Physical Possession:
சொத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் வங்கி நேரடியாகவோ அல்லது வங்கி சார்பில் முகவர் அமைத்தோ சொத்தை கையகப்படுத்தலாம். மத்திய வங்கி (Reserve Bank of India) இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
Ø வங்கி கையகப்படுத்துதல்
Ø வங்கி முகவர் மூலம் கையகப்படுத்துதல்
Ø வங்கி நீதிமன்றம் மூலம் கையகப்படுத்துதல்
Ø வங்கி மாவட்ட ஆட்சியர் மூலம் கையகப்படுத்துதல்
வங்கி அதிகாரி கையகப்படுத்துதல்
வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி (Chief Manager and above) தன் சக அதிகாரிகளோடு அடமான சொத்திற்கு வந்து உரிமையாளரோ அல்லது வாடகைக்கு இருப்பவரோ இருந்தால் அவர்க்ளை வெளியேற்றி சொத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வார். அவ்வாறு எடுக்கும் போது அங்குள்ள பொருட்களை கணக்கெடுத்து குறித்துக் கொள்ளவார். இந் நடவடிக்கைகள் அனைத்தும் நிழற்படம் எடுத்தோ, காணொளி படம் எடுத்தோ வைத்துக் கொள்வார். மேற்கண்ட கையகப்படுத்தும் நடவடிக்கைகளை குறிப்பெழுதி, இரு சாட்சி கையெழுத்து பெற்றுக் கொள்வார்.
தேவைப்படின் அடமான சொத்து தன் பொறுப்பில் உள்ளதால் காப்பீடு மற்றும் காவலுக்கு ஆள் நியமிப்பார். இதன் செலவுகள் அனைத்து கடன்தாரரே செலுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் கணக்கில் ஏற்றப்படும்
இது போன்ற நடவடிக்கைகளை ஒரு சில துணிச்சல்மிக்க வங்கி அதிகாரிகள் மட்டுமே மேற்கொள்கின்றனர்.
வங்கி, முகவர் மூலம் கையகப்படுத்துதல்
அஞ்சா நெஞ்சருக்கும் சில நேரங்களில் துணை தேவைப்படும் அப்போது முகவர்களை நியமித்துக் கொள்வர். இது ஒன்றுமில்லை கூட்டம் சேர்ப்பது. முகவர்கள் வங்கி அதிகாரியின் சொல்படி நடப்பவர்கள். அனைத்து நடவடிக்கைகளும் வங்கியின் பேரால் நடைபெறுவதால் வங்கி அதிகாரியின்றி முகவர்கள் இந் நடவடிக்கையில் நேரடியாக இறங்க மாட்டார்கள். இதில் அனைத்து வேலைகளையும் முகவர் செய்வார் வங்கி அதிகாரியின் கண்காணிப்பில். மற்றபடி முதல் நடவடிக்கையில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும்.
வங்கி, நீதிமன்றம் மூலம் கையகப்படுத்துதல்
Section 14 ன் படி வங்கி தலைமை (பெருநகர) குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (CMM) ஒரு மனு தாக்கல் செய்து அடமான சொத்தை கையகப்படுத்துவார். வங்கியின் சார்பில் வழக்கறிஞர் மேற்கண்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்வார். அந்த மனுவில் மனு சொத்து வங்கியின் அடமான சொத்து எனவும், கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர் கடனை செலுத்தவில்லை என்பதால் அடமான சொத்தை கையகப்படுத்த உத்திரவிடுமாறு கோருவார். மனுவின் இணைப்பாக தங்கள் கடன் கோரிக்கை மனு, வங்கியுடனான கடன் ஏற்பாடு பத்திரம், ஈட்டுறுதி பத்திரம், சொத்துப் பத்திரம், சமீபத்திய வில்லங்க சான்றிதழ், 13 (2) அறிவிக்கை நகல், அதன் ஒப்புகை சீட்டு, பெயரளவு கையகப்படுத்துதல் நடந்திருந்தால் அதன் ஆதாரங்கள், ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இவை அனைத்தும் சரியாக இருந்தால் வங்கியின் அங்கிகரிக்கப்பட்ட அதிகாரி ஒருநாள் நீதிமன்றம் ஒரு வாக்குமூலம் கொடுக்க வேண்டும். அதை ஏற்று அடுத்த பத்து நாட்களுக்கு நீதிமன்றம் சொத்தை கையக்கப்படுத்த ஆணை வெளியிடும்.
அவ்வாணையில் வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து சொத்தை கையக்கப்படுத்த குறிப்பிட்டு இருக்கும். ஆணையரின் ஊதியமும் அதில் குறிப்பிடப் பட்டிருக்கும். ஆணையர் காவல் துறை உதவியோடு சொத்தை கையகப்படுத்தி வங்கியிடம் ஒப்படைப்பார்.
அடமான சொத்து பூட்டப்பட்டிருந்தால் அதை உடைத்து திறக்கும் அதிகாரமும் வழக்கறிஞர் ஆணையருக்கு உண்டு. இது குறித்தும் ஆணை வழங்க வேண்டும் என குறிப்பிடும் பட்சத்தில் நீதிமன்றம் இதற்கும் சேர்த்தே ஆணை வழங்குகிறது.
இந்நடவடிக்கைகளை நிழற்படம் படம் எடுத்தோ காணொளி படம் எடுத்தோ வழக்கறிஞர் ஆணையர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்.
வங்கி மாவட்ட ஆட்சியர் மூலம் கையகப்படுத்துதல்
மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்ற அதிகாரம் உள்ளதால் அவரிடம் வங்கி கோரிக்கை மனு கொடுக்கலாம். மேற்கண்ட நடவடிக்கையில் உள்ள அனைத்து ஆவணங்களையும் மூன்று நகல்களில் கையக்கப்படுத்தும் கோரிக்கை மனுவை கொடுக்க வேண்டும். இதை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் பரிசீலித்து மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கு அனுப்பி வைப்பார்.
மாவட்ட ஆட்சியர் அதனை ஏற்று சம்பந்தப்பட்ட அடமான சொத்து எல்லைக்குட்பட்ட வட்டாச்சியருக்கு (Thasildhar) சொத்தை கையகப்படுத்தி வங்கியிடம் அளிக்குமாறு ஆணையிடுவார்.
வட்டாட்சியர், காவல் துறை உதவியோடு அடமான சொத்தை கையகப்படுத்தி வங்கியிடம் ஒப்படைப்பார். அவரும் இந்நடவடிக்கைகளை நிழற்படம் மற்றும் நடவடிக்கைகளை குறிப்பெடுத்தும் வைத்துக் கொள்வார்
சரி அடமான சொத்தை வங்கி கையகப்படுத்தாமல் விற்பனை செய்ய முடியுமா? முடியும் ஆனால் விற்பனைக்கு பிறகு வங்கி மேற்கண்ட நடவடிக்கை மூலம் சொத்தை ஏலத்தில் எடுத்துவருக்கு பெற்றுக் கொடுக்கும். அல்லது ஏலத்தில் எடுத்தவரே சொத்தை கையகப்படுத்திக் கொள்வார்.
அடுத்த அத்தியாயம் மூன்று விதமான விலைக் குறிப்புகள் எந்த விலையை வங்கி எடுத்துக் கொள்ளும்
இதையும் படிக்கவும்
அத்தியாயம் 5
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக