விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, மார்ச் 28
விவசாயம் காப்போம்
காடுமேடு திருத்தி
கழனியா இருந்ததை
சூடுசொரணை இல்லாது
சூறையாடி விட்டு
வளர்ச்சி என்று
வாய்சவடால் விடுகிறான்
களர்நில மானவுடன்
கார்ப்பரேட்டு மறையுறான்
சீர்காழியில்
சிதைந்தன நிலங்கள்
சிலகோடி டாலர் ஈட்டி
இறால் பண்ணைகளாய்
இன்றவை தரிசாக - அல்ல
என்றென்றும் தரிசானது
ஏமாந்தது விவசாயியல்ல
எல்லோருமே
கமலையில் நீரிறைத்து
கழினியிலே சேடையோட்டி
களத்திலே நெல்நிறைத்த
காலமெங்கே போச்சு
கருங்கல் கட்டிடமா
கழனியெல்லாம் மாறுது
காசு கிடைக்கிறதென
கண்மூடிக் கொண்டதனால்
வேம்பு, புளியமரங்கள்
வீதியை அகலமாக்க
வீழ்த்தப் பட்டது
வெயிலோ அதிகரித்தது
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரிதான நெல்வகையை
அடுத்த தலைமுறைக்கு
அவரவர் பாதுகாக்க
மண்ணெல்லாம்
மலடாச்சு பூச்சுக்கொல்லியால்
என்னவெல்லாம் செய்யலாம்
நம் விவசாயம் காக்க
அ. வேல்முருகன்
செவ்வாய், மே 17
விவசாயமும் வங்கி கடனும்
கடனின்றி நாடே இயங்க முடியாதபோது. சாதாரண விவசாயி கடனின்றி வாழ முடியுமா? விவசாயிகள் பயிர் கடன், தங்க நகை கடன், உழுபடைக் கருவிகள் வாங்க கடன் என பல கடன்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பெறுகின்றனர். இதை தவிர்த்து கந்து வட்டிக்கு கடன் வாங்கி கந்தலாகி போவான் அது தனிக்கதை.
60000 கோடி தள்ளுபடி, ஆக பெரும்பான்மை விவசாயிகள் மகிழ்ந்தார்கள் ஆனால் என்ன நடந்த்து.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஓர் ஆண்டு காலம் தள்ளுபடி என வசூலை தள்ளிப் போட்டனர். 2010-11 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் குறைந்த்து 3000 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன விவசாயிகளிடமிருந்து.
டிராக்டர்கள், உழுபடை கருவியில் பிரதானம். ஆனால் இது நகரங்களில் உழுவதற்கு பயன்படாமல், மணல், செங்கல் கொண்டு செல்லவும், தண்ணீர் கொண்டு செல்லவும் பயன் படுத்தப்படுகிறது.
ஆனால் ஒரு விவசாயி எப்படி டிராக்டர் வாங்குகிறான் என்று கவனிக்க வேண்டும். முன்பெல்லாம் 10 ஏக்கர் நிலமுள்ள விவசாயி டிராக்டர் கடன் வாங்க வங்கியை அணுகலாம் என்றிருந்த்து. ஆனால் தற்போது 4 ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் வாங்கலாம் என மாற்றியமைத்தனர். யாருக்காக என்பது?.........
ஒரு கிராமத்தில் எத்தனை டிராக்டர் தேவை என்பது முக்கியம். ஆனால் டிராக்டர் கம்பெனிகளுக்கு ஒவ்வொரு விவசாயியும் டிராக்டர் வைத்திருக்க வேண்டும் என்பது கனவு.
கூட்டு திட்டம் டிராக்டர் கம்பெனிக்கு விற்பனை இலக்கு. வங்கி மேலாளருக்கு விவசாய கடன் இலக்கு. அதனால்தான் தேவையே இல்லாமல் ஒரு கிராமத்தில் 10 டிராக்டர்களுக்கு மேல். சொந்த தேவைக்கு பிறகு வருமானம் ஈட்ட இயலாமல் வெறுமனே நிற்கிறது அந்த டிராக்டர். எட்டு லட்சம் முதலீடு முடங்கியது. வட்டியும் கூடிக் கொண்டே செல்கிறது.
அரசியல்வாதிக்கு ஓட்டு வேண்டும். வருமானம் இல்லாமல் வட்டி கட்ட முடியாமல் இருக்கும் விவசாயி கண்ணுக்கு தெரிகின்றான். 8% கூட்டு வட்டி தள்ளுபடியாகிறது. அசல் அப்படியேதான் நிற்கிறது.
ஊடகங்கள் அலறுகிறது. வங்கியின் வாராக் கடனில் விவசாயக் கடன் இத்தனை சதவீதம். இலாபத்தில் வராக்கடன் ஓதுக்கீடு இத்தனை சதவீதம். இலாபம் குறைந்துவிட்டது என கூப்பாடு.
வங்கிகளின் தலைவர்கள் கூடினர். விவசாயிகளிடம் பறிமுதல் செய்வது என முடிவு அறிவிக்கப்படுகிறது. என்ன செய்வது விவசாயி மீண்டும் கடன்காரனாகிறான். இருக்கும் தங்கத்தையோ எதையோ விற்று மீட்கிறான் தன் மானத்தையும், டிராக்டரையும். முடியாதவன் தோற்றுப் போகிறான்.
இடைத்தரகர்கள், விற்பனை பிரதிநிதிகள், வங்கி மேலாளர்கள், பணத்தோடு பதவி உயர்வு பெற்று சென்று விட்டனர். வண்டி வாங்கியவன் கௌரவம் கொண்டான். எத்தனை நாட்களுக்கு............
தற்போது பறிமுதல் செய்வதற்கு இலக்கு. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு வங்கி கிளையிலும் 100 முதல் 150 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பறிமுதல் செய்ய ஆணை பிறப்பிக்கபட்டிருக்கிறது. இவை அனைத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் நடவடிக்கை. தனியார் வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் இதைதான் செய்கின்றன.
எட்டு லட்சத்திற்கு வாங்கிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்ட பின் மூன்று முதல் நான்கு லட்ச ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. நாள்தோறும் செய்தி தாளை பாருங்கள் வங்கிகள் டிராக்டர்களை ஏலம் விடும் அறிவிப்பு வெளியாவதை. சமீபத்தில் வங்கியின் ஏல நடவடிக்கையை ஓர் ஆர்பாட்டம் மூலம் தடுத்து நிறுத்தின்ர். அது தற்காலிகமானது. எப்படியும் பணம் கட்டினால்தான் டிராக்டர் விடுவிக்கப்படும் அல்லது மீண்டும் விற்கப்படும். விற்பனைத் தொகை கடனில் கழிக்கப்பட்டது. மீதி தொகைக்கு வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது. பாடுபட்டுழைத்த பணத்தை பறி கொடுத்தவன் நீதி மன்றம் ஏற வேண்டும். முடிவில் ஈடாக கொடுத்த நிலத்தை இழக்கிறான். உழவனோ ஓட்டாண்டியாகிறான்
திங்கள், மார்ச் 8
காவேரி
பாடுபட்டு உழைக்க கையிருக்கு,
ஏர்பூட்டி உழ மாடிருக்கு,
நாடு விட்டு பாய நதியிருக்கு,
நடுவிலே தடுக்க கர்நாடகமிருக்கு.
தாறுமாறாக பல கட்சிருக்கு,
தண்ணியால் பிரிந்து கிடக்கு,
ஊருக்கே கஞ்சி ஊத்தும்
உழுத வயிறோ காய்ந்திருக்கு.
வயிறு காய்ந்து,
வயல் எலி உண்ட போதும்,
பயிர் கருகி
பாசன நீரற்ற போதும்,
விளைந்த நெல்லோடு
வீதியில் நின்ற போதும்,
கலைந்தன கனவுகள்—
காப்பது அரசு அல்ல என்று.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இது அரசியல்தான்
தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...
-
ஊதிப் பெருக்கிய உலகப் பணக்காரனை உருட்டித் தள்ளியது ஹிண்டன்பர்க் ஆய்வு ஆய்வொரு குப்பையென அவர்கள் குதித்தே – இது இந்தியாவின் மீதான வளர்ச்சி...
-
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. குறள் 1304 வாடிய கொடிக்கு வாளி நிறைய நீருற்...
-
வேணுகோபலனுக்கும் இராகவேந்திரனுக்கும் பன்றிக் கறிப் படைத்திட பதைபதைத்தது கோவை கண்ணப்பன் நாயனாரானார் ஹரி என்கிற ராம் பிரகாஷ் நாயனாராவதை இந்துக...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
கொள்ளை நோய் நூறிலிருக்க மருத்துவ சேவகனுக்கு கைத்தட்டு ஆயிரத்திலிருக்கும்போது அல்லாவை வணங்குபவனால் அக்கம்பக்கம் தொற்றுதென அவ...