நீங்கள் நீதிமன்றதை அணுகியதால் வங்கி பெரும்பாலும் எவ்வித நிவாரணமும் வழங்க இந்நிலையில் தயங்கும். உங்களுக்கு உள்ள ஒரே வழி நீதி மன்றம்தான். திரும்ப வழக்கறிஞர் மூலம் நிவாரணம் கேட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை நீதிமன்றம் செவிமடுக்கலாம் அல்லது தள்ளுபடி செய்யலாம். செவிமடுத்தால் கால அவகாசம் கிடைக்கும் இல்லையென்றால்
கடன் வசூல் மேல்முறையீட்டு ஆணையம், சென்னை எத்திராஜ் சாலையில் உள்ளது. இது நான்கு மாநிலங்களில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வகை செய்யப்பட்டுள்ளது.
இங்கு தங்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம். அதாவது கடன் வசூல் தீர்ப்பாயத்தின் கட்டளைகளை தளர்த்தலாம் அல்லது கால அவகாசம் நீட்டிக்கலாம். சரி இங்கு வழங்கிய கால அவகாசத்திலும் தங்கள் நிதி நிலைமை சீரடையாமல் கடன் செலுத்த இயலவில்லை எனில். ஆம் இருக்கவே இருக்கு உயர் நீதி மன்றம்.
உயர் நீதி மன்றமும் தங்கள் சார்பாக நீதி வழங்கலாம். அதாவது சொத்தை கையகப்படுத்த தடையாணை கிடைக்கும். இதற்குமேல் உச்ச நீதி மன்றம்... ஆம் பணமிருந்தால் நிவாரணம் தொடரும்...
நிவாரணத்தின் விலை
நீதி மன்ற கட்டணம் தங்களின் நிலுவைத் தொகைக்கு தகுந்தாற்போல், ஒவ்வொரு நீதி மன்றத்திலும். வழக்கறிஞர் சேவை கட்டணம் ஒவ்வொரு நிலையிலும்.
SARFAESI சட்டம் எப்போது செல்லுபடியாகது
தங்களது நிலுவைத் தொகை ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறைவாக உள்ள போது மேற்படி சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க இயலாது. வட்டித் தொகை மட்டும் நிலுவையில் உள்ளபோது.
அடுத்தகட்டம்
தாங்கள் எவ்வித பணமும், கடனை திரும்பி செலுத்துவதற்கான ஆர்வமும் காண்பிக்காத பட்சத்தில் அடமான சொத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு செல்லும். அது எப்படிபட்டது என்ன செய்வார்கள் அதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்
1 கருத்து:
very useful,thanks a lot
கருத்துரையிடுக