புதன், ஜூன் 29

ஒப்பந்த தொழிலாளர்கள்



உத்திரவாதமற்ற வேலையில் தன் உழைப்பை செலவிடும் மனிதர்கள்தான் இந்த ஒப்பந்த தொழிலாளர்கள். உலகில் உள்ள கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களுக்கு ஏற்ற தளமாக இந்தியா உள்ளது.

அதாவது, 110 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை மற்றும் குறைந்த கூலிக்கு ஆள். இவை மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முக்கிய காரணங்கள்.

இன்றைய எக்னாமிக் டைம்ஸ் தினசரியில் ஒப்பந்த தொழிலாளர்கள் மோட்டார் வாகன தொழிற்சாலையின் டைம் பாம் என எச்சரிக்கை செய்தி வெளியிட்டு அதற்கு உதாரணமாக மாருதி சுஸுகி மானேசர் தொழிற்சாலையில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட நட்டத்தை சுட்டிக் காட்டுகிறது.

1.30 கோடி தொழிலாளர்கள் பணிபுரியும் மோட்டார் வாகன தொழிலில் அடுத்த ஐந்தாண்டுகளில் தொழிலாளர்களின் தேவை இருமடங்காக அதாவது 2.5 கோடி தேவை ஏற்படும். அவ்வாறு ஏற்படும் தேவையில் புராதன தொழிற் சட்டங்கள் பயன் தரா.  அவை எந்த நேரமும் ஒரு மிகப் பெரிய போராட்டத்தை ஏற்படுத்தலாம்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களை காட்டிலும் மிகக் குறைந்த ஊதியம் வழங்கப் படுகிறது என்றும் சொல்கிறது.

உறுதியான புராதன தொழிலாளர் சட்டம் மோட்டார் வாகன தொழிலின் கனவை தடம் புரள செய்வதாய் உள்ளது.  எனவே அவற்றை மாற்ற வேண்டும்.  குறைந் கூலிக்கு ஆள் எடுத்துக் கொள்வது தேவையில்லை என்று நிர்வாகம் கருதினால் அவர்களை எந்நேரம் வேலையிலிருந்து நீக்கும் உரிமை வேண்டும் என்கிறார்கள் முதலாளிகள்.

ஆம் அடிமைகளுக்கு சட்டம் எதற்கு

கருத்துகள் இல்லை:

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...