சனி, ஏப்ரல் 25

சாதி










கண் கலந்து
காதலில் விழுந்து
கரம் பிடித்தேன்

ஒன்னு கலந்து
ஒரு பிள்ளையும் பெத்து
ஒத்திசைந்து வாழ்ந்திருந்தேன்

வார்த்தெடுத்த வார்த்தைகளின்
வர்ணஜாலத்தை
வஞ்சியவள் இரசித்திருக்க

பேச்சு வழக்கிலே
பேசிக் களிக்கையிலே
எதோவென்று சொன்னேன்

எங்க ஆளுங்க
இதுபோல பேச மாட்டாங்க”
எதார்த்தமாகச் சொன்னாள்

எனினும்
தரம் குறைந்தவர்கள் எனும்
தொனி தொக்கி நின்றதால்

வாடியது முகம்
ஆண்டாண்டு கால
அவச்சொல்லை மாற்றுவதெப்படி?

அந்தத் தெரு மக்களை
இந்தத் தெருவில் இருப்பவர்கள்
அப்படித்தான் அழைப்பார்களாம் ...

அப்படித்தான் ஒருநாள்
உறவுகளோடு
ஓர் ஊருக்குச் சென்றிருந்தேன்

குலம், கோத்திரத்தோடு
குடியிருப்பு எங்கே என
குணமாதான் கேட்டார்கள்

ஒரு சாதிதான் – ஆனா
கொள்வினை, கொடுப்பினை
அக்கூட்டத்தோடு இல்லையென்றனர்

நுண்ணிய அளவில்
மானுடத்தை பிரித்த
சமுகத்தை மாற்ற முடியுமா?

அ. வேல்முருகன்.

 

கருத்துகள் இல்லை:

சாதி

கண் கலந்து காதலில் விழுந்து கரம் பிடித்தேன் ஒன்னு கலந்து ஒரு பிள்ளையும் பெத்து ஒத்திசைந்து வாழ்ந்திருந்தேன் வார்த்தெடுத்த வார்த்தைகளின...