அள்ள அள்ள குறையாதாம்
அட்சய திரிதியில்
தங்கம் வாங்கினால்
வாங்கி வந்தேன்
வசதிக்கு தக்க
வளர்ந்ததோ என்றால்…
இருந்த தங்கத்தில்
இழந்தேன் ஒருகல்
இருந்தாலும் காத்திருக்கிறேன்
வசதி இருந்தால்
வங்கி பெட்டகத்தில்
வைக்குமளவு வாங்கலாம்
காசில்லை என்றால்
ஒசியிலும் வாராது
எத்தனை திரிதியை
கடந்தாலும் வாராது
காசுள்ளவனுக்கே திரிதியை
இல்லாதவனுக்கு
கடன் வாங்கி திரிதியை
திரிதியை
கடன்காரன் ஆக்குமென்றால்
வாழ்நாள் முழுதும்
நீ கடன்காரனே
3 கருத்துகள்:
மிகச் சரியான கருத்து. நகை கடைகாரர்களும், ஜோதிடக்காரர்களும் காசு பார்க்க, வேண்டுமென்றே நம்மை கடனாளியாக்கி விடுகிறார்கள்.பெண்ணுக்கு புன்னகை இருக்க பொன்னகை எதற்கு?
வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி
''..வசதி இருந்தால்
வங்கி பெட்டகத்தில்
வைக்குமளவு வாங்கலாம்
காசில்லை என்றால்
ஒசியிலும் வாராது..''
வித்தியாசமாக உள்ளது. தொடருங்கள் பணி.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
கருத்துரையிடுக