வகைவகையாக
வானில் வந்த
போர் விமானங்களை
காணவில்லை
கண்டம் விட்டு
கண்டம் பாயும்
ஏவுகணைகளையும்
காணவில்லை
அங்கே அணுகுண்டு
இங்கே அணுகுண்டு
எங்கே இவர்கள்
காணவில்லை
ஆயுத பேரங்கள்
மேலாதிக்க கனவுகள்
வல்லரசு தேசங்கள்
காணவில்லை
காண்காணித்து
துல்லிய தாக்குதல் நடத்தியவர்கள்
கோரோனா வந்தவுடன்
காணவில்லை
ஆயுதங்களால்
அற்புத மரணமளித்தவர்கள்
கொத்து கொத்தாக
காணவில்லை
1 கருத்து:
இது தான் என் பதிவில் சொன்னது...
இரண்டாவது முறை சொன்ன விதியை வகுத்தவன் யார்...?
கருத்துரையிடுக