ஞாயிறு, அக்டோபர் 2
நமக்கு மீறின சக்தி
கடவுளா
கட்டிய மனைவியா
காலகாலமாய் தேடியும்
கண்டுபிடிக்க முடியாததா
என்னால் இயலாததை
அவனால் முடியுமாயென சிந்தியாது
ஏதோவொரு சக்தியென
ஏன் தீர்மானித்தேன்
புயல் மழையெனில்
பூட்டிய வீட்டைத் திறப்பதில்லை
வெயில் உச்சமெனில்
வீதியில் நடப்பதில்லை
மழைப் பொழிய
குடையோடு நடக்க
விடைக் கண்டவன்
மின்னலில் மாண்டால்
நமக்கு மீறின சக்தியென்றே
மூளை மழுங்கியிருப்பானா
நாளையே வேறொருவனை
மின்னலில் சாகக் கொடுப்பானா
அளவுக்கதிகமான
வெயிலும் மழையும்
பருவநிலை மாற்றமென
பகுத்தறிந்த மனிதன்
ஜடாமுடியில்
கங்கையை சுமப்பவன்
கமண்டலத்தில் சிக்கிய
காவேரியைத் திறப்பவனின்
கட்டுக்கதைகள்
புத்தியெல்லாம் நிறைந்திருக்க
நமக்கு மீறின சக்தியென
நயமாய் சொன்னானா?
ஐம்பூதங்களைக் கடவுளாய்
அச்சத்தில் ஏற்றாயா
அங்குசத்தில் அடங்காததால்
நமக்கு மீறின சக்தியென்றாயா
பெயரிட்டு அழைத்த புயலில்
சர்வ வல்லமையுள்ளவன்
நமக்கு மீறின சக்தியென
சாக்குச் சொல்லியாப் போனான்
கருந்துளைக்குள் நடப்பதை
கற்றறிந்தவன் தேடுகிறான் – அத்
தேடலின் ஈர்ப்பு விதியால்
கடவுள் காணாமல் போகிறான்
மானுட ஆற்றலுக்கு
பிரபஞ்ச இயக்கவியல்
நமக்கு மீறியதல்ல என்றே
நாளும் சொல்லுது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இது அரசியல்தான்
தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
ஆரணியில் ஆரம்பித்தது அரகரனின் அச்சு முறி விளையாட்டு ஆட்டத்தில் அரங்கனும் அங்கம் வகிக்க அடுத்து சூடு பிடித்தது அரகரனும் அரங்...
-
கிரேக்கத்தின் பேரழகியாய் இங்கிலாந்து ராணியாய் என்தேவி நீயாகிட சீனப்பட்டு வாங்கினேன் சித்திரமாய் சிங்காரமாய் தெரிய ...
-
நாட்டில் எல்லா முதலாளிகளும் சொந்த காசில் நிறுவனம் ஆரம்பித்து நட்டப்பட்டு தலையில் துண்டு போட்டு கொண்டனர் என நம்பும் மக்களுக்காக மேலே உள்ள ப...
-
புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி ஆம் உங்களுக்கு புரட்சி தெரியும் வச்சாத்தியும் மகாமக குளமும் பரமக்குடியும் நேற்றின்றைய புரட்சிகள் லிபியாவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக