வியாழன், ஏப்ரல் 16

அன்பெனப்படுவது....










ஆருயிரே என
அள்ளி அணைத்து
அழுந்ததொரு முத்தமிடுவதா?

தினம் தினம்
தளிர் மேனி காணாது
தவித்தேன் என்பதா?

ஆலிங்கனத்தில்
ஆழ்கடல் முத்தெடுக்க
அம் மேனி குளிர்ந்திருப்பதா?

இதயத்தை இயக்கும்
இனிய தேவதையென
விதந்து ஓதுவதா?

அன்பு – என்றும்
அலங்கார வார்த்தைகளை
அள்ளித் தெளிக்க கிடைப்பதா?

ஊரே எதிர்த்தாலும்
உதவிட நானிருக்கிறேனென,
ஓடி வருவது

அவசியப்படும் போது
ஆதரவு கரம் நீட்டுவது,
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது

கோபத்தின் உச்சியில்
குதறி எடுக்காமல்
மதிப்புடன் நடத்துவது

காதலும், ஈர்ப்பும்
கணப்பொழுதில் மாறுகின்ற
காலச்சூழலில் – மாறாதிருப்பது

நொடிப்பொழுது செயலல்ல,
நீண்ட நெடிய பயணத்தின்
நீடித்து நிலைத்துக் கொண்டிருப்பது

. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

ஊக்கம் நீயென்பதால்

  உறவான என்னவளே , ஊடுதல் ஏனடி ? சிறப்பான வாழ்விலே சித்தாந்தம் நீயடி . அறத்தின் நிழலிலே அன்றிலாய் வாழ்ந்திட , பறந்து வந்திடு பருவத்தி...