அணிவகுத்து நின்றன
ஐக்கிய நாடுகள்
ஐயம் கொண்டேன்
எதிரி யாரென்று
எதிரி போர் பிரகடணத்தை
எல்லோருக்கும் அறிவித்து
மாதங்கள் ஐந்து கடந்துவிட்டன
மரணங்கள் 90000 கடந்தன
வல்லரசுகள்
வேடிக்கை பார்த்தன
ஊரடங்கென ஊளையிட்டனர்
உடனே திரும்ப பெற்றன
வெற்றி மட்டும் கிட்டவில்லை
கொத்துக் கொத்தாய் மரணங்கள்
விதிர்த்து நிற்கின்றன வல்லரசுகள்
மூன்றாம் உலகம் கைத்தட்டுகிறது
எதிரிக்கு முன்னே நிறுத்த
பீரங்கி கவசமல்ல
முக கவசம் தட்டுப்பாடு – அய்யோ
மூச்சிறைக்கிறதே
வெடிமருந்துகளென்றால்
வேண்டுமளவு தயாரிப்போம்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
சந்தையில்லை – இருப்புமில்லை
இந்தியா தரவேண்டும்
இல்லையெனில் என்கிறான்
தடைகளை நீக்குகிறோம்
தயாளமாயிரு சீனாவே
என்கிறான்
ஆங்காங்கு நிலைகொண்டு
அகிலத்தை அச்சுறுத்தியவர்கள்
கை கூப்புகிறார்கள்
கொரோனோ விலகென்று
அணு ஆயுதங்கள்- அபத்தம்
உதார் விடுவதற்கு மட்டுமே
ஒன்றுக்கும் உபயோகமில்லை
எனவே வீட்டுக்குள் முடங்கு
பட்டினிச் சாவு – பரவாயில்லை
அடுத்தவேளை உணவு
ஆகட்டும் பார்க்கலாம்
அகிலத் தலைவன் - ட்ரெம்ப்
காசு இல்லையெனில்
கதவடைக்கப்படும்
காப்பீடு இல்லையெனில்
காலனை சந்திக்க வேண்டும்
காப்பீடும் கதவடைத்ததே
சேமிப்பும் கரைந்ததே
காலனிடமிருந்து காப்பாற்ற
மதிப்புகு தேசத்திற்கோ வழியில்லை
லாபம் மட்டுமே குறியென்பதால்
பாவப்பட்ட மக்களை காக்க
பரமபிதாவும் வரவில்லை
பாராள்பவரும் வரவில்லை
3 கருத்துகள்:
குணப்படுத்துகிறேன் என்றவரெல்லாம் உயிரைக்காக்க மருத்துவமனைக்கு ஓட்டம்.
உண்மைதான் மணியன்
விரிந்த பார்வை கொண்ட கவிதை
வாழ்த்துகள்
கருத்துரையிடுக