என்னடி நினைப்பு
ஏனிந்த வதைப்பு
கண்டிட கண்டிப்பு
காதலும் துண்டிப்பு
மனங்களின் சந்திப்பு
மரணம்வரை தொடர்பு
தினங்களில் தீர்ப்பு
திருந்திடவும் வாய்ப்பு
குற்றமென்ன உயிரே
குருதிவர குத்துகிறாய்
பற்றில்லை நட்டமென
பாராமல் இருக்கிறாய்
முற்றுமென வெறுக்க
முகாந்திரம் தேடுகிறாயோ
அற்றுப்போக அன்பொன்றும்
அங்காடி சரக்கல்லவே
முழுமைபெற்ற காதெல்லாம்
மூச்சிழந்த்து வரலாறு
வழமைமாற்றி வாழ்வேன்
வந்துநீயும் வாழ்த்துகூறு
தழும்பாக நினைவுகள்
தினம்தினம் வரும்நூறு
கொழுகொம்பாய் நம்பிக்கை
கூடிநிதம் வாழ்வேன் பாரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக