நிலவைக் காதலிப்பாய்
நதியை வர்ணிப்பாய்
உலவும் தென்றலை
உயிரெனக் கதைப்பாய்
மலரை அழகென்பாய்
மங்கையை மறந்திடுவாய்
கலந்திடும் நேரத்தில்
கல்நெஞ்சில் நானென்பாய்
இளமைக் குன்றா
என்னினிய தமிழென்பாய்
குளத்தின் ஆம்பலை
குவலய அழகென்பாய்
வளமைக் கொண்டவளை
வந்தணைக்க மறந்திடுவாய்
வெள்ளை நெஞ்சத்திலே
வேண்டியவளை நினைக்கலையோ
கிழத்தி நானொருத்தி
கிடக்கும் நினைவின்றி
யாழிசைச் சிறப்பை
யாமத்தில் பாடுகிறாய்
அழகழகாய் பேசிடும்
அத்தானின் நெஞ்சத்திலே
ஆழ்ந்து கிடப்பது
அடியவள் மட்டும்தானே……????
நெஞ்சத்தில் நீயேதான்
நேசமுள்ள இணையேதான்
வஞ்சியுணை கண்டிட
வாராதோக் கற்பனைகள்
மிஞ்சிடாது நிலவை
மலரைக் காணுகையில்
அஞ்சுகமேக் கலங்காதே
ஆசையுடன் வாழ்வோமடி
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக