அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 16

அன்பெனப்படுவது....










ஆருயிரே என
அள்ளி அணைத்து
அழுந்ததொரு முத்தமிடுவதா?

தினம் தினம்
தளிர் மேனி காணாது
தவித்தேன் என்பதா?

ஆலிங்கனத்தில்
ஆழ்கடல் முத்தெடுக்க
அம் மேனி குளிர்ந்திருப்பதா?

இதயத்தை இயக்கும்
இனிய தேவதையென
விதந்து ஓதுவதா?

அன்பு – என்றும்
அலங்கார வார்த்தைகளை
அள்ளித் தெளிக்க கிடைப்பதா?

ஊரே எதிர்த்தாலும்
உதவிட நானிருக்கிறேனென,
ஓடி வருவது

அவசியப்படும் போது
ஆதரவு கரம் நீட்டுவது,
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது

கோபத்தின் உச்சியில்
குதறி எடுக்காமல்
மதிப்புடன் நடத்துவது

காதலும், ஈர்ப்பும்
கணப்பொழுதில் மாறுகின்ற
காலச்சூழலில் – மாறாதிருப்பது

நொடிப்பொழுது செயலல்ல,
நீண்ட நெடிய பயணத்தின்
நீடித்து நிலைத்துக் கொண்டிருப்பது

. வேல்முருகன்

ஞாயிறு, அக்டோபர் 6

எட்டாம் பொருத்தம்

















ஏழெட்டுப் பொருத்தம்
எனக்கும் அவனுக்கும்
வாழட்டும் என்றே
வழியனுப்பி வைத்தது
பாழும் கிணரென்று
பாதகத்தி அறிந்தாலும்
சூழல் இல்லையே
சுற்றத்திடம் சொல்லியழ

மனப்பொருத்தம் இல்லாத
மணவாழ்வு இனிக்குமோ
என்வருத்தம் எதுவென்று
எனையீன்றோர் அறிவாரோ
சினமிருந்தும் கட்டியவனின்
சிறகொடிக்க மனமில்லை
வனவாசம் என்றானபின்
வாழ்விற்கு காரணமில்லை

பொருந்தா வாழ்வுதனில்
பொலிவுற வழியில்லை
இருந்தாலும் கனவுகள்
இருளகற்ற போராடுது
வருந்தாத இணையோ
வளையவளைய வருகுது
திருந்தாத மடங்களுக்கு
திசைக்காட்டியும் விளங்காது

ஆசையா நெருங்கவும்
அன்பேயென அரற்றவும்
யாசகமா கேட்பது
இயற்கைக்கு முரணானது
வேசையென பட்டமளித்து
வேண்டாத பொருளாக்க
காசினியில் இருந்தென்ன
காலனிடம் சென்றாலென்ன

வளரும் பிள்ளைக்காக
வசந்தத்தை மறக்க
உளரும் ஊருக்காக
ஒருவேடம் தரிக்க
தளரும் இளைமைக்கு
தண்டணை கிடைக்க
துளங்கா வாழ்வில்
தூண்டுதல் தானாரோ

சுவர்க்கம் தேடினேன்
சூன்யம் சூழ்ந்தது
சுவாசம் நிறுத்திட
சுவரொன்று தடுத்தது
விவாக ரத்தென்றாலும்
விமோசனம் மறுத்தது
உவர்நில மென்றாலும்
உயிரோடு இருக்கிறேன்

எனக்கான வாழ்வு
என்றுதான் கிட்டுமோ
அனலான நெஞ்சமது
அமைதி அடையுமா
புனலாக புதுவாழ்வு
பூரிப்பை தருமோ
வினாவிற்கு விடையுண்டு
விகற்பத்திற் கேதுமில்லை



திங்கள், டிசம்பர் 20

கன்னிகாதானம்


 

தானம்
கன்னிகாதானம்
காலம் காலமாய்
கைத்தலம் பற்றிட

தானம் கொடுக்க
மங்கையென்ன
மாடா, பொருளா
மானுடம்தானே

இணையாய் வாழ
இல்லறம் பேண
இருவரில்
யார் – யாருக்கு அடிமை

மரபென
மாறாது செய்தப் பெற்றோரை
மாற்றும் வல்லமை
மங்கையர்கே உண்டு

கற்றக் கல்வியால்
பகுத்துணர் அறிவால்
மரபுகளை மறுத்து – என்றென்றும்
மகளாக இருக்க வேண்டுமென்கிறாள்

ஆண்டாண்டுக் கால
அடிமைதனை
ஆட்சியர் பணிக் கல்வி
அகற்ற

வேதம் உரைத்ததை
வேண்டாம் என்பது
சனாதனத் தேசத்தில்
விடிவெள்ளிதான்

கலகம் பிறந்தது
கணவனும் ஏற்றான்
கற்றவர் பெருக
கற்கால மடமை மாறுமே

ஞாயிறு, ஜூலை 19

புண்பட்ட மனமே

 

ழகன் முருகனுக்கு
ஆதரவு அளிக்கவில்லையென
அரோகரா என்று
அடியேனுக்கு ஓலமிட்டனர்

ஞானசம்பந்தனின்
பல்லக்குத் தூக்கிகள்
வழிக் களைப்புத் தீர
ஏலோ லோ பாடிச் செல்ல

அர ஹரோ ஹரா - அதாவது
நற்கதியை அருள் எனும்
நற்சொல்லை
கற்றுக் கொடுத்தாராம்

தமிழர்கள்
ஜெயராஜ் பென்னிக்ஸை
வல்வேல் காத்ததா
வாழ்வை முடித்ததா

இந்து அல்ல என்பதால்
பாராது இருந்தானா
அவர்கள் தமிழர்கள் என
ஆரிடம் சான்று பெற வேண்டும்

இந்து சனநாயம்
எதிர் கருத்தில்லாதது
எதிர்பது என்பது
இல்லாமல் செய்வதாம்

இந்து  எதிர்வாதங்கள்
முஸ்லிம்/கிருத்துவ மதத்தை தாக்கி
சொர்க்கம் காண்பது
இவர்களின் சனநாயகம்

அடுத்தவன் மதத்தை தாக்க
அருகதை எனக்கில்லை என்றால்
அந்த உரிமையை – உனக்கு வழங்கியது
எந்த ஊர் சட்டம்

சைவ முருகன்
சுப்ரமண்யன் ஆக்கப்பட்டதாகச்
சுகிசிவம் சொல்ல
சங்கடம் இந்துக்களுக்கா?

வணங்குபவனுக்கு – அதுவொரு
வடிகால்
மகுடிக்குக் கட்டுப்பட்டு
நம்பிக்கை என்கிறார்கள்

கிடா வெட்டு தடைச் சட்டத்திற்கு
கிளர்ந்தெழுந்தவன்
அறுபடை வீட்டில்
சேவலைப் படையலிட முடியுமா

தமிழ் கடவுள்தானே
தேவாராம் தமிழ்தானே
சிற்றம்பல மேடையில்
பாடிக் காட்டேன் தமிழை

நீச மொழி என்று
நாளாது வரை - தமிழைக்
கோயில் நுழையாதுக் காப்பவன்
தமிழ் என்றவுடன் தடுமாறிவிட்டாயோ

கொற்றவை மகனை
வள்ளி மணாளனை – சேயோனை
குலம் காத்தக்
குறிஞ்சித் தலைவனை

சுப்ரமண்யன் ஆக்கியே
சரவண பொய்கையென
சரடு விடுபவனின்
கார்த்திகேயன் கதை வேறு

வேல் என்பது
வேட்டைக்கான ஆயுதம்
வேள்வி நடத்துபவர்கள்
வேட்டைக்குக் களம் தேடுகின்றனர்

ஓட்டுப் பொறுக்குவதற்கு
ஒவ்வொருவருக்கும் ஒரு உத்தி
ஒன்றாக இருந்தவனை
ஓட்டிற்காக இந்துவாக்கி விட்டான்

சூத்திரம் அறியா
சூத்திரன் சூடேறி விட்டான்
சேகருக்கு பால் “பாக்கெட்” கிடைக்கும்
உனக்கு ஒன்றும் கிடைக்காது

சனாதனத் தர்மத்தில்
சனநாயகம் கிடையாது
நம்பிக்கையில் நந்தனாயிருந்தால்
தீயில் எறிவாய்

எதிர்வினை என்று
சிலையாகி விட்டவனை
சிதைத்துப் பார்க்கிறாய்
விதைத்தவன் சிதைவதில்லை           


சனி, ஜூன் 27

வேண்டுதல்



 

களைகட்டும் அழகில் சொக்கி
   கண்டாங்கிச் சேலைக் குமரிய
இளவட்ட கல்லத் தூக்கி
   இணையாக ஏற்ற வாழ்வில்
பளபளத் தங்கத்தைத் தேடாது
   பக்குவமாக் கடமைய முடிச்சு
தளர்ந்த வயதில் வேண்டுதல்
    தலம்பலக் கண்டிட வந்தோம்



வேண்டி வந்த இடத்தில்
    வேண்டி நின்றாள் வேடிக்கை
ஆண்டு பலவுங் கடந்தாலும்
   அந்நாள் நினைவு வந்திடவே
தொண்டுக் கிழவ னானாலும்
   துணைக்கு உதவி செய்தலே
ஈண்டு நன்மை பயக்கும்
   இனிது நிறைவேற மகிழ்ச்சி


வெள்ளி, பிப்ரவரி 14

ரௌலட் சட்டமும் ராட்சசியும்



நான் கண்ணனோ
நீ ராதையோ
அல்லதான்

கண்களால் கவனித்து
கனிந்த இதயத்தால்
காதலர்கள்தான்

அடியே
ஆயினும் என்ன
அவசரச் சட்டம்

பிப்ரவரி 2014 ல்
பேசாமல் வதைக்கும்
ராட்சசியே

மார்ச் 1919-ல்தான்
ஆங்கில சர்காரின்
ரௌலட் சட்டம்

பேச்சும், எழுத்தும்
ஒத்த கருத்துடையோரும் – அன்று
கூடுவது தடையாயிருந்தது

கல்யாண ஊர்வலமும்
கனியகனிய பேசுதலும்
கூடுதலுக்கு வழியடி

காரணமின்றி கைதாவது
காதலிலும் உண்டு – அந்த
ரௌலட்லிலும் உண்டு

சந்தேகப் படுதல்
உன்னிலும் உண்டு
உரிமையற்ற அதிலுமுண்டு

விசேட நீதிமன்றத்தில்
விதியின்றி விசாரிப்பர்
மேல்முறையீடும் இல்லாதென்பர்

வாதமும் மேல்முறையீடும்
வாய்தா இல்லா வாய்ப்பு
வாழ்க்கையில் இணைய

உயிர்
மாட்சிமை தங்கிய
மன்னரின் கருணை

ஆம். தேவி
கருணை வேண்டுமடி - உனது
கண்ணாளன் நானடி

சத்தியாகிரகம், ஒத்துழையாமை
சட்டென்று நிறுத்தினார்
உத்தமர் காந்தி

உத்தமியே
ஊடலின் துன்பத்தை
உடனே நிறுத்தடி

ஜாலியன் வாலாபாக்
ரௌலட் சட்டம் – அது
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்

வாலிபன் வாழ
தடா, பொடா தவிர் – இது

இந்திய குடியரசுயாயினும்

புதன், ஜூலை 10

மாலையின் வேலை




மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன் 

                                                                                                                     குறள் 1226
அறியேன்
 மாலை - எனை
 கொல்லும்  வேளை - என

 மணவாளன் உடனிருந்த
 மாலை யெல்லாம்
 மகிழ்ந்த வேளையால்

சனி, ஜூன் 9

முஸ்லீம் என்றால்

15 வயது முஸ்லீம் பெண் தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டார்.  உயர் நீதி மன்றம் சொல்கிறது இந்து பெண் 18வயதுக்கு குறைவாக திருமணம் செய்து கொண்டால்தான் தவறு, தண்டனை உண்டு.

நீதி மன்றறம் முஸ்லீம் பெண் 15வயதில் தாரளமாக திருமணம் செய்து கொள்ளலாம் தவறில்லை என்று காதல் கணவனோடு அனுப்பி வைத்து விட்டது.

இங்கே பெண் பெண்ணாக பார்க்கப்படுவதில்லை, மதமாக, சாதியாக போகப் பொருளாக பார்க்கப்படுவதால் இந்த நிலைப்பாடு

அடுத்து வித்தியாசமான நிகழ்வு

அசாம் சட்ட மன்ற உறுப்பினர் ரூமி நாத் என்ற பெண் தன் கணவன் மற்றும் குழந்தையை விட்டு விட்டு முஸ்லீமாக மதம் மாறி முஸ்லீம் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

முதல் திருமணம்??????????

அதான் முஸ்லீம் 5 திருமணம் செய்து கொள்ளலாமே

ஆண் மட்டும்தான் 5 திருமணம் செய்யலாமா?

இதோ மக்கள் பிரதிநிதி ஒரு முன்னோடியாக மதம் மாறி செய்து கொண்டார்.

யார் இந்த ஆயுதத்தை (5 திருமணம்) எடுத்துக் கொள்கிறார்கள், மதம் மாறுபவர்கள், தவறு செய்பவர்கள்

பாராட்டுவோம் மக்களே

ஞாயிறு, மார்ச் 6

குழந்தை தேடிய கடவுள்

கடந்த ஞாயிறு
அடர்ந்த முடிதிருத்த
அகவை ஏழுகொண்ட
அருணனை
அழைத்துச் சென்றேன்

அருகிலிருந்த அங்காடியில்
வண்ண மீன்கள்
காதல் பறவைகள்
அவற்றோடு 
கோழிக் குஞ்சுகள்

ஆடிக் குதிக்கும் பருவத்தில்
ஆசை பிறந்தது
ஓரு குஞ்சு வளர்க்க
ஆயிரம் காரணம் சொல்லியும்
அடம் பிடித்ததால்
ஆகட்டுமென ஒன்று வாங்கினேன்

இருக்கும் மனிதருக்கே
இடப் பற்றாக்குறை
இதில் இரண்டாம்தளம் வேறு
இங்குமங்கும் பார்த்து
பலகனியில் இட ஓதுக்கீடு

கோதுமை அரிசி குருணை
குடிக்க தண்ணீர் என
குதுகல ஆரம்பம்

கோழிக்குஞ்சு வந்ததை
குடியிருப்பிலுள்ள
குட்டிக்களுக்கு தெரிவிக்க
அவர்களும் விஜயம்

அருணன்
படிப்பை மறந்தான்
விளையாட்டை மறந்தான்
நண்பர்களை மறந்தான்
ஆம் 
அவனுக்கு
தோழனாக
விளையாட்டு பொருளாக
ஆனது கோழிக்குஞ்சு

காலை கண்விழித்து
வணக்கம் சொல்வது
கொஞ்சுவது எல்லாம்
எங்களையல்ல... 
கோழிக்குஞ்சை 

மாலை பள்ளி விட்டதும்
அம்மாவை கேட்பது
கோழி சாப்பிட்டதா
தண்ணீர் குடித்ததா

இரவிலும் 
இதே கதை
அம்மா போ
எனது குட்டிக் கோழிக்கு
சாப்பாடு ஊட்டு

மகனின்
அன்பையும்
அதிகாரத்தையும் கண்டு
அவளுக்கு பூரிப்பு

அருகிலமர்ந்து
ஆனந்தப்பட்டு
தாவி மேலேறி
தவழ்நத அக்குஞ்சு
இன்றில்லை

ஏனம்மா செத்து போச்சு
உயிர் வராதா
ஒரே சோகம்

வாடிய முகம்
காலை உணவை மறுத்து
கவலையோடு உட்கார்ந்திருக்கிறது

அப்போதுதான் கேட்டான்
அம்மா 
கடவுள் உயிர் கொடுக்க மாட்டாரா

அம்மாவோ
செத்த பிறகு 
உயிரேது என்றாள்

ஆம் 
இருப்பவன் 
செய்த உயிரை
இல்லாதவன்
எப்படித் தரமுடியும்







புதன், அக்டோபர் 13

துணை

இன்றைய தினத்தந்தியில் ஒரு செய்தி சித்த வைத்தியம் பார்க்கும் 73 வயதுடைய சித்தர் மனைவியின் பிரிவால் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி பார்த்தேன்.  11 பிள்ளைகள். பேரன் பேத்திகள் எல்லாம் இருந்தும் மனைவி என்ற துணை, ஆம் 46 ஆண்டுகள் உடனிருந்த ஒரு துணையை இழந்து இரண்டரை ஆண்டு காலம் கடந்த பிறகு இப்படியொரு முடிவு

சகல இன்ப துன்பங்களில் பங்கேற்ற ஒரு துணை இல்லையெனில்.............. முடிவு தவறுதான். இருப்பினும் இழப்பும் தனிமையும், சுற்றங்களின் இயலாமை, தொந்தரவு கொடுக்க கூடாது என்ற மனவோட்டம் இம்முடிவை எடுத்திருக்கலாம்

இதே போன்றொரு முடிவை முன்பு ஸ்டெல்லா புருஸ் என்றொரு எழுத்தாளன் தன் துணையை இழந்த 30 நாட்களுக்குள் எடுத்தான்.

வயோதிகம், உடம்பை ஒரு இடத்தில் முடக்கி விடுவதால் இது போன்றதொரு முடிவுகள் தொடருகின்றன.  தொடராமல் இருக்க


இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...