சனி, பிப்ரவரி 21

தேர்தல் வந்து தீர்ந்ததென்ன?

 









தேனாறும் பாலாறும்
தேர்தல் வந்தா ஓடுமா
ஏனோ தானோ
என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா
தானமா தந்ததற்கு
தருவது உனதுபொன் ஓட்டா
மான மில்லா
மாறும் கட்சியில் கூட்டா

தர்ம ராசா
தந்த இலவச மெல்லாம்
வர்க பேதத்தில்
வரிகளா வாரி அள்ளியதே
மர்ம தேர்தலில்
மாறிமாறி ஓட்டுப் போடு
நர்தன மாடு
நரகலில் நல்லதை தேடு

இரட்டை என்ஜின்
இறகு முளைத்து வருமா
புரட்டும் பொய்யும்
புடம்போட மெய்யாய் மாறுமா
குரட்டை விடாது
குளறுபடி எங்கென கண்டுபிடி
அரற்றாது ஆனவரை
அழுகலை அடியோடு வெட்டியெறி

ஆதார் இருந்தாலும்
ஆறேழு மென்பொருள் கண்டாலும்
பேதங்கள் இந்துக்களில்
பேருண்மை என்றே உரைப்பர்
ஆதரவா கையூட்டு
அவர்பேரில் பட்டா மாறுமென்பர்
ஏதும் மாறாதெனில்
எதற்கிந்த உரிமை யோசியுங்கள்

அ. வேல்முருகன்

திங்கள், பிப்ரவரி 16

ஒய்யாரம்

















விலகி விலகாத
விடிவெள்ளி விழித்தேன்
உலகில் உருவான
ஒய்யாரம் ரசித்தேன்
துலங்கிடும் பேரழகில்
துள்ளிதுள்ளித் திரிந்தேன்
நலங்கிட்டு நானுனை
நாயகியாய் கொண்டேன்

மஞ்சத்தில் மயக்கம்
மன்னனை நினைத்தா
அஞ்சனமும் அகிலும்
அத்தானை அணைப்பதற்கா
கெஞ்சிக் கொஞ்ச
கொட்டிப் பேசுவியோ
தஞ்சமென நெஞ்சை
தந்தபின் மிஞ்சுவியோ

வெற்றிலைத் தரித்து
வேள்வியில் விற்பன்னராய்
சிற்றிடையில் கற்றிட
சிறகொன்று முளைத்திட
முற்றிலும் முகிழ்ந்து
முடிவின்றி தொடர்ந்திட
இற்றிசையில் இற்கிழத்தி
ஈந்தது பேரின்பமே


அ. வேல்முருகன்




ஞாயிறு, பிப்ரவரி 15

கண்ணசைவு















காத்திருந்த கண்ணனுக்கு
கண்ணசைவில் கதைகளா
நேற்றிருந்து நித்திரையில்
நிலவொளியாய் ஆடுதியே
பூத்திருக்கும் ஆசைகளை
பூவிழியில் சொல்லுதியே
யாத்திரையின் வழிதனை
யாழினில் இசைக்குறியே

விழியரங்க வித்தைக்கு
வியாக்கானம் எழுதுகிறேன்
அழியாத அக்காட்சி
அக்மார்க்காய் பதிகின்றது
எழிழ்மிகு இமைகளும்
எனையே தாக்குகிறது
மொழியற்ற முகவரிகளில்
மொக்குகள் மலர்கிறது

காதலைக் கற்பிக்கும்
கருவிழி நாடகங்கள்
நாதனை நானாவிதம்
நாள்தோறும் நோக்கும்ரதம்
மேதமை கருவிழிகள்
மேதினியில் மோதும்வரை
வேதிவினை மாற்றங்கள்
வேந்தனிடம் விளைந்திடுமே


அ. வேல்முருகன்





சனி, பிப்ரவரி 14

காதலின் திருநாள்

 












காதலால் கனிந்துருக
கண்டநாள் இந்நாளோ
ஆதலால் அகிலமே
ஆராதிக்க அனுமதியோ
தூதால் துணையவள்
துணிந்திங்கு வருவாளா
ஈதலால் ஈருடல்
இசைதிங்கு சேருமோ

ஏந்திழை ஏனையாளும்
ஏகாதி பதியாகிட
வேந்தன் வேலவன்
வேட்கையை வெளியிட
காந்தக் கண்ணழகு
கண்ணிமைக்க மறக்குமே
தீந்தமிழ் தேன்குரல்
தீண்டுமே மனதை

உன்னதமே உனதன்பு
உவரெனை உருமாற்றவே
என்னாளும் எனதன்பு
எனையாளும் தேவிக்கே
நன்னாளாம் நானவளை
நாழிகையும் பிரியாததே
இன்னலாம் இனியவளுக்கு
இவனின்றி இயங்குவதே

காற்றும் கடலலையும்
கணப்பொழுதில் மாறும்
நேற்றும் என்றென்றும்
நேசமது மாறாது
போற்றும் பொன்மானை
பொழுதும் பிரியாது
ஏற்றமுடன் இணைந்தே
எந்நாளும் வாழ்ந்திடவே

வாழ்த்தும்
அ. வேல்முருகன்

வெள்ளி, பிப்ரவரி 6

இதுவொரு தாலாட்டு
















ஆராரோ ஆரிரரோ
ஆரடிச்சா கண்மணிய
அமெரிக்கா தானடிச்சதோ
அதிபரையும் கடத்தியதோ

எப்ஸ்டீன் கோப்புகளில்
யார்யாரோ ....
ஏகப்பட்ட படம் காட்டி
இந்தியாவை கொள்ளையிடுவாரோ

ஈரானில் கலகமோ
சிரியா உதவுமோ
அறியலையே என் கண்மணி
அமைதி திரும்ப கண்ணுறங்கு

இஸ்ரேல் குண்டுமழை
இடைவிடாது பொழியுமோ
பாலஸ்தீன குழந்தைகள்
பள்ளிக்கூடம்தான் போவாரோ

பதைபதைப்பு ஏதுமின்றி
பாரெல்லாம் உறங்குது
படைகளோடு சீனா வந்தாலும்
பாரதம்போல கண்ணுறங்கு

உக்ரேனில் நேட்டோவும்
ரூஷ்யாவின் புதினும்
ஓடிப்பிடித்து விளையாட
ஒய்யார நடைநடக்குது சீனா

கண்ணுறங்கு கண்ணுறங்கு
என் கண்மணியே கண்ணுறங்கு
ஆரோரோ ஆரிரரோ

கீரின்லாந்தோ
ஐஸ்லாந்தோ
வாங்கித் தாறேன்
வாய்மூடி கண்ணுறங்கு

பாகிஸ்தான் எதிரியென
இந்தியாவின்
பம்மாத்து கதைகேட்டு
கண்ணுறங்கு கண்ணே

கண்டம் விட்டு
கண்டம் பாயும்
ஏவுகணைய
காசுக்கு ரெண்டு
வாங்கித் தாரேன் கண்ணுறங்கு

குடிக்க பெப்சி கோக்கு
நடக்க அடிடாசு
உதட்டுச் சாயம் ரெவ்லான்
உட்கொள்ள கெண்டகி சிக்கன்
உனக்கேதான் கண்ணுறங்கு


அ. வேல்முருகன்


கண்மூடி உனை....

 


நினைத்தவுடன்
நினைக் காண
நித்தமும் ஆசைதான்

ஏழுலகம் தாண்டி
எனைத் தவிக்கவிட்டு
எந்நேரமும் நினைவுகளோடு

ஆகாசப் பயணத்தால்
அன்பேயுனை
அருகிருந்து காணலாம்

ஆயினும்
கண்ணிரண்டை மூடி
கண்ணாளா வாவென்றால்
கணப்பொழுதில் வந்துவிடுவாய்

ஆங்கே..
என்னிதய துடிப்பு
ஏழிசை மீட்டுவதாய்
எகத்தாளம் செய்வாய்

அந்த அன்பிலே
ஆசுவாசப் படுத்திக் கொண்டு
ஆனந்தமாய்தான் இருக்கிறேன்

ஆக
கண்விழித்திருப்பதை விட
கண்மூடி உனை காண்பதிலே
காலங்கள் உருண்டோடுதடா

அ. வேல்முருகன்

புதன், பிப்ரவரி 4

மெய்யும் அறிவும்

 









உடலது அறிவை
உள்ளபடி ஏற்காது
உடன்படுவ தில்லையென
உறுதியான முடிவுகள்
தடாபொடா சட்டங்கள்
தடாலென மாறிடும்
அடடா அற்புதமென
அனுமதி அளித்திடும்

தேகத்தின் விதிகள்
திருத்தங்கள் செய்திடும்
மோகத்தின் சுருதிகள்
மோகினியாய் பாய்ந்திடும்
யோகமே தகுதியாகி
யௌவனம் மகிழ்திட 
சாகசப் பகுதியில்
சகலமும்  கற்றிட

தடுத்தாட் கொள்வதும்
தட்சணைகள் அளிப்பதும்
கொடுப்பதும் எடுப்பதும்
கொள்கை என்றல்ல
தொடுதலின் கொதிநிலைத்
தொண்டினை ஏற்பதும்
விட்டுக் கொடுக்க
வித்தைகள் கற்பதும்

தோகை யவளிடம் தோற்று
தேவையை அறிந்திடு
வாகைச் சூட வள்ளலாய்
வாரி வழங்கிடு  
பூவையின் மென்மை - தென்றலின்
புழுதியற்ற புயலாகும்
ஆகையால் உன்னில் ஆனந்தம்
ஆர்ப்பரித்து பெருகும்

அ. வேல்முருகன்

தேர்தல் வந்து தீர்ந்ததென்ன?

  தேனாறும் பாலாறும் தேர்தல் வந்தா ஓடுமா ஏனோ தானோ என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா தானமா தந்ததற்கு தருவது உனதுபொன் ஓட்டா மான மில்லா மாறும் கட்சி...