அத்தியாயம் – 3
SARFAESI நோட்டிஸ் அதாவது கேட்பு அறிவிக்கை பெற்றவுடன் நாம் குறைகளை சுட்டி காட்டலாம். விளக்கம் கேட்கலாம். கணக்கு கேட்கலாம். அதற்கு வங்கி ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது விதி. இதில் காலதாமதம் அல்லது எவ்வித பதிலும் கிடைக்க வில்லை என்றால். நிவாரணம் வேண்டி நீதிமன்றத்தை அணுகும் போது இக்குறைபாட்டை தெரிவித்தும் நிவாரணம் கோரலாம்
SARFAESI நோட்டிசை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாமா? செல்லலாம் அதனால் சொத்தை கையகப்படுத்தும் நடைவடிக்கை தள்ளிப் போடப் படுகிறது.
அதற்கு முன் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற அறிவிக்கையை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியை நேரில் சந்தித்து தேவையான விளக்கங்கள்/சந்தேகங்களை கேளுங்கள். உங்கள் நிலையை விளக்கி கூறி கால அவகாசம் கேளுங்கள். அதையும் கடிதம் மூலம் தெரிவித்து அதற்கு ஒப்புகை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை செலுத்துவதாக நீங்கள் கூறினால்தான் வங்கி அதிகாரி அடுத்தகட்ட நடவடிக்கையை தள்ளிப் போடுவார். இல்லையெனில் சொத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கி விடுவார்.
சரி, நான் மூன்று தவணைகளை செலுத்தி விட்டு மீண்டும் ஏதோ ஒரு சூழ்நிலையால் திரும்ப தவணைகளை சரிவர செலுத்த இயலவில்லை. அதற்குள் முதலில் அனுப்பிய நோட்டிஸ்/அறிவிக்கை அனுப்பி ஆறு மாதமோ ஒரு வருடமோ ஆகி விட்டது. வங்கி அதே நோட்டிசை மோற்கோள் காட்டி கையக்கப்படுத்தும் நடவடிக்கை எடுக்கலாமா? அல்ல அது காலாவதி ஆகி விட்டதா?
நினைவூட்டு அறிவிக்கை
காலாவதி ஆகவில்லை, வங்கி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம், ஆயினும் நீதிமன்ற வழி காட்டுதலின் படி அனைத்து வங்கிகளும் ஒரு நினைவூட்டை கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரருக்கு அனுப்புகிறது. அதை interim notice அல்லது pre takeover notice என்கிறார்கள். இந்த அறிவிக்கை தங்களுக்கு கிடைத்த எழு நாட்களுக்கு பிறகே வங்கி சொத்தை கையக்கப்படுத்தும். இதை தங்களுக்கு அனுப்பிய அறிவிக்கையில் தெரியப்படுத்தி இருப்பார்கள். இதில் ஏற்கனவே அனுப்பிய அறிவிக்கையை மேற்கோள் காட்டி, ஏதேனும் தொகை செலுத்தியிருந்தால் அதையும் குறிப்பிட்டு, தற்போதைய நிலுவைத் தொகையை தெரிவித்திருப்பார்கள் இல்லையெனில் முன்பு அனுப்பிய அறிவிக்கையையில் கண்டுள்ள தொகையை குறிப்பிட்டு மேற்கொண்டுள்ள வட்டி மற்றும் இதர செலவினங்களை நாளது தேதியிலிருந்து செலுத்த வேண்டுமென குறிப்பிட்டு இருப்பார்கள்.
கேட்பு அறிவிக்கை அனுப்பி மூன்றாண்டுகள் ஆகியிருந்தால், அவ்வறிக்கை காலவாதியாகி விட்டது என குஜராத் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. எனவே வங்கி 13 (2) நோட்டிசை கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரருக்கு புதியதாக அனுப்ப வேண்டும்.
நிவாரணம் என்ன?
என்னிடம் பணமே இல்லை, பணம் திரட்ட ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ ஆகும். வங்கியும் மேற்கொண்டு கால அவகாசம் அளிக்க தயாராக இல்லை என்ன செய்யலாம் எனது கனவு இல்லத்தை காக்க?
தங்கள் கடன் ரூ.10 இலட்சத்திற்கும் அதிகமானது என்றால் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் மூலம் நிவாரணம் கோரலாம். எத்தகைய நிவாரணம் கிடைக்கும்?
நீதிமன்றம் கடன் தொகையில் 10% அல்லது 25% தொகையோ அல்லது தொகை ஏதும் செலுத்த சொல்லாமலும் தடையாணை வழங்கும். நீதிமன்ற உத்தரவுப் படி தாங்கள் தொகையை செலுத்தும் பட்டசத்தில் தடையாணை வழக்கை முடிக்கும் வரை தொடரலாம். அவ்வாறு பணத்தை செலுத்தாத பட்சத்தில் நீதிமன்ற குறிப்பிட்ட கெடுவுக்கு பிறகு தடையாணை தானாக முடிவு பெறும்.
மேற்படி தொகையை ஒரே தவணையாகவோ அல்லது இரண்டு மூன்று தவணையாகவோ ஒன்று முதல் மூன்று மாத கால அவகாசத்திற்குள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்திரவிடும்.
நீதிமன்ற உத்திரவுபடி ஒரே தவணை மட்டும்தான் செலுத்த முடிந்தது மேற்கொண்டு செலுத்த இயலவில்லை. திரும்ப நீதிமன்ற அணுகலாமா அல்லது வங்கியை அணுகலாமா. அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
இதையும் படிக்கவும் அத்தியாயம் 1
1 கருத்து:
good post
கருத்துரையிடுக