இந்தியாவில் விற்க
சீனம் தயாரித்தது
சினமெதற்குப் பக்தர்களே
கொரோனாவின் தாக்கத்தால்
பன்னாட்டுத் தொழில்கள்
சீனாவிலிருந்து புலம்பெயருமென
கனாக் கண்டாய்
ஐரோப்பிய மக்களுக்கு
ஆசிய மக்களுக்கென
தரம்பிரித்து தயாரிப்பவன்
வீழ்வான் என நினைத்தாயோ
ஆயுதமின்றி வீழ்ந்தது
அவனல்ல - நம்
புதல்வர்கள் - ஆக
அரசியலைப் புரிந்து கொள்
1 கருத்து:
விவரம் அறியா பக்தாள்கள்...
கருத்துரையிடுக