செவ்வாய், அக்டோபர் 4
காதல் - நிலையானதா?
பாப்புனைந்து
பம்மாத்து செய்கிறாய்
பார்க்காமல் போனேனென்று
பழிச் சுமத்துகிறாய்
எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்காதென்பதும்
இணையாதென்பதும்
இயற்கை நியதி
நிறைகளை ஒதுக்கி விட்டு
குறைகளைப் பட்டியலிட்டு
கறைப் படுத்தவில்லையென
கண்ணீர் வடிக்கிறாய்
புலவன்
பொய்யில் நெய்யொழுகுது
பாவையின் நெஞ்சம்
கல்லென்று கதைத்திடுது
முற்றுப் பெற்றதை
சற்றும் பொருந்தாதை
பாகம் இரண்டென
திரைக்கதை எழுதுது
நினைவுகள்
நீந்திதான் செல்லும்
கடந்துச் சென்றால்தான்
கரையேற முடியும்
வாழ நினைப்பவளுக்கு
வாடி நிற்க முடியுமோ
தடைகளைத் தகர்த்தால்தான்
தடங்களை விட்டுச் செல்லலாம்
பிரபஞ்ச வெளியில்
கானக வாழ்க்கை
அவைகளுக்கானது
நான் – அவள் - அதுவல்ல
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இது அரசியல்தான்
தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
கொள்ளை நோய் நூறிலிருக்க மருத்துவ சேவகனுக்கு கைத்தட்டு ஆயிரத்திலிருக்கும்போது அல்லாவை வணங்குபவனால் அக்கம்பக்கம் தொற்றுதென அவ...
-
கடந்த ஞாயிறு அடர்ந்த முடிதிருத்த அகவை ஏழுகொண்ட அருணனை அழைத்துச் சென்றேன் அருகிலிருந்த அங்காடியில் வண்ண மீன்கள் காதல் பறவைகள...
-
வேணுகோபலனுக்கும் இராகவேந்திரனுக்கும் பன்றிக் கறிப் படைத்திட பதைபதைத்தது கோவை கண்ணப்பன் நாயனாரானார் ஹரி என்கிற ராம் பிரகாஷ் நாயனாராவதை இந்துக...
-
பிராமணர்கள் வசிக்கும் அடுக்ககத்தில் நானே சைவம் என்றுதான் குடி புகுந்தேன். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒருநாள் கூட அங்கே அசைவம் சமைத்ததில்லை. த...
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக