சனி, ஜூலை 23

பனியன்



இன்று எனது மகன் பனியன் வாங்கி கொடு அப்பா, எனது நண்பன் போட்டுக் கொண்டு வருகிறான் என்றான். நினைவுகள் பின்னோக்கி சென்றது. 

எனது 2 ம் வகுப்பு படிக்கிறான். நான் 8 ம் வகுப்பு முடித்து ஆண்டு விடுமுறையில்  அப்பாவிற்கு தெரிந்த ஒரு இடத்தில் வேலைக்கு செல்கிறேன்.  வீட்டில் இருந்தால் மற்ற நண்பர்களோடு விளையாடி வம்போடு வருவேன் என்பதால் அந்த ஏற்பாடு.   வேலை செய்த இடத்தில் எட்டணா கொடுத்தார்கள்.  அந்த அலுவலகத்தில் தேவையற்ற பேப்பர்கள் என சிலவற்றை ஒதுக்கினார்கள்.  அதை எல்லாம் கட்டி எடுத்து கடையில் போட்டு ரூ.6 பெற்றுக் கொண்டேன்.

என்ன வாங்கலாம் என யோசித்த போது  என் மகனை போன்று எனக்கும் அப்போது பனியன் ஆசை.  ரூ.5.50 க்கு ஒரு பனியன் வாங்கி வீட்டுக் சென்றேன்.  அலுவலகம் முடித்து வந்த அப்பாவிடம் நான் வாங்கிய பனியனை போட்டு சென்று நின்றேன்.  வந்ததே கோபம் அவருக்கு. 

ஏது பணம் என்றார். சொன்னேன். அருகில் அழைத்தார். போட்டிருந்த புது பனியனை கிழித்தார். யாரை கேட்டு வாங்கினாய்.  நான் வாங்கி தர மாட்டேனா என்றார். 

பிறகு வாங்கித் தரவில்லை,  நான் வேலைக்கு சென்று வாங்கிக் கொண்டேன். அந்த நாட்களில் ஆண்டுக்கு இரண்டு சட்டைகளுக்கு மேல் வாங்க முடிந்ததில்லை.  வேலைக்கு வந்த நான்காண்டுகள் இதே நிலமையே நீடித்தது.

ஆனால் ஒன்று,  அன்றெல்லாம் அப்பா அம்மாவிற்கு ரூ,2 தான் தருவார் காய்கறி வாங்கி கொள் என்று.  அதற்குள்தான் குடும்பம். 

பழங்கதை அது போகட்டும்.  என் மகனுக்கு பனியன் வாங்க கடைக்கு போகவேண்டும்

1 கருத்து:

HajasreeN சொன்னது…

palamai inimayaanathu

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...