வாராக்கடன் தள்ளுபடியா?!!!!
மல்லையா, மெகுல் சோக்சி உள்ளிட்ட பல கடன்தாரர்களுக்கு ரூ.68000
கோடி தள்ளுபடியென தவறான தகவல்கள் ஊடகங்களின் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில் இது தள்ளுபடியல்ல.
இது ஒரு வங்கியின் கணக்கியல் நடைமுறை
தள்ளுபடி
என்றால்
வங்கியில் கடன் பெற்றோர் வாராக் கடன் காலத்திற்கு பின் ஒரு
தீர்வை (settlement) அணுகும் போது அளிக்கும் சலுகையே தள்ளுபடி. அதுபோல் எந்தவொரு மேற்கண்ட பெருமுதலாளிகளும் கடனை
அடைக்க இக்கால கட்டத்தில் முன் வரவில்லை. ஆக
இது தள்ளுபடியல்ல. பிறகு……………..
சொத்தின்
மதிப்பை குறைத்தல்
இங்கே சொத்து என்பது பணமாக கொடுத்த கடன் (Loan Advances).
இந்த சொத்து வினையாற்ற வேண்டும் அதாவது வட்டியை ஈட்ட வேண்டும். இல்லையெனில் இது வினையாற்ற
இயலாத சொத்து (Non Performing Asset) (NPA) என வகை மாறுபாடு செய்வர். அதன் பின் இதை
ஒடுக்கப்பட்ட சொத்து என அழைப்பர் (Stressed Assets). அதாவது தரமான (Standard Asset) சொத்து தரமற்ற சொத்தாக
(Substandard Asset) வகைப்படுத்துவர்.
வங்கி தான் கொடுத்த கடன், வாரா கடன் என வகைப்படுத்திய முதலாண்டில்
15% த்தை வினையாற்ற இயலா சொத்து (NPA Amount) என வகைப்படுத்திய நாளன்று உள்ள நிலுவைத்
தொகையில் கழிப்பர். அதாவது வினையாற்ற இயலாத சொத்தின் மதிப்பை குறைப்பர்.
எதற்காக
மதிப்பு குறைப்பு செய்யப்படுகிறது
இது வங்கியின் நடைமுறை.
இந்த தொகை அந்த ஆண்டின் இலாபத்தில் கழிக்கப்படும். ஒரு வியாபாரம் பல்வேறு காரணங்களால் நொடித்து போகிறது.
அதாவது அரசின் கொள்கை முடிவுகள் (சீனாவிலிருந்து இறக்குமதி), போட்டிகள் இன்னும் பல
காரணங்கள். அந்த வியாபாரம் அல்லது அந்த நிறுவனம்
திரும்பி எழ எவ்வளவு காலம் ஆகும் என்பதை கணிப்பது சற்று கடினம். அதனால் வாராக் கடனை மொத்தமாக கழிப்பதற்கு பதிலாக
நான்கு ஆண்டுகளில் கழிக்கின்றனர். அதாவது
முதலாண்டில் 15%
இரண்டாமாண்டில் 25%
மூன்றாமாண்டில் 40%
நான்காமாண்டில் முழுவதும்
அதாவது மொத்த வாராக்கடனையும் ஒரே நாளில் இலாபத்தில் கழித்தால்
வங்கி திவால் ஆனாது போல் ஒரு தோற்றம் ஏற்படும் அதை தவிர்க்கவே இதுபோன்றதொரு ஏற்பாடு
அல்லது நடைமுறை.
வட்டியும்
கடனும் என்னவாகும்
வினையாற்ற இயலா சொத்து என வகைப்படுத்திய நாளிலிருந்து கடனுக்கு
வட்டி கணக்கிடமாட்டார்கள். ஆனால் ஒப்பந்த முறைப்படி
வட்டி கணக்கிடுவார்கள். ஏனென்றால் வட்டி என்பது வருவாய். அசலே வாராதிருக்கும் போது வட்டி எப்படி வரும். எனவே வாராக் கடனுக்கு வட்டி கணக்கிட்டு வங்கி தன்
சொத்து மதிப்பை உயர்த்தக் கூடாது என்பது உலகலாவிய ஒரு மதிப்பீடு. அந்த வட்டி Unapplied
Interest என தனியாக கணக்கீடு செய்து வைப்பர். ஒருவர் தன் கடனை அடைக்க வரும்போது நாளது தேதி நிலுவையாக, வினையாற்ற இயலா சொத்து என வகைப்படுத்திய நாளிலிருந்த தொகை மற்றும் Unapplied
Interest கணக்கிடப்படாத வட்டி என இரண்டையும் கூட்டிதான் தெரிவிப்பர்.
உதாரணத்திற்கு
(தோராய மதிப்பு)
2015 ல் மல்லையாவின் கடன் அனைத்து வங்கிகளுக்கும் ரூ.6000
கோடி
2020 ல் மல்லையாவின் கடன் அனைத்து வங்கிகளுக்கும் ரூ.9000
கோடி
இங்கே கணக்கிடப்படாத வட்டி Unapplied Interest ரூ.3000 கோடி. இந்த கணக்கிடப்படாத வட்டி ஒவ்வொரு
கடனுக்கும் தீர்வு (settlement) ஏற்படும் வரை தொடரும்.
தீர்வு
ஏற்படுமா அப்படியெனில் எப்படி
1. Normal
Recovery
2. One
Time Settlement
3. RDDBFI
Act
4. SARFAESI
ACT
5. NCLT
சாதாரண
கடன் வசூல் (Normal Recovery)
கடன் பெற்றவர் நிலுவைத் தொகையை மட்டும் செலுத்தி கடனை முறைபடுத்தி
கொள்வார் இல்லையெனில் எவ்வித தள்ளுபடியும் பெறாமல் மொத்த கடனையும் செலுத்தி வெளியேறி
விடுவார்.
ஒரு
முறை தீர்வு (One Time Settlement)
தான் பெற்ற கடனை ஒரே முறையிலோ அல்லது ஒரு குறுகிய காலத்திலோ
மொத்தமாக செலுத்துவது. இது
Ø தானாக
முன்வந்து தீர்வு காண்பது
Ø அந்தந்த
வங்கிகள் அளிக்கும் திட்டத்தின் மூலம் தீர்வு காண்பது
Ø மத்திய
வங்கி (RBI) அறிவிக்கும் திட்டத்தின் மூலம் தீர்வு காண்பது
மேற்கண்ட வழிகளில் பெரு நிறுவனங்கள், குறுந்தொழில்கள் மற்றும்
தனி நபர்கள் சலுகை அதாவது தள்ளுபடி பெறுவர்.
வெகுசில நேரங்களில் அசல் நிலுவை தொகையில் 50% வரை தள்ளுபடி கிடைக்கலாம். குறித்த காலத்தில் கடனை செலுத்தவில்லையெனில் வங்கிகள்
தள்ளுபடியை திரும்ப பெற்று முழுத் தொகையும் வசூலிக்க சட்ட நடவடிக்கையை தொடருவர்.
வங்கிகள் மற்றும்
நிதி நிறுவனங்களின் கடன் நிலுவை வசூல் சட்டம் 1993 (RDDBFI Act 1993)
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்காக ஏற்படுத்தப்பட்டது கடன் வசூல் தீர்ப்பாயம்
எனப்படும் நிறுவனங்கள். தமிழ்நாட்டில் சென்னையில்
மூன்றும், கோவை மற்றும் மதுரையில் ஒன்றும் செயல்படுகிறது.
இந்த தீர்ப்பாயம் மூலம் இந்த நிறுவனம் அல்லது இன்னார் இவ்வளவு கடன் வட்டியுடன்
தரவேண்டும் என ஒரு தீர்பாணை வாங்கி வைத்துக் கொள்ளலாம். தற்போது ரூ.20 இலட்சத்திற்கு
மேலுள்ள கடன் நிலுவைக்கு இத் தீர்ப்பாயத்தை வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ அணுகலாம்.
இந்த தீர்ப்பாணையின் படி அடமான சொத்தை தீர்ப்பாயம் விற்று பணத்தை வங்கிகளுக்கு அளிக்கும். மீதமுள்ள தொகைக்கு கடன்தாரரின் மற்ற வில்லங்கமில்லாச்
சொத்தை தீர்ப்பாயத்தின் மூலம் இணைத்து (Attachment(ABJ) தீர்வு காணலாம். மேற்கண்ட தீர்ப்பாயத்தின் ஆணை 12 ஆண்டுகள் செல்லுபடியாகும்
பிணைக்காப்பு, நிதி
சொத்து, மறுசீரமைப்பு மற்றும் பிணைக்காப்பு செயலாக்கச் சட்டம் 2002 (SARFAESI Act
2002)
இந்த சட்டப்படி
கடன் பெற்ற ஒருவர் கடனை திருப்பிச் செலுத்தவில்லை
எனில், வங்கியே அடமான சொத்தை விற்று கடனை நேர் செய்து கொள்ளலாம். குறைந்தபட்ச கடன்
ரூ.100,000 மேல் இருக்க வேண்டும். வங்கியில்
அடமானமாக வைத்த விவசாய நிலத்தை வங்கி இச் சட்டத்தின் கீழ் விற்க இயலாது. ஆனால் கடன் வசூல் தீர்ப்பாயம் மூலம் விற்கலாம்.
தேசிய நிறுவன சட்ட
தீர்பாயம்
2012 ஆண்டிற்கு
பிறகு பெரு நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் பெருமளவில் வாராதிருக்க, அரசு இச்சட்டத்தை
2016 ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறைந்தபட்ச
கடன் ரூ.100,000 மேல் இருக்க வேண்டும். இந்த
ஊரடங்கு காலத்தில் இதை தளர்த்தி உள்ளதாக ஒரு செய்தி குறுந் தொழில்களை பாதுகாக்க என்பதற்காக.
இச் சட்டத்தின்
கீழ் ஒரு நிறுவனத்தை நொடித்த நிறுவனமாக அறிவித்து அந்நிறுவனத்தை கலைத்தோ, சொத்துக்களை
விற்றோ, வேறு ஒரு நிறுவனத்தோடு இணைத்தோ அதில் கிடைக்கும் பணத்தை அந் நிறுவத்திற்காக
கடன், பொருள் வழங்கியவர்கள், பணியாற்றிய தொழிலாளர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைகள்
ஆகியவற்றை கலைப்பு அதிகாரி வழங்குவார்.
உதாரணத்திற்கு
எஸ்ஸார்
ஸ்டீல் நிறுவனத்தை ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்திற்கு கலைப்பு அதிகாரி எவ்வாறு கைமாற்றினார்
என்பதை ஆராய்வோம். பல்வேறு நிறுவனங்கள், கடன் கொடுத்தோர் தங்களுக்கு வரவேண்டிய தொகையென
நிறுவன கலைப்பு அதிகாரியிடம் உரிமை கோரிய தொகை ரூ.82000 கோடி அவர் ஏற்றுக் கொண்டது
ரூ.69,192 கோடி ஆனால் நிறுவனம் கைமாறிய தொகை ரூ.42000 கோடி. இந்த ரூ,42000 கோடியை அவரே இறுதி செய்த ரூ.69192 கோடிக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் 60% கடன் திருப்பி அளிக்கப்படும். மீதத்
தொகை தள்ளுபடி செய்யப்படும்.
'Total debt payable to ‘Financial Creditors’ &
‘Operational Creditors’
1. Financial Creditors Rs. 4,94,73,00,00,000/-
2. Operational Creditors Rs. 1,97,19,20,90,980/-
Total Rs.
6,91,92,20,90,980/-
Against Rs.
6,91,92,20,90,980/-,
Arcelor Mittal Ltd offered Rs. 4,20,00,00,000/-.
Therefore %age wise, the amount will be –
4,20,00,00,00,000 * 100 = 60.7% (approx.)
இந்த கலைப்பு நடைமுறை 6 அல்லது 9 மாதங்களுக்குள் முடிக்க
சட்டம் சொல்கிறது. ஆனால் குறைந்தது இரண்டு
ஆண்டுகள் ஆகிறது.
இந்த தள்ளுபடி பெருமுதலாளிகளுக்கு மட்டுமா இதர கடன்தாரர்களுக்குமா
இந்த மதிப்பு குறைப்பு என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும்
அனைத்து வகையான கடன்களுக்கு பொருந்தும்.
அடமான கடன், கல்வி கடன், வாகன கடன், சிறு வணிக கடன், பெரு நிறுவனங்களுக்கான
கடன். ஆக எந்த வகையான கடன் என்றாலும் இந்த நடைமுறையை பின்பற்றிதான் ஆக வேண்டும்.
என்ன, ஒரு பெரு முதலாளிக்கு கொடுக்கும் கடனை ஒரு லட்சம் நபர்களுக்கு விவசாய கடனாக பகிர்ந்தளிக்க
முடியும். ஆனால் ஒரு நிறுவனம் 1000 பேருக்கு
வேலை வாய்ப்பை அளிக்கமுடியும்.
கடன்
வசூலானல் நிலை என்ன?
கடன் வாங்கிய ஒருவர் தொடர்ந்து 4 வருடங்கள் செலுத்தவில்லை
என்றால் அவருடைய கடன் முழுவதும் வங்கியின் விதிகளின் Writeoff செய்திருப்பர். அவர் தன்னுடைய கடனை தீர்க்க செலுத்தும் தொகை தற்போது
இலாபத்தில் காண்பிக்கப்படும். கடந்த நான்கு
ஆண்டுகளில் நட்டத்தில் காண்பிக்கப்பட்ட தொகை தற்போது இலாபத்தில் காண்பிக்கப் படுகிறது. அவ்வளவுதான்
வசூல்
தொகை எவ்வாறு கணிக்கப்படுகிறது
வங்கிக்கு வரவேண்டிய தொகை நாளது தேதி வரையான வட்டியுடன் கடன்
வசூலிப்பது என்பதாகும். ஏனெனில் வங்கி பொது
மக்களிடம் பெறும் நிலையான வைப்புத் தொகைக்கு (Fixed Deposit) வட்டி வழங்க இயலாது என சொல்ல இயலாது அவ்வங்கி நொடிந்து போகும் வரை.
கடனுக்கு தீர்வு ஏற்படும் நேரத்தில்தான் பேரம் ஆரம்பிக்கப்படுகிறது. வங்கி நாளது தேதிவரையான
நிலுவைத் தொகையை கணக்கில் கொள்ளும் மற்றும் அடமான சொத்துக்களின் மதிப்பையும் கணக்கில்
கொள்ளும்.
உதாரணம்
நிலை ஒன்று
கடன் ரூ.6000
கோடி
கணக்கிடப்படாத வட்டி
ரூ.3000 கோடி
மொத்தம் ரூ.9000
கோடி
சொத்தின் மதிப்பு ரூ.15000
கோடி
இந்த சூழலில் தள்ளுபடி வழங்க வாய்ப்பு மிக குறைவு ரூ.
9000 கோடி வாங்க வங்கி நினைக்கும். அசாதாரண சூழலில் கணக்கிடப்படாத வட்டியில் ஏதாவது
தள்ளுபடி வழங்கலாம்
உதாரணம்
நிலை இரண்டு
கடன் ரூ.6000
கோடி
கணக்கிடப்படாத வட்டி
ரூ.3000 கோடி
மொத்தம் ரூ.9000
கோடி
சொத்தின் மதிப்பு ரூ.5000
கோடி
இங்கேயும் வங்கி மொத்த கடனை வசூலிக்க நினைக்கும் குறைந்தது
அசலை வசூலிக்க நினைக்கும். ஆனால் இந்த சூழலில்
கடன் பெற்ற நிறுவனம் தள்ளுபடி கோரும். சொத்து மதிப்பிற்கு குறைவாக கடன் தீர்வு ஏற்படுவது மிக கடினம்.
ஆக ரூ68000 கோடி தள்ளுபடியல்ல அதுவொரு வங்கியியல் நடைமுறை.
ஆயினும். கடன் தொகை அளவுக்கு அடமானச் சொத்து இல்லையெனில் தள்ளுபடிகள் சாத்தியமே.
ஏதேனும் விளக்கம் வேண்டுமெனில் கேள்விகள் எழுப்பவும்
3 கருத்துகள்:
சரி விரைவில் ஏலத்திற்கு வரும்போது, நீங்கள் எடுக்குறீர்களா...? நான் எடுக்கட்டுமா...? ஹா... ஹா...
இந்த முறை உங்களுக்காக விட்டுவிடுகிறேன் திண்டுக்கல் தனபாலன்
ஹா... ஹா... நன்றி தலைவரே...
கருத்துரையிடுக