வெள்ளி, ஏப்ரல் 3

வரிக்கு மேல வரி.........















அச்சடிக்கும் இயந்திரத்தை
அரசாங்கம் வைத்துக் கொண்டு
அது ஏன்?
வரிக்கு மேல வரிகளை போடுகிறது

உழைத்துக் கிடைக்கும்
ஊதியத்திற்கு
உன்னிடம் கேட்பது
நேரடி வரியாம்

உண்டி வளர்க்க
உப்பு, புளி, மிளகாயோடு
உன் விருப்ப ஆடையணிய
மறைமுக வரியாம்

அலை அலையாய்
அகப்பட்டவனிடம் வாங்குவது
அரசாங்க விதியாம் – அந்த
கடவுளுக்கும் அதே கதியாம்

விலகிச் செல்ல
விழித்துக் கொண்டாலும்
விட்டில் பூச்சி நீ
விளங்கா அரசைக் கவனி

வசூலித்த வரியில்
வார்த்த சாலைக்கு
சுங்க வரியென (Toll)
கூசாமல் கேட்டிடும்

மகிழ்வூர்தி இலட்சமெனில்
பசுமை வரி, சாலை வரி
காப்பீடு, இதரச் செலவோடு
இருமடங்கு ஆகிடும்

பெட்ரோல், டீசலுக்கு
கலால் வரி – காரை
பேரிச்சம்பழத்திற்கு விற்றாலும்
சரக்கு சேவை வரி என்கிறான்

சேமிப்பின் வட்டிக்கு வரி
வசிக்கும் வீட்டிற்கு வரி
வழங்கும் மின்சாரத்திற்கு வரி
வளர்ப்பு பிராணிக்கும் வரி

சொத்து வாங்கினால்
பதிவு கட்டணம்
சொத்தை விற்றால்
இலாபத்திற்கு வரி கட்ட வேண்டும்

நிறுவனம் என்றால்
தொழில் வரியோடு
உரிமம், அனுமதி
சேவை வரியென நீளும்

காமதேனு நீ
வற்றாத மடியுனக்கு
வரிகள் கொட்டுமென
வாட்டுவது குடிமக்களை

அரசின்
அத்தனை வரிகளும்
அம்மக்களை கட்டுப்படுத்தவே
அதற்குதான் சட்டங்களே…!!!!


அ. வேல்முருகன்  







கருத்துகள் இல்லை:

உச்சநீதிக்கு -வாதம் -1

  படைத்தவனை பார்க்க அனுமதி வேண்டிட , பாராமுகமாய் இருந்ததால் பஞ்சாயத்து . இயல்புகளுக்கு முரணாக இறைவன் இருப்பதால் , இப் பெண்களை 18-...