செவ்வாய், மே 17

விவசாயமும் வங்கி கடனும்



கடனின்றி நாடே இயங்க முடியாதபோது.  சாதாரண விவசாயி கடனின்றி வாழ முடியுமா?  விவசாயிகள் பயிர் கடன், தங்க நகை கடன், உழுபடைக் கருவிகள் வாங்க கடன் என பல கடன்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பெறுகின்றனர்.  இதை தவிர்த்து கந்து வட்டிக்கு கடன் வாங்கி கந்தலாகி போவான்  அது தனிக்கதை.
60000 கோடி தள்ளுபடி, ஆக பெரும்பான்மை விவசாயிகள் மகிழ்ந்தார்கள் ஆனால் என்ன நடந்த்து.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஓர் ஆண்டு காலம் தள்ளுபடி என வசூலை தள்ளிப் போட்டனர்.  2010-11 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் குறைந்த்து 3000 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன விவசாயிகளிடமிருந்து.
டிராக்டர்கள், உழுபடை கருவியில் பிரதானம்.  ஆனால் இது நகரங்களில் உழுவதற்கு பயன்படாமல், மணல், செங்கல் கொண்டு செல்லவும், தண்ணீர் கொண்டு செல்லவும் பயன் படுத்தப்படுகிறது.
ஆனால் ஒரு விவசாயி எப்படி டிராக்டர் வாங்குகிறான் என்று கவனிக்க வேண்டும்.  முன்பெல்லாம் 10 ஏக்கர் நிலமுள்ள விவசாயி டிராக்டர் கடன் வாங்க வங்கியை அணுகலாம் என்றிருந்த்து.  ஆனால் தற்போது 4 ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் வாங்கலாம் என மாற்றியமைத்தனர்.  யாருக்காக என்பது?.........
ஒரு கிராமத்தில் எத்தனை டிராக்டர் தேவை என்பது முக்கியம்.  ஆனால் டிராக்டர் கம்பெனிகளுக்கு  ஒவ்வொரு விவசாயியும் டிராக்டர் வைத்திருக்க வேண்டும் என்பது கனவு.  
கூட்டு திட்டம் டிராக்டர் கம்பெனிக்கு விற்பனை இலக்கு.  வங்கி மேலாளருக்கு விவசாய கடன் இலக்கு.  அதனால்தான் தேவையே இல்லாமல் ஒரு கிராமத்தில் 10 டிராக்டர்களுக்கு மேல்.  சொந்த தேவைக்கு பிறகு வருமானம் ஈட்ட இயலாமல் வெறுமனே நிற்கிறது அந்த டிராக்டர்.   எட்டு லட்சம் முதலீடு முடங்கியது.  வட்டியும் கூடிக் கொண்டே செல்கிறது.
அரசியல்வாதிக்கு ஓட்டு வேண்டும்.  வருமானம் இல்லாமல் வட்டி கட்ட முடியாமல் இருக்கும் விவசாயி கண்ணுக்கு தெரிகின்றான்.  8% கூட்டு வட்டி தள்ளுபடியாகிறது.  அசல் அப்படியேதான் நிற்கிறது.
ஊடகங்கள் அலறுகிறது. வங்கியின் வாராக் கடனில் விவசாயக் கடன் இத்தனை சதவீதம்.  இலாபத்தில் வராக்கடன் ஓதுக்கீடு இத்தனை சதவீதம்.  இலாபம் குறைந்துவிட்டது என கூப்பாடு.

வங்கிகளின் தலைவர்கள் கூடினர். விவசாயிகளிடம் பறிமுதல் செய்வது என முடிவு அறிவிக்கப்படுகிறது. என்ன செய்வது விவசாயி மீண்டும் கடன்காரனாகிறான்.  இருக்கும் தங்கத்தையோ எதையோ விற்று மீட்கிறான் தன் மானத்தையும், டிராக்டரையும்.  முடியாதவன் தோற்றுப் போகிறான்.

இடைத்தரகர்கள், விற்பனை பிரதிநிதிகள்,  வங்கி மேலாளர்கள், பணத்தோடு பதவி உயர்வு பெற்று சென்று விட்டனர்.  வண்டி வாங்கியவன் கௌரவம் கொண்டான்.  எத்தனை நாட்களுக்கு............
தற்போது பறிமுதல் செய்வதற்கு இலக்கு.  தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு வங்கி கிளையிலும் 100 முதல் 150 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பறிமுதல் செய்ய ஆணை பிறப்பிக்கபட்டிருக்கிறது.  இவை அனைத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் நடவடிக்கை.  தனியார் வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் இதைதான் செய்கின்றன.

எட்டு லட்சத்திற்கு வாங்கிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்ட பின் மூன்று முதல் நான்கு லட்ச ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.  நாள்தோறும் செய்தி தாளை பாருங்கள் வங்கிகள் டிராக்டர்களை ஏலம் விடும் அறிவிப்பு வெளியாவதை. சமீபத்தில் வங்கியின் ஏல நடவடிக்கையை ஓர் ஆர்பாட்டம் மூலம் தடுத்து நிறுத்தின்ர்.  அது தற்காலிகமானது. எப்படியும் பணம் கட்டினால்தான் டிராக்டர் விடுவிக்கப்படும் அல்லது மீண்டும் விற்கப்படும். விற்பனைத் தொகை கடனில் கழிக்கப்பட்டது.   மீதி தொகைக்கு வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.   பாடுபட்டுழைத்த பணத்தை பறி கொடுத்தவன் நீதி மன்றம் ஏற வேண்டும்.  முடிவில் ஈடாக கொடுத்த நிலத்தை இழக்கிறான்.  உழவனோ ஓட்டாண்டியாகிறான்

கருத்துகள் இல்லை:

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...