திருப்பதியில் ஆட்டோ ஓட்டும் பெண்மணியை கண்டேன். இதிலென்ன விசேடம். ஒன்றிமில்லைதான்.
விமானம், விண்வெளி பயணம் என மேற்கொள்ளும் பெண்களுக்கு இது ஒன்றுமில்லைதான். சென்னையில் கூடதான் பெண்கள் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறார்கள்.
அப்பெண்மணி ஓட்டியது ஒரு ஷேர் ஆட்டோ. அங்கெல்லாம் எட்டு பேர். இருக்கைகள் ஆறுதான் ஓட்டுநர் அருகே இருவர். அந்த இருவரில் ஒருவராக நான் பயணம் செய்ய நேரிட்டது.
பின்னால் அமர்ந்திருந்த பெண் எதோ ஒரு புத்தக கடையில் நிறுத்த சொல்கிறது ஆனால் நிறுத்துமிடம் சரிவர தெரியவில்லை, அப்போதுதான் அவர்கள் தன் மகள்கள் என்று சொன்னார். ஐந்தாறு இடம் நிறுத்திய பின் இறங்குகிறது. அப்பெண் புத்தகம் வாங்க எவ்வளவு வேண்டுமென கேட்டு தன் சட்டை பையிலிருந்து பணம் எடுத்து கொடுக்கிறார். எத்தனை பெருமை தன் பெண்ணை தன் உழைப்பில் படிக்க வைக்கிறார். மேல்நிலை பள்ளி படிப்பதாக சொல்கிறார்.
நாங்கள் பயணத்திற்கு கொடுத்தது ரூ.5. ஐந்தைந்தாக சேர்த்து வாழ்க்கை. தன் உழைப்பால் வாழும் பெருமைமிகு வாழ்க்கை

1 கருத்து:
நிச்சயம் பெருமை மிகு வாழ்க்கைதான்!
கருத்துரையிடுக