சனி, மே 18

கண்மூடும் வேளையிலே





கண்மூடும் வேளையிலே
கனவில் வந்தவளே
பண்பாடி அலைந்தோம்
பசுமைச் சூழ்வெளியில்
தண்நிலவு நீண்டிருக்க
தந்தநின் முத்தங்கள்
மண்ணுலகில் உன்னிடமே
மறுபடியும் வேண்டுகிறேன்

தண்டையிடும் சத்தம்
தளிர்நடை என்றானதே
சண்டையிடும் மனதும்
சங்கமத்தை வேண்டுதே
தொண்டுச் செய்ய
தோழமையை விரும்பும்
வண்டு பூவிடம்
வனைந்த பாவிது

கண்விழிக்க கலைந்தன
கண்மணி யாரென
அண்டை அயலகத்தில்
ஆர்வமாய் தேடிட
எண்ணிய வண்ணம்
எவரும் இல்லை
கண்ணூறுப் பட்டிருக்கும்
காத்திரு காதலிக்க

கருத்துகள் இல்லை:

முப்பாட்டன் முருகன்

தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவனானதால் முப்பாட்டன் முருகனுக்கு முத்தமிழ் மாநாடு சொக்கனுக்கு முக்கண்ணிருந்தாலும் அக்கக்காய் ஆய்ந்த ந...