குருசேத்திரப் போரில்
குலம் கெடுமேயெனக்
கோகுலக் கிருஷ்ணனிடம்
கோரிக்கை வைத்தவன்
தூரோணணிடம் கற்றாலும்
ஏகலைவனைக் காட்டிலும்
ஓருபடிக் கீழான
அர்ஜுனன் கதையிது
சுயம்வரப் போட்டியில் வென்று
பாஞ்சாலியை அழைத்து வர
வென்றது யாதென அறியா- குந்தி
ஐவரும் பகிர்க என்றதனால்
ஆண்டுக்கு ஒருவரிடமென
ஐவரோடு வாழ்ந்த
திரெளபதியின்
மூன்றாவது மணாளன்
குந்தியின் மகனா
இந்திரன் மகனா
இயம்பினால்
பாண்டு கோபிப்பானோ
குடும்பம் விடுப்போம்
குருசேத்திரம் வருவோம்
குலப் பெண்களின் – கற்புக்கு
கவலைப்பட்டக் கதை பார்ப்போம்
பேராசைப் போரால்
அதர்மம் பரவும்
சாதிக் கலப்பால்
குல நாசமாகுமன்றோ என்றான்
சிக்கலுக்குப் பதிலுரைக்காது
ஆன்மா இறப்பற்றது – ஆக
கர்மம் செய்
கலங்காதே என்கிறான் கிருஷ்ணன்
கற்பும் சாதியும்
அர்ஜுனனின் கவலையா
கீதாசிரியனின் கவலையா
பார்ப்போம் வாருங்கள்
வனவாசத்திற்குப் பின்
யாதவக் குல நகரான
துவாரகா விஜயம்
சுபத்திராவைக் காண - காதல்
பலராமனோ சுபத்திரையை
துரியோதனுக்கு நிச்சயித்து
ஏற்பாடுகள் நடக்க
ஏமாற்றத்தோடு அர்ஜுனன்
வாட்டம் போக்க
வழியைச் சொன்னான் கிருஷ்ணன்
சன்னியாசி வடிவெடுத்து
சுபத்திரையைக் கவர்ந்தான்
ஆனது ஆனதென
அவளோடு மணம்புரிய
அபிமன்யு பிறந்தான்
அத்தோடு முடியவில்லை
ஓராண்டுக்கு ஒருவர்
விதிமீறினால் ஓராண்டு வனவாசம்
விதிவசம் விதிமீறினான் அர்ஜுனன்
உலூப்பியைச் சந்தித்தான்
பாம்புருவக் காரிகை
நீரினங்களில் நாயகி
போர்கலைகளில் வல்லவள்
மோகங் கொண்டாள் அர்ஜுனனிடம்
கங்கைத் தீரத்தின்
நாகமன்னனின் மகளவள்
சம்மதிக்கச் செய்து - அர்ஜுனனை
பாதாளம் கொண்டுச் சென்றாள்
பாதாள உலகில்
பார்த்தனோடு உலூப்பி
அரவான் என்றொரு மகனை
அர்ஜுனனுக்காக ஈன்றெடுத்தாள்
பரந்த உலகில்
பலவூர்ச் சுற்றிய அர்ஜுனன்
மணிப்பூரில் மாலையிட்டான்
சித்திராங்கதை என்பவளுக்கு
அவ்வூர் நியதிப்படி
அவளையோ அவள் வாரிசையோ
அர்ஜுனன் அழைத்துச் செல்ல முடியாது
அதற்குடன்பட்டேப் பாப்புருவாகனன் பிறந்தான்
பாப்புருவாகனனுக்குப் போர்கலையை
உலுப்பிக் கற்பிக்க
தொடுத்தனன் அம்பை
அர்ஜுனன் நோக்கி
ஊருகொன்றுக் குலத்திற்கொன்றென
உல்லாசமாய் இருந்தவனா
குலம், கற்பெனப் பேசினான்
கொஞ்சம் சிந்தியுங்கள்
பகவத் கீதை
பம்மாத்து
பார்த்துப் படியுங்கள்
பல உண்மைப் புரியும்
1 கருத்து:
வெளியில் சொல்ல முடியாத பல உண்மைகளும் உள்ளன...
கருத்துரையிடுக