தீர்க்கமான கேள்வி
தீர்க்க வேண்டியதுதானே
தீர்த்த கோமியத்தாலே
வேதனை தீருமென்றால்
விஷத்தை அருந்த - உன்
பிள்ளைகள் காத்திருக்கையில்
எங்கே சென்றாய்
என் கடவுளே
ஏன் கதவடைத்தாய்
எழுப்பியவன் நீதிபதி
எனினும் - ஆண்டவனிடம்
அடிபணிந்து ஆக வேண்டுமோ
அரங்கன்
அவதாரமெடுக்கலாம்
அதுதான் இதுவென்று கதைக்காது
அரன்
அரம்பையோடா - அல்ல
மயானத்தில்லா
மாயவனை
மோகினி வடிவடுக்க சொல்லி
புணர சென்றிருக்கிறான்
ஏனா? !! வந்த மருத்துவனை
வாயிலேயே திருப்பியவனை
எப்படிச் சொல்ல
சொர்க்க வாசல் திறக்குமென
சோம்பி கிடக்காதே
சோறு தண்ணிக்கு வழியில்லை
"தெய்வத்தால் ஆகாதெனினும்"
தீர்த்துச் சொன்ன
திருவள்ளுவன் வழியில்
முயற்சி செய் மானுடமே
மர்கண்டேயேனாக வாழவல்ல
கொத்துக் கொத்தாய் சாகாதிருக்க
1 கருத்து:
இன்னும் தேடினால் அளவில்லாதது கிடைக்க வாய்ப்புள்ள நேரமிது...
கருத்துரையிடுக