செவ்வாய், டிசம்பர் 6

ரூ.14 இலட்சம் கோடி- 22500 முதலாளிகள்

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நம் முதலாளிகள் ரூ.10 கோடி அதற்கு மேல் வாங்கிய கடன் 14 இலட்சம் கோடியாம்.  வாங்கியவர்களின் எண்ணிக்கை 22500.

ரூ.10 கோடி அதற்கு மேல் கடன் வாங்கிய 700 பேர், ஏறக்குறைய ரூ. 26000 கோடி கட்டாமல் எவ்வித தொல்லையுமில்லாமல் அதாவது வழக்குகள் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் 3400 வழக்குகள் ரூபாய் ஓரு கோடி அதற்கு மேல் பெற்ற கடனுக்காக கடன் வசூல் தீர்பாயத்தில் நிலுவையில் உள்ளது.   இதன் மூலம் வர வேண்டிய தொகை ரூ.21,400 கோடி.

கடன் வாங்கி ஏமாற்றிய முதலாளிகள் அத்தோடு விடுவதில்லை, வேறொரு நிறுவனம், வேறொரு வங்கி என எமாற்றிக் கொண்டுதான் இருகின்றனர்.

 CIBIL: Credit Information Bureau (India) Limited என்ற நிறுவனம் இவர்களை பற்றி தகவலை சேகரித்து வைக்கிறது.  இத்தகவலை பாதிக்கப்பட்ட வங்கி அளித்தால்தான் இதன் தகவல் பெட்டகத்தில் பார்க்க முடியும்.  ஆனால் எல்லா வங்கிகளும் அவ்வாறு செய்வதில்லை.  அதுவும் ஆளுக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்கின்றன.

அரசியல் பின்புலம்,  பணம், ரவுடியிசம் இவைகள் வங்கி அதிகாரிகளை கட்டி போட வைக்கின்றன.  ஒன்று அவர்களுக்கு சதகமாக நடக்க வைக்கிறது அல்லது அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகிறது.

வங்கியின் கடன் 1993 வரை பொது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.  1993 க்கு பிறகு கடன் வசூல் தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.  வங்கிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கடனுறுதி மற்றும் மறுசீரமைப்பு சட்டம் 2002 (SARFAESI ACT 2002)  இயற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயினும் முதலாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர்.

ரூபாய் ஒரு கோடிக்கு மேற்பட்ட கடனில் ஏதேனும் தவறுகள், குற்றங்கள் நடைப்பெற்றால் சி.பி.ஐ க்கு அதன் விவரம் அனுப்பி வைக்கப்படும்.  அதன் பிறகு வங்கி அதிகாரிகள் மறந்து விடுவார்கள்.  அவர்களை பொறுத்தவரை அது சிபிஐ விவகாரம்.  முதலாளிக்கு ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ விசாரணை. கைது கண்டிப்பாக இருக்காது.  ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் பணம் வசூலிக்க வழியில்லை.

குற்றவியல் நடவடிக்கை,(criminal action)  வங்கியால் எல்லா கணக்குகளிலும் நடைபெறுவதில்லை.   அவ்வாறு மேற்கொண்டால் வங்கி அதிகாரிகளின் செயல்பாடு தடைபடும்.  அதாவது அவர்கள் கடன் வழங்கும் போது அளவுக்கு அதிகமான கேள்விகள், ஆதாரங்கள் கேட்டு கடன் வழங்குவதை நிறுத்தி விடுவார்கள்.   ஏனெனில் பின்னால் அவர்கள் பாதிக்கப்படலாம் என்பதால்.

அதனால் முதலாளிகள் தீர்மானிக்கின்றனர் கடனை திருப்பி செலுத்தலாமா வேண்டாமா? எவ்வளவு செலுத்த வேண்டும்.  தள்ளுபடி எவ்வளவு கோரலாம்?  மத்திய வங்கியின் வழிகாட்டுதல் என்ன?

எல்லாம் அறிந்தவர்கள் அவர்கள்.  நாம் வீட்டுக் கடன், கல்வி கடன், விவசாய கடன், தனிநபர் கடன் வாங்கி வீட்டை, விவசாய நிலத்தை இழந்து நிற்கும் அப்பாவிகள்

யார் நல்லவர்கள், எல்லாம் இழந்து அப்பாவியான நாமா, எதையும் இழக்காமல் பொது மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்ட முதலாளிகளா

கருத்துகள் இல்லை:

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...