கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக ஏதாவது ஒரு தினத்தை எதற்காகவது கொண்டாட வேண்டுமென ஒதுக்க அதன்படி இன்றைய தினத்தை அன்னையர் தினமாக ஊடகங்கள் முதல் வியாபார நிறுவனங்கள் வரை கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் சொல்லுங்கள் எத்தனை பேர் அன்னையை மதிக்கின்றனர். சரி வேண்டாம் பெண்ணை மதிக்கின்றனர்.
ஒரு பட்டிமன்றம் தாயா, தாரமா. பட்டினத்தார் முதல் இன்றுவரை தாய் என்றே சொல்கின்றனர். அது என்ன தாரம்தானே தாயானாள். ஏன் பொண்டாட்டி தினம் என ஒன்று இல்லை. காதலர் தினம் இருக்கிறது. இந்த உலகத்தில் பொண்டாட்டி என்பது கீழ்தரம். காதலியும் அன்னையும் உயர்தரம்.
பெண் பெண்டாட்டியானால் மதிப்பில்லை என்றாகிறது. அன்னை என்றால் பாலூட்டி சீராட்டி என பட்டித்தாரும் பரிதவிக்கிறார். பரதேசியும் பரிதவிக்கின்றான்.
எத்தனை அன்னையர் முதியோர் இல்லத்தில், எத்தனை பெண்டாட்டிகள் கோர்ட் வாசலில்.
இது போன்ற தினங்கள் வியாபார நோக்கம் கொண்டது நாம் அதற்கு பலியாக வேண்டாம்
பெண் சக மனுஷி, ஆண் சக மனிதன், மனிதம் பேணுவோம். அனைவரையும் மதிப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக