சனி, நவம்பர் 28

வழக்கொன்னு கேளடி

 








ஊரணி நிறைஞ்சிருக்கு
உளுந்து விதைச்சிருக்கு
வரப்புவழி போறவளே,
வாரியா களையெடுக்க?

யாரை நீ அழைக்கிற?
ஏகத்தாளம் பண்ணுற!
மாரன் மாப்பிளையா?
மனசு நினைக்குதயா?

பேரழகி நினைப்புதானே
பேசத் தூண்டுது!
ஆரம்தான் வாங்கியாறேன்,
ஆறஅமரப் பேசலாமா?

களையெடுக்க, கதிரறுக்க,
கருக்கரிவா கையிலிருக்க!
வளைகரம் தேடாதே,
வெள்ளாமை வீடேறாது!

வக்கணையா பேசறவளே,
வகைவகையா வடிச்சுக்கொடு!
தெக்கத்தி ராணியாக்கி,
தேரோட்டி வாரேன்!

நோக்கமது நடந்திட,
நோகாமக் கேட்டுப்புட்ட!
பூக்களது பூத்திட,
பொழுதுகள் வேண்டாமா?

அ. வேல்முருகன்


கருத்துகள் இல்லை:

வழக்கொன்னு கேளடி

  ஊரணி நிறைஞ்சிருக்கு உளுந்து விதைச்சிருக்கு வரப்புவழி போறவளே, வாரியா களையெடுக்க? யாரை நீ அழைக்கிற? ஏகத்தாளம் பண்ணுற! மாரன் மாப்பிளையா? ...