திங்கள், மார்ச் 21

முத்துப் பல்லழகி

முத்துப் பல்லழகி
         மோகனச் சொல்லழகி
சித்தம் கலங்குதடி
         சிரித்திடும் அழகிலடி
நித்தம் யோசனையடி
        நீயெனக்கு சொந்தமென
தத்தம் செய்வாயோ
       தடையென உரைப்பாயோ

ஆசை அடங்கலடி
       ஆதலினால் வேணுமடி
மீசை துடிக்குதடி
        மிச்சமும் எதிர்பார்க்கிறேனடி
ஆவண செய்வாயென
        ஆவலாய் காத்திருக்கிறேனடி
தவணைத் தரலாமென
         தள்ளி போடாதடி

எங்கு சென்றாய் என்னவளே...

மங்கும் மாலை யெல்லாம்
         மங்கை உனது நினைவுதான்
அங்கு மிங்கும் சுற்றிய
         அந்த பொழுது இனிமைதான்
எங்கு சென்றாய் என்னவளே
         எதிலும் உனைநான் தேடுகிறேன்

தங்கமே உன்னை காணாது
         தவிப்பவனை தணிக்க வாராயோ
திங்கள் கடந்தும் அன்பே
         திசைதான் மறந்து போனாயோ
அங்கம் மெலிய அவரவர்
         ஆரிவன் என்று கேட்கின்றனர்

சித்திரமே என்சொத்து பத்திரமே
         சீக்கிரம் வந்திடு அருகே
நித்திரையும் எனக்கு சித்திரவதையே
         நீயிங்கு இல்லை உயிரே
முத்திரையாய் நின்னிதழ் பதித்தால்
         மூச்சுக்கு உத்திர வாதமே

கனவா?......... பேராசையா?........





மணமுடித்த மங்கையான்
        மனதில் கொண்டது ஆசையா
கனவாகும் காரணத்தால்
       கணக்குப் படியவை பேராசை
என்னவென கேள்வியால்
       ஏறிட்டு நோக்கும் விழிகளே
கணக்கிடும் தோல்வியால்
       கவலை தீரவும் வழியில்லை

கணவனுடன் கைக்கோர்த்து
        காலாற நடந்து மாலை
மணக்கும் மல்லிகை
         மரிக்கொழுந்துச் சூடி நல்ல
வண்ணத் திரைப்படம்
       வரும்வழியில் நல்உண வோடு
மென்பனிக் கூழருந்தி
        மஞ்சத்தில் மகிழ கனவு

வாக்கப்பட்ட மனுசனுக்கு
        வடித்துக் கொட்டி வசவுவாங்க
ஏக்கப்பட்ட மனதுக்குள்
        ஏகப்பட்டக் காயங்கள் உருவாக
ஆக்கப்பட்டக் கனவுகள்
       ஆப்பறைந்து யாவும் சருகாக
தாக்கப்பட்ட உணர்வுகள்
       தென்றலாய் மீண்டும் வருமோ

உள்ளக் கொதிப்பை
        உறவிடத்தில் சொல்லிக் கலங்கிட
தள்ளியது குழியென்று
       தானும் சேர்ந்து மருகிட
சொல்லியக் கனவுகளை
       சொந்தம் ஒருநாள் செய்திட்டு
மெல்லக் கூறியது
       மகளே இப்போது மகிழ்ச்சியா

இணையோ இதமோ
        இவர்கள் செய்வது எனக்கு
துணைதான் என்றாலும்
         துணையிணைப் போல வருமா
தொலைந்தது கிடைக்குமா
        துவளும் உள்ளத்தின் ஏக்கவினா
வலையில் விழுந்தபின்
        வாழ்க்கையை நினைப்பது வண்ணகனா

புதன், மார்ச் 16

ஓட்டு போடாதே

இந்த சொல் 80 களின் மத்தியில் மக்கள் கலை இலக்கிய கழக தோழர்கள் மூலம் அறிமுகமாகியது.  ஓட்டு போடும் வயது வந்த பருவம்.  அவர்கள் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதாக எனக்கு பட்டது.  அதிலிருந்து இன்றுவரை எந்தவொரு தேர்தலிலும் என்னுடைய கைவிரலை கரையாக்கிக் கொண்டதில்லை.

எத்தனையோ நண்பர்கள் உரிமை என்றனர். மற்றவர் கடமை என்றனர். மகஇக மட்டும் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கடமையும் உனக்கு வரும் போது தவறு செய்யும் இவர்களை திருப்பி அனுப்பும் உரிமை உனக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர்.

வீட்டு அனுப்பும் உரிமை 356 பிரிவுக்கு உள்ளது.  முனுமுனுக்க கூட உனக்கு உரிமையில்லை. உரிமையில்லாததில் உனக்கென் வம்பு.

அரசியல் மக்களுக்கான சேவை என்பதிலிருந்து தொழில் என மாறி நீண்ட நாட்களாகி விட்டது எனவேதான் தேர்தல் ஆணையமும் ரூ.16 இலட்சம் மூதலீடு செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளது.  மூதலீடு மூழ்கிபோகலாம் அல்லது 300 மடங்காகவும் மாறலாம்

4 பேர் மூழ்க போகிறான். ஒருவன் 300 மடங்கு சாம்பாதிக்க போகிறான்.  நடுவில் நாம் எதற்கு எனவே அனைவரும்

ஓட்டு போட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

ஞாயிறு, மார்ச் 6

குழந்தை தேடிய கடவுள்

கடந்த ஞாயிறு
அடர்ந்த முடிதிருத்த
அகவை ஏழுகொண்ட
அருணனை
அழைத்து சென்றேன்

அருகிலிருந்த அங்காடியில்
வண்ணப் மீன்கள்
காதல் பறவைகள்
அவற்றோடு 
கோழிக் குஞ்சுகள்

ஆடிக் குதிக்கும் பருவத்தில்
ஆசை பிறந்தது
ஓரு குஞ்சு வளர்க்க
ஆயிரம் காரணம் சொல்லியும்
அடம் பிடித்ததால்
ஆகட்டுமென ஒன்று வாங்கினேன்

இருக்கும் மனிதருக்கே
இடப் பற்றாக்குறை
இதில் இரண்டாம்தளம் வேறு
இங்குமங்கும் பார்த்து
பலகனியில் இட ஓதுக்கீடு

கோதுமை அரிசி குருணை
குடிக்க தண்ணீர் என
குதுகல ஆரம்பம்

கோழிக்குஞ்சு வந்ததை
குடியிருப்பிலுள்ள
குட்டிக்களுக்கு தெரிவிக்க
அவர்களும் விஜயம்

அருணன்
படிப்பை மறந்தான்
விளையாட்டை மறந்தான்
நண்பர்களை மறந்தான்
ஆம் 
அவனுக்கு
தோழனாக
விளையாட்டு பொருளாக
ஆனது கோழிக்குஞ்சு

காலை கண்விழித்து
வணக்கம் சொல்வது
கொஞ்சுவது எல்லாம்
எங்களையல்ல... 
கோழிக்குஞ்சை 

மாலை பள்ளி விட்டதும்
அம்மாவை கேட்பது
கோழி சாப்பிட்டதா
தண்ணீர் குடித்ததா

இரவிலும் 
இதே கதை
அம்மா போ
எனது குட்டிக் கோழிக்கு
சாப்பாடு ஊட்டு

மகனின்
அன்பையும்
அதிகாரத்தையும் கண்டு
அவளுக்கு பூரிப்பு

அருகிலமர்ந்து
ஆனந்தப்பட்டு
தாவி மேலேறி
தவழ்நத அக்குஞ்சு
இன்றில்லை

ஏனம்மா செத்து போச்சு
உயிர் வராதா
ஒரே சோகம்

வாடிய முகம்
காலை உணவை மறுத்து
கவலையோடு உட்கார்ந்திருக்கிறது

அப்போதுதான் கேட்டான்
அம்மா 
கடவுள் உயிர் கொடுக்க மாட்டாரா

அம்மாவோ
செத்த பிறகு 
உயிரேது என்றாள்

ஆம் 
இருப்பவன் 
செய்த உயிரை
இல்லாதவன்
எப்படி தரமுடியும்







மனிதம்

மனிதன் எந்த நிலையிலும் மனிதன்தான்.  கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பிரச்சினை.  அலுவல உதவியாளனாய் ஒருவன் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிகிறான்.  அவனுடைய வேலை தண்ணீர், டீ கொடுப்பது அலுவலக கோப்புகளை கொண்டுவருவது.  என்னில் மூத்தவர், நிறுவனத்தின் நலனில் அக்கறை கொண்டவர் அந்த குறிப்பிட்ட உதவியாளன் கோப்புகளை எடுக்க அவர் அறைக்கு வரக் கூடாது அல்லது அலமாரியை அவர் அறைக்கு வெளியே வைக்க சொல்லிவிட்டார்.

ஏன் எதனால் இந்த செயல் அவருக்கே வெளிச்சம்


ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...