செவ்வாய், ஏப்ரல் 26

தவறு

மோட்டார் சைக்கிளில் நான் என் குடும்பத்தோடு சென்றுகொண்டிருந்தேன்.  எனது மகள் பின்னிருக்கையில் இருந்தாள்.  ஒரு சிக்கனலை கடக்க வேண்டிய நேரம் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  எதிர் திசையில் யாரும் வரவில்லை என்பதால் பச்சை ஒளிர்வதற்கு முன்பே வண்டி நகர்த்தி சென்று விட்டேன்.  எனது மகள் கோபித்துக் கொண்டாள்.  அப்பா தவறு செய்கிறீர்கள்.  சிகப்பு இருக்கும் போது போக கூடாது என்று சொன்ன நீங்கள் ஏன் போகிறீர்கள் என்றாள்.

ஆம் கற்று கொடுத்த நமக்கு மகள் மிகச் சரியாக இடித்துரைக்கிறாள்.  5 ஆம் வகுப்பு செல்லும் அவள் கற்றதை கடை பிடிக்கிறாள்.   நாம்தான் மீறுகிறோம்.

ஆம் இது போன்ற விதிகளை மீறாமல் இருப்பது நலம்

3 கருத்துகள்:

மனோவி சொன்னது…

ரொம்ப திறந்த மனது உடையவராய் இருப்பீர்கள் போலிருக்கிறதே?

ராஜ நடராஜன் சொன்னது…

//எதிர் திசையில் யாரும் வரவில்லை என்பதால் பச்சை ஒளிர்வதற்கு முன்பே வண்டி நகர்த்தி சென்று விட்டேன்.//

இந்த வியாதி வாகன ஓட்டிகள் அனைவருக்கும் இருப்பதுதான்:)

அ. வேல்முருகன் சொன்னது…

தவறு எப்போதும் தவறுதான். நான் இன்னொரு தவறு செய்தேன் அதற்கு என் மகன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என்னை தாக்கி கொண்டிருக்கிறது.

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...