சனி, மார்ச் 14

போரும் பொய்யும்









இரண்டு நாளில்
இருக்குமிடம் தெரியாது
ஈரான் அழிக்கப்படும்

அமைதியை நிலைநாட்ட
இரசாயன ஆயுதங்கள்
அடியோடு ஒழிக்கப்படும்

ஆயுதங்களை
அடியோடு ஓழித்து விட்டோம்
அடிபணிந்து விடுவார்கள்

உச்சத் தலைமையை
ஒழித்து விட்டோம்
திக்குத் தெரியாதிருக்கிறார்கள்

ஹார்மோஸ் நீரிணையில்
அச்சமின்றி செல்ல
ஆப்ரகாம் லிங்கன் கப்பல் வழிகாட்டும்

நேட்டோ நாடுகள்
நேசக் கரம் நீட்டுவார்கள்
நிம்மதியாய் இருங்கள்

பொறுத்திருங்கள்
பொருளாதாரத் தடைகளால்
போர் மட்டுப் படுத்தப்படும்

ஏவுகணைகளை இடைமறித்தோம்
ஏகப்பட்ட இழப்புகள்
யாருக்கு?

15 நாட்கள் கடந்து விட்டன
பதிலடி தொடர்கிறது
இஸ்ரவேலர்களை இறைவன்
.........காப்பாற்றுவானா?


அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

இன்று போய் நாளை வா

பொருளாதார தடைகளினால் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டவர்கள் போரில் பொருத முடியாதென்றா எப்ஸ்டின் கோப்புகளுக்காக இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு என்னைத்...